ரேவதிக்கும் மருதுக்கும் கல்யாணம் நடக்கும்.. சவால் விட்ட சாமுண்டீஸ்வரி.. கார்த்திகை தீபம்!
சென்னை: ரேவதிக்கு மருதுவுடன் ரிஜிஸ்டர் திருமணம் நடக்க இருந்த நிலையில் கார்த்திக், அந்த ரிஜிஸ்டரிடம், ரேவதி என்னுடைய மனைவி, அவள் ஒரு விபத்தில் எல்லாத்தையும் மறந்துவிட்டாள், அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கு என்று சொல்கிறார். அதிகாரிக்கு கார்த்திக் அனைத்து ஆதாரத்தையும் அனுப்புகிறார். இதைப்பார்த்த அதிகாரி கல்யாணத்தை நிறுத்திவிடுகிறார்.
இதனால், ஆத்திரத்தில் இருந்த சாமுண்டீஸ்வரி, ரிஜிஸ்டரிடம் சென்று இந்த டாக்குமெண்ட்களை அனுப்பியது யார் என விசாரிக்கின்றனர். அப்போது ரிஜிஸ்டர் இந்த டாக்குமெண்ட்களை அனுப்பியது கார்த்தி என்ற உண்மையை சொல்கிறார். இதனால், ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி இதற்கு மேல் கார்த்திகை சும்மா விடக்கூடாது என நேரடியாக ரேவதியின் அலுவலகத்திற்கு வந்து யாரிடம் அனுமதி கேட்காமல் கார்த்தியின் அறைக்கு சென்று கார்த்தியை பார்க்கிறார்.

கார்த்திகை தீபம்: கார்த்திகை பார்த்து ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, நான் நினைச்சபடி என் பொண்ணுக்கு கல்யாணத்தை பண்ணி வைப்பேன் உன்னால எதுவும் செய்ய முடியாது என சவால் விட, கார்த்தி ரேவதி நான் தாலி கட்டின பொண்டாட்டி அவளை அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்திட மாட்டேன், உங்களால் முடிஞ்சதை பார்த்துக்கொங்க என பதிலுக்கு சவால் விடுகிறான். இதனால் மேலும் ஆத்திரடையும் சாமுண்டீஸ்வரி, நாளைக்கு என் பொண்ணுக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சா தடுத்துக்கொ என சவால் விடுகிறாள்.
சவால் விட்ட கார்த்திக்: அடுத்ததாக கார்த்தியின் கம்பெனிக்கு கைரேகை மெஷின் பிட் செய்ய வருகின்றனர். எல்லோரையும் கைரேகை வைக்க சொல்ல பிரியா இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக நினைக்கிறாள். பிறகு பிரியா மட்டும் கைரேகை வைக்காமல் இருக்க அவளையும் கை ரேகை வைக்க சொல்ல வேறொரு ரேகை லேயரை வைத்து கைரேகை வைத்து சமாளிக்கிறாள். பிறகு இளையராஜா சாமுண்டீஸ்வரி வந்து சென்றதைப் பற்றி பேச கார்த்திக் ரேவதியை அப்படியே விட முடியாது என சொல்கிறான். மறுபக்கம் சாமுண்டீஸ்வரி நிச்சயதார்த்த மோதிரம் எடுப்பதற்காக வந்திருக்க சூரியகலா என்ன நடந்தாலும் கார்த்திக் ரேவதியை திரும்பச் சேர விடக்கூடாது என ஏற்றி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications