கும்பாபிஷேகத்தை நிறுத்த காளியம்மா போடும் பிளான்.. கார்த்திக் செய்யப்போவது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், கோவிலில் சாமியாடி ராஜ ராஜன் தான் இந்த முறை சாமியாட வேண்டும் என்று வாக்கு கொடுக்கிறார். இந்த விஷயத்தை ஊர் மக்கள் சாமுண்டீஸ்வரிக்கு தெரியப்படுத்த சாமுண்டீஸ்வரி என் புருஷனை கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுப்புவேன். ஆனால், சாமியாட சம்மதிக்க மாட்டேன் என்று சொல்கிறாள். இதனால் ஊர் மக்கள் அதிர்ச்சியாக கார்த்திக், சாமுண்டீஸ்வரி அத்தையை நான் சமாதானம் செய்கிறேன் என்கிறார்.
அதைத்தொடர்ந்து வீட்டில் அனைவருக்கும் கும்பாபிஷேகத்திற்காக புடவை எடுக்கின்றனர். அப்போது கார்த்தி தனக்கு பிடித்தது போல ரேவதிக்கு புடவை எடுத்துக் கொடுக்க ரேவதி இரண்டு புடவை வேண்டும் என கேட்டு எடுத்துக் கொள்கிறாள். கார்த்திக் எதற்காக இரண்டு புடவை என கேட்க, ஒரு புடவை கும்பாபிஷேகத்திற்கு, கும்பாபிஷேகம் நல்லபடியாக முடிந்த பிறகு நீயும் நானும் ஹனி மூனுக்கு போவோம். அப்பொழுது இந்த புடவையை கட்டிக் கொண்டு வருவேன் என தன் மனதில் வைத்திருக்கும் ஆசையே சொல்கிறாள்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி,ராஜராஜனை அனுப்ப முடியாது என்று மறுப்பு தெரிவிக்க கார்த்திக் மாமாவுக்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துகிறேன் என்று வாக்கு கொடுக்க சாமுண்டீஸ்வரி சம்மதம் சொல்கிறாள். அடுத்து பரமேஸ்வரி பாட்டி ஒவ்வொரு வருஷமும் கோவில் திருவிழாவில் என் வீட்டுக்காரர் ராஜசேதுபதி தான் சாமியாடுவாரு, ஆனால், இந்த முறை என் பையன் ராஜராஜன் சாமியாட போறான், அவன் நல்லபடியாக சாமியாடி எல்லை சாமிகளுக்கு விளக்கு போடணும் என்று வேண்டுகிறாள்.
காளியம்மாவின் திட்டம்: மறுபக்கம் கார்த்தியை எப்படி கவிழ்ப்பது என்று காளியம்மா, சிவனாண்டி, முத்துவேல், சந்திரகலா ஆகியோர் திட்டம் போடுகின்றனர். இந்த சமயத்தில் சாமியாடி அங்கு வர காளியம்மா பணத்தை கொடுத்து நான் சொன்ன மாதிரியே பண்ணிடீங்க என்று சொல்ல இது காளியம்மாவின் திட்டம் என்பது தெரிய வருகிறது. அடுத்து முத்துவேல், சிவனாண்டி ஏன் இப்படி என்று விசாரிக்க ராஜராஜனை தீர்த்து கட்டி கோவில் கும்பாபிஷேகத்தை நிறுத்தி கார்த்தியை அவமானப்படுத்த இருப்பதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











