ரேவதி மனதில் தடுமாற்றம்.. காத்திருக்கும் அதிர்ச்சி என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: சிவனாண்டி மற்றும் முத்துவேல் இரவு நேரத்தில் ரவுடிகள் கோவிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் இருக்கும் தாலியை திருடுகின்றனர். இந்த நேரத்தில், வீட்டில் தாத்தா ராஜா சேதுபதி ஏதோ கெட்ட கனவு கண்டு எழுந்து, கார்த்தியிடம் கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று சொல்ல கார்த்திக் இந்த நேரத்தில் எதுக்கு தாத்தா காலையில் போகலாம் என சொல்கிறான். ஆனால், ராஜா சேதுபதி இல்ல, கோவிலில் ஏதோ தப்பா நடக்கபோகுது, அதை என்னனு பாக்கணும் என்று சொல்ல கார்த்திக் நான் சென்று பார்த்து வருகிறேன் என காரில் கோவிலுக்கு வருகின்றனர். அம்மன் தாலியை திருடிய முத்துவேல், சிவனாண்டி மற்றும் ரவுடிகள், கார்த்தியின் வண்டியை பார்த்து ஓடி ஒளிகின்றனர்.

கார்த்திகை தீபம்: சிவனாண்டி முத்துவேல் இருவரும் அம்மன் தாலியை பார்த்து பிரம்மித்து போய், அந்த தாலியை திரும்ப திரும்ப பார்த்து வருகின்றனர். நகையை திருடியவர்கள் அதை கொண்டு போய் சாமுண்டீஸ்வரி வீட்டில் சந்திரகலாவிடம் கொடுக்க இது ரேவதி ரூமில் இருந்தால் தான் யாரும் தேட மாட்டார்கள் என சொல்லி அந்த ரூமுக்குள் மறைத்து வைக்கிறார்.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:

ரேவதி மனதில் தடுமாற்றம்: மற்றொரு மக்கள் கோவிலுக்கு வந்து பார்த்த கார்த்திக் அங்கு யாரும் இல்லாததால், வீட்டுக்கு வந்து ராஜா சேதுபதியிடம் ஒன்றும் நடக்கவில்லை தாத்தா நீங்க நிம்மதியா தூங்குங்க என சொல்கிறார். ஆனால், ராஜா சேதுபதி ஏதோ தப்பா நடக்க போகிற மாதிரி தோணுது என்று சொல்ல கார்த்திக் அப்படி எதுவும் நடக்காது என சமாதானம் செய்கிறான். இதைத்தொடர்ந்து அடுத்த நாள் காலையில் சாமுண்டீஸ்வரி வீட்டில் பங்ஷனுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கின்றன. ரேவதி தயாராகாமல் இருக்க ரோகிணி என்னாச்சு ஏன் இன்னும் ரெடியாக வில்லை என்று கேட்க ரேவதி ஒன்றும் இல்லை என சொல்லி சமாளிக்க முயற்சி செய்கிறாள்.

பூசாரி அதிர்ச்சி: மறுபக்கம் பூசாரி கோவிலை திறக்க அம்மன் கழுத்தில் இருந்து தாலியை காணவில்லை என தெரிந்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எல்லாமே தப்பா இருக்கு ஊர் மக்கள் ராஜா சேதுபதியிடம் வாக்குவாதம் செய்கின்றனர். நகை திருடிய ஒருவன் அம்மன் தலையில் இருந்து ஒரே ஒரு கல்லை மட்டும் எடுத்துக்கொண்டு போய் ஆசையாக சென்று ஒரு பெண்ணிடம் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X