கார்த்திக்கை சிக்க வைக்க சந்திரகலாவின் பிளான்.. அம்மன் தாலியுடன் தப்பிய ரவுடிகள்..கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் கோவிலில் சாமி புடவைகள் ஏலத்திற்கு வர அந்த புடவையில் தான் ரேவதி நலங்கு பங்க்ஷன் நடத்த வேண்டும் என சொல்லி சாமுண்டீஸ்வரி மருதுவை அனுப்பி புடவையை ஏலம் எடுத்து வரச்சொல்கிறாள். தாத்தாவின் உத்தரவின் பேரில் கார்த்தியும் இதே ஏலத்திற்கு வருகிறான். மருது மற்றும் கார்த்திக் என இருவருக்கும் இடையே போட்டி உருவாகி ஆயிரத்தில் ஆரம்பித்த ஏலம், ஒரு லட்சம் ரூபாய் வரை செல்கிறது.
கார்த்திக் மற்றும் மருது என இருவரும் அதிகத் தொகைக்கு கேட்டுக் கொண்டே செல்ல
கோவில் நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி, இதை முடிவுக்கு கொண்டு வர பூ போட்டு பார்க்க கோவில் நிர்வாகம் முடிவெடுக்கிறது. இறுதியாக கார்த்திக் தான் ஏலத்தில் எடுக்க வேண்டும் என முடிவு வர கார்த்திக் அம்மன் புடவையை ஏலத்தில் எடுத்து அதை ரேவதிக்கு பரிசாக கொடுக்கிறான். ரேவதி எனக்காக ஏன் இதெல்லாம் பண்றீங்க என்று கேட்க கார்த்திக் நேரம் வரும்போது அதற்கு பதில் சொல்வதாக தெரிவிக்கிறான்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி, சந்திரகலா ஆகியோர் கார்த்திக் ரேவதி நிச்சயதார்த்தத்திற்கு வந்தால் சுட்டுக் கொன்று விடுவேன் என கோபப்படுகிறாள். அப்போது சந்திரகலா, அக்கா அமைதியா இரு, நீ ரேவதிக்கு நலங்குவைப்பதற்கான ஏற்பாட்டை பாருக்கா, அந்த கார்த்திக்கிற்கு நான் இங்கே வர முடியாத படி வேறு ஒரு பிரச்சனை செய்கிறேன் என சொல்லும் சந்திரா, சிவனாண்டிக்கு போன் செய்து கோவிலில் அம்மன் கழுத்தில் இருக்கும் தாலியை திருட சொல்கிறாள்.
அம்மன் தாலி திருடுபோனது: இதையடுத்து, சிவனாண்டி மற்றும் முத்துவேல் இரவு நேரத்தில் ரவுடிகள் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் இருக்கும் தாலியை திருடுகின்றனர். இந்த நேரத்தில், வீட்டில் தாத்தா ராஜா சேதுபதி ஏதோ கெட்ட கனவு கண்டு எழுந்து, கார்த்தியிடம் கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று சொல்ல கார்த்திக் இந்த நேரத்தில் எதுக்கு தாத்தா காலையில் போகலாம் என சொல்கிறான். ஆனால், ராஜா சேதுபதி இல்ல, கோவிலில் ஏதோ தப்பா நடக்கபோகுது, அதை என்னனு பாக்கணும் என்று சொல்ல இருவரும் காரில் கோவிலுக்கு வருகின்றனர். அம்மன் தாலியை திருடிய முத்துவேல், சிவனாண்டி மற்றும் ரவுடிகள், கார்த்தியின் வண்டியை பார்த்து ஓடி ஒளிகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications