சூர்யகலாவின் சூழ்ச்சி.. விஷம் கலந்த உணவை சாப்பிட்ட இளையராஜா.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி ரேவதிக்கு புடவை கொடுக்கிறார். கார்த்தியும் அவனது பங்குக்கு ஒரு புடவையை கொடுக்கிறான். ரேவதி எந்த புடவையை கட்டுவது என தெரியாமல் குழம்ப சாமுண்டீஸ்வரி தான் கொடுத்த புடவையை கட்டிக் கொண்டு வரும்படி அனுப்பி வைக்கிறாள். புடவை கட்ட போன சமயத்தில் கரண்ட் கட்டாக மெழுகுவர்த்தி கொளுத்தி வைக்க அந்த மெழுகுவத்தி புடவையின் மீது பட்டு தீப்பற்றி எறிய கார்த்தி வாங்கி கொடுத்த புடவையை கட்ட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரேவதி கார்த்திக் வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு நடந்து வர, அதைப்பார்த்து சாமுண்டீஸ்வரி கடுப்பாகி இந்த புடவை எதுக்கு கட்டின என்று கேட்க நடந்த விஷயத்தை சொல்கிறார். இதனால், சாமுண்டீஸ்வரியால் எதுவும் சொல்ல முடியாத சூழ்நிலை உருவாகிறது. இதெல்லாம் வெளியில் மறைந்து இருந்து பார்த்துக்கொண்டு இருக்கும் சூரியகலா, இந்த கார்த்தியை அத்தை வீட்டுக்கு கூப்பிட்டு இருக்கவே கூடாது, தேவையில்லாமல் அவனை அழைத்து தப்பு செய்துவிட்டார்கள் என நினைக்கிறாள். மேலும், இந்த கார்த்தியை இப்படியே விட்டால், ஏதாவது பண்ணனும் என்று யோசிக்கும் சூர்யகலா, கார்த்தியின் ஆசிரமத்தில் பரிமாறப்படும் உணவில் விஷத்தை கலந்து விடலாம் என முடிவெடுக்கிறாள். அதற்கான வேலைகளையும் செய்து விஷத்தை யாருக்கும் தெரியாமல் அந்த உணவில் கலந்து விடுகிறாள்.
மயங்கிய இளையராஜா: மறுபக்கம் கார்த்திக் தனது நண்பர் இளையராஜாவிடம் பணத்தை கொடுத்து ஆசிரமத்தில் கொடுத்துவிடும் படி சொல்ல, இளையராஜா ஆசிரமத்திற்கு வந்து பணத்தை கொடுக்கிறான். பிறகு ரொம்ப பசிக்குது சாப்பாடு போடுங்க என்று சொல்லி விஷம் கலந்த சாப்பாட்டை சாப்பிட்டு அங்கிருந்து கிளம்பும்போது வழியில் இளையராஜா மயங்கி விடுகிறான். இறுதியாக அவன் கார்த்தியிடம் பேசியிருக்க இளையராஜாவை காப்பாற்றிய மக்கள் கார்த்திக்கு போன் செய்து அவனை அட்மிட் செய்த ஹாஸ்பிடல் குறித்த தகவலை தெரிவிக்கின்றனர். பிறகு கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications