ரேவதிக்கு தாலி கட்டியே ஆகணும்.. சாமி அருளில் ராஜா சேதுபதி உத்தரவு.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரி முதல் பத்திரிக்கையை ராஜா சேதுபதிக்கு கொடுக்கிறாள். பத்திரிகையை பார்த்த கார்த்திக், கல்யாண பத்திரிகையில் மாப்பிள்ளையின் பெயராக என்னுடைய பெயர்தான் இருக்கு, தாதாவிற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்து இருக்கீங்க ரொம்ப சந்தோஷம் என்கிறார். இதனால், ஆத்திரப்பட்ட சாமுண்டீஸ்வரி, உனக்கும் ரேவதிக்கும் கல்யாணம் நடக்கும் என்ற கனவில் கூட நினைக்காதே என்று சொல்கிறாள். அது மட்டுமில்ல இந்த கும்பாபிஷேகமும் நடக்காது, அதே கோவில் முன்னாடி உன் தாதா சாக வேண்டும் என்று சொல்ல, கார்த்திக் கார்த்திக், கல்யாணத்தையும் கும்பாபிஷேகத்தையும் நடத்தி காட்டுகிறேன் என சவால் விடுகிறான்.

கார்த்திகை தீபம்: பின் வீட்டிற்கு வரும் சாமுண்டீஸ்வரி இந்த விஷயத்தை சந்திரகலாவிடம் கூறி மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்க, அதை கேட்ட ராஜராஜன், "எதற்காக அப்பாவை நேரில் சந்தித்து பத்திரிக்கை கொடுத்த? இது உனக்கே நியாயமாக தெரியுதா? ரேவதிக்கும் கார்த்திக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. அப்படி இருக்கும்போது மீண்டும் கல்யாணம் நடத்தலாமா? அதற்கான பத்திரிகையை எடுத்துக்கொண்டு போய் நீ கொடுத்ததே தவறு. ஏன் இப்படிச் செய்தே? என்று கடும் கோபத்தில் கேட்கிறார். அதற்கு சாமுண்டீஸ்வரி, என்னை ஏமாற்றித்தான் கார்த்திக் இந்த வீட்டின் மருமகனாக வந்தான். அவனை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். மருக்கும் ரேவதிக்கும் தான் இந்த கல்யாணம் நடக்கும் என்கிறாள்.
நடக்கப்போவது என்ன: இதைத்தொடர்ந்து ராஜராஜன், கார்த்திக்கிற்கு போன் செய்து அங்கு என்ன நடந்தது என்று விசாரிக்கிறார். அப்போது கார்த்திக், ராஜா சேதுபதி கோவில் கும்பாபிஷேகம் 90 நாட்களுக்குள் நடக்கவில்லை என்றால் கோவில் முன்பே உயிரை விடுவேன் என்று சபதம் எடுத்துள்ளார் என்ற விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு ராஜராஜன் மிகவும் வருத்தப்படுகிறார். மேலும், நம்ம குடும்பம் இப்படி பிரிந்து இருப்பதற்கு காரணம் சாமுண்டீஸ்வரியின் வறட்டு கௌரவம்தான் என்று கோபப்படுகிறார். இதன் பின்னர் வீட்டில் ராஜா சேதுபதிக்கு சாமி அருள் வந்தது போல பேசுகிறார். கும்பாபிஷேகம் நடக்கும் நாளிலேயே நீ ரேவதியின் கழுத்தில் தாலி கட்ட வேண்டும். அவள்தான் இந்த வீட்டின் மருமகளாக வேண்டும் சொல்கிறார். இப்படியான பரபரப்பான சூழ்நிலையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications