ராஜா சேதுபதி உளறிய உண்மை.. கார்த்திக் போட்ட ஷாக்கில் கலங்கிய சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், ராஜா சேதுபதியின் வருகையை எதிர்பார்க்காத சாமுண்டீஸ்வரி, கல்யாணப் பத்திரிகையை அவரிடம் கொடுக்கிறார். அதை பார்த்த கார்த்திக், "கொடுக்க வேண்டிய இடத்தில் சரியாக கொடுத்திருக்கீங்க" என கூறுகிறான். மேலும், "கல்யாணப் பத்திரிகையில் மாப்பிள்ளையின் பெயராக என்னுடைய பெயர்தான் இருக்கிறது" என்று சொல்லி சாமுண்டீஸ்வரிக்கு ஷாக் கொடுக்கிறான். இதைக் கேட்ட சாமுண்டீஸ்வரி, "பெயர் மட்டும் தான் உன் பெயர். ஆனால் திட்டமிட்டபடி மருதுவுடன் தான் கல்யாணம் நடக்கும்" என சவால் விடுகிறாள். அதற்கு பதிலாக கார்த்திக்கும், "எனக்கு ரேவதியுடன் தான் திருமணம் நடக்கும்" என்று உறுதியாக கூறுகிறான்.
கார்த்திகை தீபம்: பின்னர் ராஜா சேதுபதி, இந்த சாமுண்டீஸ்வரி இன்னும் திருந்தவே இல்லை. என் பேத்திகளுடன் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்தால், இப்படி செய்கிறாள் என வருத்தப்படுகிறார். உடனே கார்த்திக், "பேத்திகளை பார்க்க வேண்டுமா? நான் ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறி மயில்வாகனத்திற்கு போன் செய்து, தாத்தா வந்திருப்பதையும், பேத்திகளை பார்க்க ஆசைப்படுவதாகவும் சொல்கிறான். இந்த விஷயத்தை வீட்டில் சொல்ல, அனைவரும் ரேவதியை வைத்து சாமுண்டீஸ்வரியிடம் அனுமதி கேட்கச் சொல்கிறார்கள். இதனால் ரேவதி, சாமுண்டீஸ்வரியிடம் தாத்தாவை பார்க்க அனுமதி கேட்கிறாள். முதலில் மறுக்கும் சாமுண்டீஸ்வரி, ஒரு கட்டத்தில் மறுக்க முடியாமல் சம்மதம் தெரிவிக்கிறாள்.

உளறிய பேரன்: இதனால் ஆத்திரமடையும் சந்திரகலா, இப்போது எதற்காக அங்கே போக அனுமதி கொடுத்தீர்கள்? என்று கேட்கிறாள். அதற்கு சாமுண்டீஸ்வரி, "இந்த நேரத்தில் ரேவதியை அங்கே போகக்கூடாது என்று சொன்னால் அவளுக்கு சந்தேகம் வரும். மேலும், கார்த்தி பற்றிய விஷயங்கள் ஞாபகம் வரலாம். அது தேவையில்லாத பிரச்சனை என்று கூறுகிறாள். பிறகு அனைவரும் வீட்டிற்கு வந்து தாத்தாவை பார்த்து மகிழ்ச்சியடைகின்றனர். அப்போது அங்கே கார்த்தியும் இருக்க, ரேவதி "இவர் ஏன் இங்கே இருக்கிறார்?" என்று கேட்கிறாள். அதற்கு ராஜா சேதுபதி, "அவன் என் பேரன் தானே!" என்று உண்மையை உளறிவிட, பரமேஸ்வரி பாட்டி நிலைமையை சமாளிக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு சந்தோஷமாக பேசிக்கொள்கின்றனர். இதைப் பார்த்து கார்த்திக் மகிழ்ச்சியடைகிறான். இப்படியான பரபரப்பான திருப்பங்களுடன் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது என்பதை அறிய, கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications