ரேவதிக்கு நலங்கு வைத்த கார்த்திக்.. கொதித்த சாமுண்டீஸ்வரி.. ரெட்டை சிக்கவைக்க புதிய திட்டம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக் கோவில் ஏலத்தில் எடுத்து புடவையை சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு வந்து கொடுக்க, ஊர் மக்கள் இருந்ததால் சாமுண்டீஸ்வரி வேறு வழியில்லாமல் புடவையை வாங்கி ரேவதியிடம் கொடுத்து புடவை மாற்றிக் கொடுக்கிறாள்.ரேவதி ரூமுக்குள் சென்றதும் அவள் பின்னாடி வந்த மருது, ரேவதி புடவை மாற்றுவதை பார்க்க முயற்சி செய்ய, இதைப்பார்த்த கார்த்திக் அங்கு வந்து அவனைப் பிடித்து அறைகிறான்.
சாமுண்டீஸ்வரி முன்பு கொண்டு போய் நிறுத்தி நடந்ததை சொல்ல சாமுண்டேஸ்வரி நம்ப மறுக்க ரோகிணி அவர் சொல்வது உண்மைதான் நானும் அதை பார்த்தேன் என சொல்கிறாள். இதனால் சாமுண்டீஸ்வரி மருதுவை எச்சரிக்கிறாள். மருது கார்த்திகை பழி தீர்க்க வேண்டும் என முடிவெடுக்கிறான்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரேவதிக்கு நலங்கு வைக்கும் ஃபக்ஷன் ஏற்பாடுகள் நடந்த நிலையில் ரேவதி கார்த்திக் ஏலத்தில் எடுத்த அம்மன் புடவையில் வந்து உட்காருகிறாள். மேலே மருது ரெடியாகிக் கொண்டிருக்க மயில்வாகனம் அவன் தலையில் அடித்து மயங்க வைத்து விடுகிறான்.இங்கே ராஜா சேதுபதி, கார்த்திகை பார்த்து மாப்ள வாங்க நலங்கு வைங்க என்று கார்த்தியை கூப்பிட சாமுண்டீஸ்வரி மாப்பிள்ளையா என கடுப்பாகிறாள். ஆமா அப்பா ராஜா சேதுபதி, கார்த்தியை பேரனா தத்தெடுத்து இருக்காரு, அப்படி என்றால், இவர் என் தங்கச்சி பையன், தங்கச்சி பையன் என்றால் எனக்கு மாப்பிள்ளை தானே என்று சொல்ல அப்படின்னா எனக்கு சகலயா என மயில்வாகனம் சொல்கிறான்.

சிக்குவானா ரெட்: பிறகு ரோகினியும் சுவாதியும் அப்ப எங்களுக்கு மாமா முறையா என்று சொல்ல சாமுண்டீஸ்வரி மேலும் கடுப்பாகிறாள். கார்த்திக் நலங்கு வைக்க அதை தடுக்க முடியாமல் நிற்கிறாள். பிறகு கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு வர அங்கு மருது(ரெட்டால்) பாதிக்கப்பட்ட பெண்மணி தற்கொலைக்கு முயற்சி செய்து கோமா ஸ்டேஜில் இருக்க அவளது அம்மா நடந்த விஷயத்தை சொல்கிறார். இதனால் கார்த்திக் 'ரெட்'டை கையும் களவுமாக பிடிக்க திட்டம் ஒன்றை தீட்டுகிறான். ரெட்டுக்கு போன் செய்து அந்த வீடியோவை கொடுத்து விடுகிறோம். ஹாஸ்பிடல் செலவுக்கு மட்டும் பணத்தை கொடுங்க என்று கேட்க அவனும் சம்மதம் தெரிவித்து சந்திக்க ஓகே சொல்கிறான்.
மீண்டும் பூஜை: இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் பூஜை ஒன்றை ஏற்பாடு செய்ய ரேவதி என்னை திடீர் திடீர்னு பூஜைனு சொல்றீங்க என்று கேள்வி கேட்க ராஜராஜனும் எதுக்கு இப்படி பண்றீங்க என்று கேட்கிறார். முன்னாடியே சொன்ன தடுத்து நிறுத்திடுவீங்க அதுக்கு தான் கடைசி நேரத்துல சொல்றோம் என சொல்கிறாள். ரோகிணி இப்ப மட்டும் இந்த பூஜை நடக்கவா போகுது என்று மைண்ட் வாய்ஸில் பேசிக்கொள்ள சாமுண்டீஸ்வரி என்ன என்று கேட்க ஒன்றும் இலலை என சமாளிக்கிறாள். ரோகிணி எப்படியும் எம்டி வருவாரு பாரு என்று ரேவதியை கலாய்க்கிறாள். அதைத்தொடர்ந்து மயில் வாகனம் கார்த்திக்கு போன் போட்டு பூஜை நடக்கும் விஷயத்தை சொல்ல அவர் வரவில்லை என சொல்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் பவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications