கார்த்தி கண் முன்னே.. மருதுடன் ரேவதிக்கு நடந்த நிச்சயம்.. கார்த்திகை தீபம்!

சென்னை: ரேவதி கார்த்தி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு வந்ததால் ஆத்திரப்பட்ட சூர்யகலா, கார்த்தியை இப்படியே விட்டால், அவன் நிச்சயதார்த்ததை நடக்கவிடமாட்டார். இவனை இங்கிருந்து எப்படியாவது அனுப்ப வேண்டும் என யோசிக்கிறாள். இதற்காக கார்த்தியின் அம்மா அபிராமி ஆசிரமத்தில் பரிமாறப்படும் உணவில் விஷத்தை கலந்து விடலாம் என முடிவெடுக்கிறாள். அதற்கான வேலைகளையும் செய்து விஷத்தை யாருக்கும் தெரியாமல் அந்த உணவில் விஷயத்தை கலக்க ஒரு ஆளை ஏற்பாடு செய்து அனுப்புகிறாள்.

மறுபக்கம் கார்த்தியின்க நண்பன் இளையராஜா கார்த்திக் கொடுத்த பணத்தை ஆசிரமத்தில் கொடுக்கிறார். அப்போது சமையல் ரெடியாகி விட்டதால், விஷம் கலந்த சாப்பாட்டை இளையராஜா சாப்பிட்டு அங்கிருந்து கிளம்பும்போது வழியில் மயங்கி விழுகிறார். அவரை அங்கு இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துவிட்டு, கார்த்திக்கு போன் செய்து அட்மிட் செய்த ஹாஸ்பிடல் குறித்த தகவலை தெரிவிக்கின்றனர். பிறகு கார்த்திக் ஹாஸ்பிடலுக்கு ஓடி வருகிறார்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோடில், இளையராஜாவை பரிசோனை செய்த மருத்துவர், இவர் விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால், மயக்கிவிட்டார் என்று சொல்கிறார். அப்போது தான் இளையராஜா, அசிரமத்தில் சாப்பிட்ட விஷயத்தை சொல்கிறார். இதைக் கேட்டு பதறிப்போன கார்த்திக். மருதுக்கும் ரேவதிக்கும் இன்று நிச்சயதார்த்தம் நடக்கப்போகிறது. அந்த நேரத்தில் நான் அங்கு இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் இப்படி செய்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு, மேனேஜருக்கு போன் செய்து அன்னதானத்தை நிறுத்த சொல்கிறார் கார்த்திக்.

மருதுடன் ரேவதிக்கு நடந்த நிச்சயம்: மறுபக்கம் சாமுண்டீஸ்வரி ரேவதி மற்றும் மருதுவுக்கு நிச்சயதார்த்த ஏற்பாடு செய்திருக்க கார்த்திக் அங்கு வந்து விட அவனைப் பார்த்து சூர்யகலா, மருது அதிர்ச்சி அடைகின்றனர். அதைத்தொடர்ந்து மருது ரேவதி கையில் மோதிரத்தை போடப் போகும் சமயத்தில் கரண்டை கட் செய்து மருதுவை அந்த இடத்தில் இருந்து தூக்கி, கார்த்திக் ரேவதிக்கு மோதிரம் போட்டு விடுகிறான்.பிறகு மீண்டும் கரண்ட் வர அப்போது மருதுவை அங்கு நிற்க வைத்து விட சாமுண்டீஸ்வரி மருது தான் மோதிரம் போட்டதாக நினைத்துக் மகிழ்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X