குழியில் இறங்கிய பாட்டி.. சிலையுடன் வந்த கார்த்தி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியல் சனிக்கிழமை எபிசோடில், சிலை கடத்தல் ப்ரோக்கர் பரம்ஜோதி மீண்டும் குருமூர்த்தியை சந்தித்து ஒரு கஸ்டமர் பெரிய ரேட்டுக்கு சிலையை கேட்டு இருக்காங்க என்று சொல்ல குருமூர்த்தி பேராசையில் என்கிட்ட ஒரு சிலை இருக்கு என்று சொல்கிறான். அடுத்து அந்த கஸ்டமரை ஓரிடத்திற்கு சென்று சந்திக்க சொல்கிறான் பரம்ஜோதி. மேலும் கிழிந்த 10 ரூபாய் நோட்டு தான் 'கிவேர்ட்' என்று சொல்ல மயில்வாகனம் மாறுவேடத்தில் வருகிறான். இதையடுத்து, கார்த்திக் குருமூர்த்தியை பிடித்து சிலையை மீட்ட நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

கார்த்திகை தீபம் இன்றைய சீரியலில்,கோவிலில் கார்த்திக் வராததால் சிவனாண்டி ஏற்பாடு செய்த ஆட்கள், கார்த்திக் சொன்னபடி வரவில்லை. இன்னும் எவ்வளவு நேரம் நாம் அவனுக்காக காத்து இருப்பது என்று சொல்கிறார். இதுக்கு மேல காத்து இருக்க முடியாது, பரமேஸ்வரி பாட்டியை குழிக்குள் இறங்குங்க என்று சொல்கின்றனர். அப்போது ராஜராஜன் என் மாப்பிள்ளை கண்டிப்பா வந்துவிடுவார், இன்னும் கொஞ்சநேரம் நாம காத்து இருக்கலாம் என்று சொல்கிறார். அப்போது, பாட்டி கண்டிப்பா என் பேரன் வந்துருவான். அவன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு என்று சொல்கிறார். மேலும் கார்த்திக் தொடர்ந்து ஃபோன் செய்ய போன் ரீச் ஆகாமல் இருக்கிறது.

Zee tamil TV Karthigai Deepam serial November 10th Episode
Photo Credit:

சிலையுடன் வந்த கார்த்தி: ஒரு கட்டத்தில், ஊர்மக்கள் இதற்கு மேல் கார்த்திக்கிற்காக காத்திருக்க முடியாது என்று சொல்லிவிட, பரமேஸ்வரி பாட்டி குழியில் இறங்கபோகும் சமயத்தில் கார்த்திக் சிலை உடன் வந்து பாட்டியை காப்பாற்றுகிறான். அதன் பிறகு குருமூர்த்தி அழைத்து, இந்த சிலையை கடத்த சொன்னது யார் என்ற உண்மையை ஊர் மக்கள் முன் சொல்லு என்று சொல்கிறான். சிவனாண்டியை மாட்டி விடாமல் நான் தான் சிலையை கடத்த திட்டம் போட்டேன் என்று பழியை ஏற்றுக் கொள்கிறான். அதன் பிறகு கோவிலில் பந்தகால் நடும் நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிய கும்பாபிஷேகமும் நல்லபடியா நடந்தால் போதும் என பரமேஸ்வரி பாட்டி வேண்டுகிறார்.

மன்னிப்பு கேட்ட ஊர் மக்கள்: பிறகு ஊர் மக்கள் அனைவரும், சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு சென்று மன்னிப்பு கேட்கின்றனர். நாங்கள் தவறாக புரிந்து கொண்டோம். சிலைய நீங்க திருடல என்பதை உங்க மருமகன் நிரூபித்து விட்டார். தயவு செய்து எங்களை மன்னித்து விடுங்கள் என்று அனைவரும் மன்னிப்பு கேட்கின்றனர். அப்போது ராஜராஜன், இன்னைக்கு மன்னிப்பு கேட்கிறீர்கள், இதற்கு முன் சாமுண்டீஸ்வரி எத்தனை முறை நான் சிலையை எடுக்கவில்லை என்று சொன்னால் என்று சொல்கிறார். பிறகு ஊர் மக்கள் இனிமே இப்படி நடக்காம பார்த்துக்கிறோம் என்று மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து கலைந்து செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X