கல்யாணத்தை நிறுத்திய கார்த்திக்.. ரெஜிஸ்டர் கொடுத்த அதிர்ச்சி.. கார்த்திகை தீபம்!
சென்னை: சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு மருதுவுடன் திருமணத்தை நடத்துவதற்காக
ரெஜிஸ்டர் ஆபீஸில் இருக்கிறார். மேலும், கார்த்திக் இந்த விஷயம் தெரிந்து கல்யாணத்தை நடத்துவிடக்கூடாது என்பதற்காக பிரியாவிடம் சொல்ல, பிரியா கார்த்தியை லிப்டில் அடைத்து வைத்து வைத்து இருக்கிறாள். ஆனால், கார்த்தி மயில்வாகனத்திற்கு போன் செய்து, ரேவதியை கோவில் மற்றும் ரெஜிஸ்டர் ஆபிசில் தேடி சொல்கிறார். மயில்வாகனம் அவர்கள் நான்கு பேரும் ரெஜிஸ்டர் ஆபிசில் தான் இருக்கிறார்தகள் என்கிற விஷயத்தை சொல்கிறார். இதையடுத்து கார்த்திக், கல்யாணத்தை நிறுத்த மின்வாரியத்திற்கு போன் செய்து, கரண்ட் கட் செய்ய சொல்ல இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: ரிஜிஸ்டர் ஆபீஸில் கரண்ட் கட்டாகி விட ரெஜிஸ்டர் இப்போதைக்கு கல்யாணத்தை செய்ய முடியாது இன்னும் 10 நிமிடத்தில் கரண்ட் வந்ததும் கல்யாணத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்கிறார். இதனால் சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைந்து, மருதுவிடம் இது எல்லாம் அந்த கார்த்தியோட வேலையா இருக்குமோ என்கிற சந்தேகம் எனக்கு இருக்கு, இதனால், இன்னைக்கு எப்படியாவது கல்யாணத்தை முடிச்சாகணும் என ஜெனரேட்டருக்கு ஏற்பாடு செய்ய சொல்கிறாள். மறுபக்கம் கார்த்திக் லிப்ட் மாட்டிக் கொண்டிருக்க பிரியா மற்றும் இளையராஜா அவனை வெளியே எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்கின்றனர். இங்கே வீட்டில் விஷயம் அறிந்து கார்த்திக் மற்றும் ரேவதிக்கு திருமணமான புகைப்படம், மேரேஜ் சர்டிபிகேட், ரேவதிக்கு பழைய நினைவுகள் மறந்த மெடிக்கல் ரிப்போர்ட் ஆகியவற்றை எடுத்து கார்த்திக்கு அனுப்பி வைக்கின்றனர்.
கல்யாணத்தை நிறுத்திய கார்த்தி: ரிஜிஸ்டர் ஆபிசில் மருது, இன்னை கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என்பதால், நானே ஜெனரேட்டரை கொண்டு வந்து விட்டேன். இப்போது எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என சொல்கிறார். இதையடுத்து அதிகாரி, இருவரின் ஆதரங்களையும் வாங்கி பார்த்துவிட்டு இருவரிடமும் சம்மதம் கேட்க, ரேவதி தயக்கத்துடன் திருமணத்திற்கு சம்மதம் என்கிறார். இந்த நேரத்தில் லிப்டில் மாட்டிக்கொண்டு இருக்கும் கார்த்திக், ரெஜிஸ்டருக்கு போன் செய்து, டாக்குமெண்ட்களை அனுப்பி வைத்து ரேவதி என்னுடைய மனைவி, சட்டபூர்வமா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி இருக்கு. இப்போது ரேவதி கடந்த இரண்டு வருடத்தில் நடந்த எல்லா விஷயத்தையும் மறந்துவிட்டார். நீங்க இப்போ ரேவதிக்கு கல்யாணம் செய்து வைத்தால் பெரிய பிரச்சனையாகும் என்று சொல்ல ரெஜிஸ்டர் இந்த கல்யாணம் நடக்காது என அதிர்ச்சி கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications