பந்தகால் நடும் விழா.. கார்த்தியிடம் சிக்கிய மருது.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்தியின் கம்பெனிக்கு கைரேகை மெஷின் பிட் செய்ய வருகின்றனர். எல்லோரையும் கைரேகை வைக்க சொல்ல பிரியாவிற்கு ஏதோ சூழ்ச்சி இருப்பதாக நினைக்கிறாள். பிறகு பிரியா மட்டும் கைரேகை வைக்காமல் இருக்க அவளையும் கை ரேகை வைக்க சொல்ல வேறொரு ரேகை லேயரை வைத்து கைரேகை வைத்து சமாளிக்கிறாள். பிறகு இளையராஜா சாமுண்டீஸ்வரி வந்து சென்றதைப் பற்றி பேச கார்த்திக் ரேவதியை அப்படியே விட முடியாது என சொல்கிறான். மறுபக்கம் சாமுண்டீஸ்வரி நிச்சயதார்த்த மோதிரம் எடுப்பதற்காக வந்திருக்க சூரியகலா என்ன நடந்தாலும் கார்த்திக் ரேவதியை திரும்பச் சேர விடக்கூடாது என ஏற்றி விடுகிறாள்.

இன்றைய எபிசோடில், 'ரெட்'டின் அடியாள் அவனுக்கு போன் செய்து சில வீடியோக்கள் இருப்பதாகவும், அதை உங்களுக்கு கொடுக்கிறேன் பணத்தை கொடுங்கள் என்று சொல்கின்றனர். பிறகு (ரெட்) மருது அவர்களை 6 மணிக்கு ஒரு இடத்தில் சந்திப்பதாக சொல்கிறான். ரெட் அவர்களை சந்திக்க குடோனுக்கு வர அங்கு போலீஸ் இருப்பதை தெரிந்து ரெட் முகமூடி அணிந்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடுகிறான். வெளியில் காத்திருந்த கார்த்திக் அவனை மடக்கி பிடித்து சண்டையிட்டு முகத்தில் குத்து வைக்கிறான். இதனால், ரெட் முகத்தில் தழும்பு ஏற்படுகிறது. இதையடுத்து, மருது வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி என்னாச்சு என்று கேட்க கீழே விழுந்து விட்டதாக சொல்லி சமாளிக்கிறான். மேலும் மருது கார்த்தியை பழி தீர்க்க ரேவதியை வைத்து பதிலடி கொடுக்க முடிவெடுக்கிறான்.
நடக்கப்போவது என்ன: அடுத்த நாள் பந்தக்கால் விடுவதற்கான ஏற்பாடுகள் நடக்க கார்த்திக் வீட்டிற்கு வருகிறான். ரேவதி ஓடிப்போய் அவனை வரவேற்க எல்லோரும் கார்த்தியை தெரியாதது போல நடிக்கின்றனர். பிறகு கார்த்தி முன்னிலையில் பந்த கால் நடப்படுகிறது. சாமுண்டீஸ்வரி இதே போல நிச்சயதார்த்தம் நல்லபடியாக நிச்சயத்தை நடித்தி முடிப்போன் என சவால் விடுகிறாள். இந்த நேரத்தில் பந்தக்கால் விழ கார்த்தி ரேவதி இருவரும் சேர்ந்து அதை பிடித்து பின் இருவரும் சேர்ந்து பந்தக்கால் வைக்கின்றனர். இதைப்பார்த்த சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications