ரேவதி மனதில் கார்த்தியா? ஏலத்தில் நேருக்கு நேர் மோதும் கார்த்திக், மருது.. யார் ஜெயிப்பார்?

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றை எபிசோடில், சாமுண்டீஸ்வரியின் மகள் ராஜா சேதுபதி வீட்டுக்கு வருகின்றனர். அங்கு கார்த்திக் வருவதை பார்த்த ரேவதி, இவர் எதற்கு இங்கே வந்தார் என்று கேட்க,
அதற்கு ராஜா சேதுபதி, "அவன் என் பேரன் தானே!" என்று உண்மையை உளறிவிட, பரமேஸ்வரி பாட்டி கார்த்திகை படிக்க வைத்ததே உங்க தாத்தா தான், அதனால் தான் இவரை பேரன் என சொல்கிறார் என்று சொல்லி, நிலைமையை சமாளிக்கிறார். அதனைத் தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு சந்தோஷமாக பேசிக்கொள்கின்றனர். இதைப் பார்த்து கார்த்திக் மகிழ்ச்சியடைகிறான்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், பேத்தியையும் மகனும் பார்த்த ராஜா சேதுபதி இதற்கு எல்லாம் காரணம் என் பேரன் நீ தான் என கார்த்திகை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார். இதையடுத்து கார்த்திக் மற்றும் ராஜா சேதுபதி என இருவரும் ஜோதிடரை சந்தித்து கும்பாபிஷேகத்திற்கு நாள் குறிக்கின்றனர். இதை மறைந்திருந்து பார்த்த முத்துவேல் மற்றும் சிவனாண்டி இந்த கும்பாபிஷேகம் எப்படி நடக்குதுன்னு பார்க்கிறோம் என சதி திட்டம் தீட்ட தயாராகின்றனர்.

zee tamil Karthigai Deepam Serial

கார்த்திகை காதலிப்பியா: வீட்டில் ரேவதி ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை பார்த்த ரோகிணி என்ன என்று கேட்கிறாள். மேலும், எப்படி கார்த்திக் தாதா வீட்டுக்கு எப்படி வந்தாரு என்று யோசிக்கிறியா என்று கேட்க, ரேவதி ஆமாம் அக்கா, அவர் அங்க வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று சொல்கிறாள். இதையடுத்து ரோகிணி, கார்த்திக் உண்மையிலேயே தாதா ராஜா சேதுபதியோட பேரனா இருந்தா அவரை நீ காதலிப்பியா, இந்த கல்யாணத்திற்கு சம்மதித்து இருப்பியா என கேட்க ரேவதி என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்து நிற்கிறாள. இருவரும் பேசிக்கொண்டு இருப்பதை கேட்ட, சாமுண்டீஸ்வரி, ரோகினியை திட்டி தேவையில்லாத விஷயத்தை பேசாதே என சொல்லி அங்கிருந்து அனுப்புகிறாள்.

ஏலத்தில் நடக்கப்போவது என்ன: பிறகு கோவிலில் சாமி புடவைகள் ஏலத்திற்கு வர அந்த புடவையில் தான் ரேவதி நலங்கு பங்க்ஷன் நடத்த வேண்டும் என சொல்லி சாமுண்டீஸ்வரி மருதுவை அனுப்பி புடவையை ஏலம் எடுத்து வரச் சொல்கிறாள். தாத்தாவின் உத்தரவின் பேரில் கார்த்தியும் இதே ஏலத்திற்கு வருகிறான். மருது மற்றும் கார்த்திக் என இருவருக்கும் இடையே போட்டி உருவாக இறுதியில் ஏலத்தில் வெல்லப்போவது யார் என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X