ரேவதி புடவை மாற்றுவதை பார்த்த மருது.. கையும் களவுமாக பிடித்த கார்த்திக்..கார்த்திகை தீபம்!

சென்னை: அம்மன் தாலியில் இருந்து ஒரு வைர கல்லை திருடிய முத்துவேல் அந்த விலை உயர்ந்த கல்லை ஒரு பெண்ணிடம் கொடுக்கிறான். அந்த பெண் அந்த கல்லை செட் வீட்டில் விற்க போகிறாள். அப்போது செட் வீட்டில் இருக்கும் பெண், அது அம்மன் தாலி என்பது தெரிந்து கார்த்திக்கிற்கு போன் செய்து விஷயத்தை சொல்ல கார்த்திக், மயில்வாகனம் இருவரும் அந்த வீட்டிற்கு வந்து வைர கல்லை கொண்டு வந்த பெண்ணிடம் விசாரணை நடத்த அது முத்துவேல் கொடுத்தது என்பது தெரியவருகிறது.

இதையடுத்து, கார்த்தியின் திட்டத்தின் படி, அந்த பெண் முத்துவேலை தனியாக வர சொல்கிறாள். அவர்களின் திட்டத்தின்படி முத்துவேல் தனியாக வர, அவனை மரத்தில் கட்டி வைக்கிறாள். பிறகு அங்கு வந்த மயில்வாகனம் மண்ணெண்ணெய் ஊற்றி கொடுத்த போவதாக சொல்லி மரண பயத்தை காட்டி தாலி எங்கே என்று விசாரிக்க அது சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதியின் பெட்டுக்கு அடியில் இருப்பதாக சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: பிறகு வீட்டுக்குச் சென்று தாலியை எடுத்து வந்தால் லேட்டாகும் என்ற காரணத்தினால் ரேவதிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லி தாலியைக் கொண்டு வர சொல்கிறான். தாலியை கொண்டு வரும் ரேவதி எம்டி சாருக்கு எப்படி என்னுடைய ரூமில் தாலி இருப்பது தெரியும் என யோசித்தபடி வருகிறாள்.பிறகு கார்த்திகை சந்தித்து தாலியை கொடுக்க அவன் சரியான நேரத்தில் கோயிலுக்கு வந்து தாலியை கொடுத்து தாத்தாவின் கௌரவத்தை காப்பாற்றுகிறான். பிறகு கோவில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.

zee tamil Karthigai Deepam Serial
Photo Credit:
புடவையுடன் வந்த கார்த்தி: இதையடுத்து இன்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதிக்கு நலங்கு வைப்பதற்காக எல்லாம் ஏற்பாடுகளும் நடக்கிறது. ரேவதியை அழைத்து வந்து உட்கார வைக்கின்றனர். இந்த சமயத்தில் கார்த்திக் ஊர் மக்களுடன் ஏலத்தில் எடுத்த அம்மன் புடவையை எடுத்துக் கொண்டு வருகிறான். இதைப்பார்த்தும் சாமுண்டீஸ்வரி, சந்திரகலா ஆகியோர் கடுப்பாகின்றனர். ரேவதி எம்டி ஏன் இங்க வந்திருக்காரு என குழப்பம் அடைகிறாள். பிறகு தாத்தா ராஜா சேதுபதி தான் தனது பேத்தி நலங்கு வைக்கும் போது இந்த புடவை தான் கட்டிக்கொண்டு இருக்க வேண்டும் என அம்மன் புடவையை ஏலத்தில் எடுத்துக் கொடுத்ததாக சொல்லி கொடுக்கிறான். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் தாத்தாவுக்கு போன் போட்டு கேளுங்க என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ஊர் மக்கள் இருப்பதால் மறுப்பு தெரிவிக்க முடியாமல் அதை புடவையை வாங்கிக் கொள்ளுகிறாள்.

மருந்து செய்த அசிங்ம்: இதையடுத்து, ரேவதி கொடுத்து புடவை மாற்றிக் கொண்டு வரும்படி அனுப்ப ரேவதி ரூமுக்குள் சென்றதும் அவள் பின்னாடி வந்த மருது, ரேவதி புடவை மாற்றுவதை பார்க்க முயற்சி செய்ய, இதைப்பார்த்த கார்த்திக் அங்கு வந்து அவனைப் பிடித்து அறைகிறான். சாமுண்டீஸ்வரி முன்பு கொண்டு போய் நிறுத்தி நடந்ததை சொல்ல சாமுண்டேஸ்வரி நம்ப மறுக்க ரோகிணி அவர் சொல்வது உண்மைதான் நானும் அதை பார்த்தேன் என சொல்கிறாள். இதனால் சாமுண்டீஸ்வரி மருதுவை எச்சரிக்கிறாள். மருது கார்த்திகை பழி தீர்க்க வேண்டும் என முடிவெடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X