கார்த்தி தான் என் புருஷன்.. நிலாவில் தெரிந்த முகம்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதி மற்றும் மருதுவுக்கு நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடு செய்திருக்க கார்த்திக் அங்கு வந்து விட அவனைப் பார்த்து சூர்யகலா, மருது அதிர்ச்சி அடைகின்றனர். அதைத்தொடர்ந்து மருது, ரேவதி கையில் மோதிரத்தை போடப் போகும் சமயத்தில் கரண்டை கட் செய்து மருதுவை அந்த இடத்தில் இருந்து தூக்கி, கார்த்திக் ரேவதிக்கு மோதிரம் போட்டு விடுகிறான். பிறகு மீண்டும் கரண்ட் வர அப்போது மருதுவை அங்கு நிற்க வைத்து விட சாமுண்டீஸ்வரி மருது தான் மோதிரம் போட்டதாக நினைத்துக் மகிழ்ச்சி அடைகிறாள்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டேஸ்வரி கார்த்தியை தனியாக பார்த்து பாத்தியா உன் கண் முன்னாடியே, நான் சொன்ன மாதிரியே மோதிரத்தை போட வைத்துட்டேன் என பெருமையாக சொல்கிறார். அப்போது கார்த்திக் தனது கையை காட்டி, ரேவதி மோதிரம் போட்டது எனக்குத் தான் அத்தை என கையை காட்டி, நடந்த விஷயத்தை சொல்லி, நீங்க எத்தனை முறை என்னையும் ரேவதியையும் பிரிக்க நினைத்தாலும் நடக்காது என சொல்கிறான். இதைகேட்டு சாமுண்டீஸ்வரி கன்பியூஸ் ஆகிறாள்.

நிலா பூஜை: பின் மருதுவை அழைத்து, கையை காட்ட சொல்ல மருது கையில் மோதிரம் இல்லாததை பார்த்து ஷாக் ஆகிறாள்.பின் மருதுவிடம் விசாரிக்க மருது நடந்த விஷயத்தை சொல்கிறான். இதனால் மேலும் ஆத்திரம் அடையும் சாமுண்டீஸ்வரி, நிலா பூஜையில் சல்லாடையில் ரேவதி உன் முகத்தை பார்த்துவிட்டால், அவள் மனதில் நீ ஆழமாக பதிந்துவிடுவ என சொல்கிறாள்.
கடுப்பான சாமுண்டீஸ்வரி: வீட்டில் நிலா பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து கொணடுஇருக்க அனைவரும் ரேவதி உங்களை தான் பார்க்கணும், அதுக்கு தான் நாங்க ஆசைப்படுறோம் என்று சொல்ல கார்த்திக் நிலா பங்ஷனுக்கு வருகிறான். பின் மயில்வாகனம் மருதுவை திசை திருப்பி அவனது ஷூவுக்குள் கட்டெறும்பை போட்டு விட ரேவதி சல்லடையில் நிலவை பார்த்து விட்டு மருதுவை பார்க்க திரும்பும் போது மருதுவை எறும்பு கடிக்க தாங்க முடியாமல் கீழே குனிய ரேவதி மருதுவுக்கு பின் நின்று கொண்டிருந்த கார்த்தியை பார்க்கிறாள். கார்த்தியின் முகத்தை பார்த்து மகிழ்ச்சியில் அப்படியே உறைந்து போகிறாள் ரேவதி. சாமுண்டீஸ்வரி பார்த்து கடுப்பாக வீட்டில் உள்ளவர்கள் எல்லாரும் சந்தோசப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications