சாமுண்டீஸ்வரியை சீண்டிய பாம்பு.. உண்மையை சொல்ல தயாரான தீபாவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: நேற்றைய எபிசோடில், ரேவதி திடீரென வாந்தி எடுக்க வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் நல்ல விஷயம் என நினைத்து சந்தோஷப்படுகின்றனர். உடனே டாக்டரை வீட்டிற்கு வர செல்கின்றனர். இந்த சமயத்தில் ரேவதி எனக்கு குழந்தை பிறந்தால் என்ன பெயர் வைப்பீங்க என்று கேட்கிறாள். அதற்கு சாமுண்டீஸ்வரி பையன் பொறந்தா சக்தி, பொண்ணு பொறந்தா என் அம்மாவோட பேர் வைப்பேன் என்று சொல்கிறாள். பிறகு டாக்டர் ரேவதியை பரிசோதனை செய்ய அது பித்த வாந்தி தான் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி ஏமாற்றம் அடைகிறாள்.

அடுத்ததாக பரமேஸ்வரி பாட்டி பரம்பரை காப்பு ஒன்றை தேடி எடுத்து அதை கார்த்தி கையில் கொடுத்து இது நம்ப பரம்பரை காப்பு, இதை இனி மேல் உன் கையில் தான் இருக்க வேண்டும் இதை நீ பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என கொடுக்கிறாள். இதை வீட்டில் இருக்கும் டிடெக்டிவ் தீபாவதிக்கு, கார்த்திக் தான் ராஜா சேதுபதியின் பேரன் என்ற உண்மை தெரிய வருகிறது. இதையடுத்து பார்க்கலாம்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில்,. தீபாவதி தனது டீமை கூட்டி கார்த்திக் குறித்த ஆதாரங்களுடன் அவன் தான் ராஜா சேதுபதியின் பேரன் என்ற விஷயத்தை உறுதி செய்கிறாள். இதையடுத்து தீபாவதி டிடெக்டிவ் டீமில் இருப்பவர்கள் கார்த்திக் வேண்டும் என்றே சாமுண்டீஸ்வரியை ஏமாற்றும் நோக்கத்துடன் அந்த வீட்டில் இருக்கவில்லை. இரண்டு குடும்பமும் ஒன்றாக சேர வேண்டும் என நினைக்கிறார். அதற்காகத்தான் அந்த வீட்டில் டிரைவராக வேலை செய்கிறார். இப்பொழுது இந்த விஷயத்தை நாம் சாமுண்டீஸ்வரி இடம் கூறினால் இரண்டு குடும்பமும் ஒன்று சேரவே சேராது. எனவே இந்த விஷயத்தை கொஞ்ச நாளைக்கு தள்ளி போடலாம் மேடம் என ஒருவர் சொல்கிறார். அதற்கு தீபாவதி, நாம் அப்படி செய்தால் நம் தொழிலுக்கு செய்யும் துரோகமாக அது ஆகிவிடும். அதனால் நான் இந்த விஷயத்தை சாமுண்டீஸ்வரி இடம் நிச்சயம் சொல்வேன் என்கிறாள்.

சாமுண்டீஸ்வரியை கடித்த பாம்பு: அடுத்து சாமுண்டீஸ்வரியை போனில் தொடர்பு கொண்ட தீபாவதி, ராஜசேதுபதியின் பேரன் யார் என்ற உண்மை தெரிந்து விட்டதாகவும் நேரில் விஷயத்தை சொல்வதாகவும் சொல்கிறாள். இதையடுத்து, சாமுண்டீஷ்வரி வீட்டில் உள்ளவர்களிடம் வேறு காரணத்தை சொல்லி விட்டு கிளம்புகிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி தடுமாறி கீழே விழ போக கொஞ்சம் நேரம் உட்கார்ந்து விட்டு போக் சொல்கின்றனர். அடுத்து சாமுண்டீஸ்வரி மீண்டும் கிளம்ப அப்போது அவளை ஒரு பாம்பு சீண்டி விட வைத்தியச்சியை வீட்டிற்கு அழைத்து ட்ரீட்மென்ட் கொடுக்கின்றனர். இது விஷம் இல்லாத பாம்பு தான், பிரச்சனை இல்லை.. ஆனால் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கணும் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி, தீபாவதி சந்திப்பு தள்ளி போகிறது.

சாமுண்டீஸ்வரி வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்ட இருக்க வீட்டிற்கு ஜவுளி கடைக்காரர் ஒருவர் துணிகளை கொண்டு வருகிறார். அப்போது கார்த்திக், மாமா சாமியாட போவதால் வீட்டில் உள்ளவர்களுக்கு புது துணி எடுக்க வேண்டும் என்பதற்காக வர சொன்னதாக சொல்கிறான், அடுத்து அவரவர் அவங்க மனைவிக்கு பிடித்த புடவையை எடுத்து தர வேண்டும் என்ற போட்டி தொடங்குகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X