கார்த்திக் vs சாமுண்டீஸ்வரி.. ரேவதியின் கல்யாணத்தில் கிளைமாக்ஸ் ட்விஸ்ட்.. கார்த்திகை தீபம்!
சென்னை: ரிஜிஸ்டர் ஆபிசில் மருது, இன்னைக்கு கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என்பதால், நானே ஜெனரேட்டரை கொண்டு வந்து விட்டேன். இப்போது எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள் என சொல்கிறார். இதையடுத்து அதிகாரி, இருவரின் ஆதாரங்களையும் வாங்கி பார்த்துவிட்டு இருவரிடமும் சம்மதம் கேட்க, ரேவதி தயக்கத்துடன் திருமணத்திற்கு சம்மதம் என்கிறார்.
இந்த நேரத்தில் லிப்டில் மாட்டிக்கொண்டு இருக்கும் கார்த்திக், ரெஜிஸ்டருக்கு போன் செய்து, டாக்குமெண்ட்களை அனுப்பி வைத்து ரேவதி என்னுடைய மனைவி, சட்டபூர்வமா எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி இருக்கு. இப்போது ரேவதி கடந்த இரண்டு வருடத்தில் நடந்த எல்லா விஷயத்தையும் மறந்துவிட்டார். நீங்க இப்போ ரேவதிக்கு கல்யாணம் செய்து வைத்தால் பெரிய பிரச்சனையாகும் என்று சொல்ல ரெஜிஸ்டர் இந்த கல்யாணம் நடக்காது என அதிர்ச்சி கொடுக்கிறார்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரியை தனியாக அழைத்து பேசும் ரிஜிஸ்டர், ஏற்கனவே ரேவதிக்கு திருமணமாகி இருக்கிறது. இருவரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ரேவதிக்கு நடந்த விபத்தில் எல்லா விஷயத்தையும் மறைத்திருக்கிறார். இந்த நேரத்தை பயன்படுத்தி நீங்கள் அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க பார்க்கிறீர்களா? இது எவ்வளவு பெரிய தவறு தெரியுமா? இதற்கு என்ன தண்டனை தெரியுமா? உங்களோடு சேர்ந்து நானும் சிறைக்கு செல்ல வேண்டியது தான் என ரிஜிஸ்டர் சொல்கிறார். இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு எப்படி தெரிந்தது? நான் இதற்கு எவ்வளவு செலவானாலும் அதற்குரிய பணத்தை தந்து விடுகிறேன் இன்னைக்கு கல்யாணம் நடந்தே ஆக வேண்டும் என சாமுண்டீஸ்வரி சொல்கிறார். இதைக்கேட்டு மேலும் ஆத்திரம் அடையும் ரிஜிஸ்டர் இதற்கு மேல் சொல்ல முடியாது மரியாதையாக இங்கிருந்து சென்று விடுங்கள் என, ரிஜிஸ்டர் பத்திரத்தின் பேப்பரை கிழித்து போட்டு அனைவரையும் வெளியே அனுப்புகிறார்.
கார்த்தி தான் காரணம்: ஆத்திரத்தோடு வெளியே வரும் சாமுண்டீஸ்வரியிடம் ரேவதி என்ன ஆச்சு எதற்காக ரிஜிஸ்டர் அப்படியே நடந்து கொண்டார் என கேட்ட, அப்போது சாமுண்டீஸ்வரி எனக்கு பிடிக்காதவர்கள் யாரோ இந்த திருமணத்தை நிறுத்திவிட்டதாக சொல்கிறார். திருமணம் நின்றதால், சந்தோஷப்படும் ரேவதி ஆபீசுக்கு செல்கிறார். ஆபீஸில் என்ன இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க என கார்த்தி கேட்க அப்போது வேரதி, காலையிலிருந்து ஏதோ மன வேதனையில் இருந்தேன். ஆனால், எப்போது மனம் லேசாக இருக்கிறது என சிரித்தபடி செல்கிறார்.
கடும் கோவத்தில் சாமுண்டீஸ்வரி: ரிஜிஸ்டர் ஆபீஸில் இருக்கும் சாமுண்டீஸ்வரி அதிகாரியிடம் சென்று இந்த டாக்குமெண்ட்களை அனுப்பியது யார் என விசாரிக்கின்றனர். அப்போது ரிஜிஸ்டர் இந்த டாக்குமெண்ட்களை அனுப்பியது கார்த்தி என்ற உண்மையை சொல்கிறார். இதனால், ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி இதற்கு மேல் கார்த்திகை சும்மா விடக்கூடாது என நேரடியாக ரேவதியின் அலுவலகத்திற்கு வந்து யாரிடம் அனுமதி கேட்காமல் கார்த்தியின் அறைக்கு சென்று கார்த்தியை பார்க்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications