பாட்டிக்கு விழுந்த கத்திக்குத்து.. கும்பாபிஷேகம் நடக்குமா? கார்த்திகை தீபம்!
சென்னை: கும்பாபிஷேகத்திற்கு சாமுண்டீஸ்வரி,ராஜராஜனை அனுப்ப முடியாது என்று மறுப்பு தெரிவிக்க கார்த்திக் மாமாவுக்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துகிறேன் என்று வாக்கு கொடுக்க சாமுண்டீஸ்வரி சம்மதம் சொல்கிறாள். அடுத்து பரமேஸ்வரி பாட்டி ஒவ்வொரு வருஷமும் கோவில் திருவிழாவில் என் வீட்டுக்காரர் ராஜசேதுபதி தான் சாமியாடுவாரு, ஆனால், இந்த முறை என் பையன் ராஜராஜன் சாமியாட போறான், அவன் நல்லபடியாக சாமியாடி எல்லை சாமிகளுக்கு விளக்கு போடணும் என்று வேண்டுகிறாள்.
கார்த்தியை எப்படி கவிழ்ப்பது என்று காளியம்மா, சிவனாண்டி, முத்துவேல், சந்திரகலா ஆகியோர் திட்டம் போடுகின்றனர். இந்த சமயத்தில் சாமியாடி அங்கு வர காளியம்மா பணத்தை கொடுத்து நான் சொன்ன மாதிரியே பண்ணிடீங்க என்று சொல்ல இது காளியம்மாவின் திட்டம் என்பது தெரிய வருகிறது. அடுத்து முத்துவேல், சிவனாண்டி ஏன் இப்படி என்று விசாரிக்க ராஜராஜனை தீர்த்து கட்டி கோவில் கும்பாபிஷேகத்தை நிறுத்தி கார்த்தியை அவமானப்படுத்த இருப்பதாக சொல்கிறாள். நேற்று Zee தமிழ் தொலைக்காட்சியில், சண்டே ஸ்பெஷல் எபிசோடில் ராஜராஜனை ரவுடிகள் கொல்ல முயற்சி செய்ய கார்த்திக் காவலனாக களமிறக்கி ராஜராஜனை காப்பாற்றிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், கார்த்தியால் தங்களது திட்டம் தோல்வியில் முடிந்ததை நினைத்து காளியம்மா கோபமடைந்து கோவிலுக்குள் இருக்கும் பரமேஸ்வரி பாட்டியை தனியாக வரவைத்து கத்தியால் குத்துகிறாள். இந்த கோவில் கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்பதால் கார்த்திக்கு இந்த விஷயத்தை போலீசுக்கு தெரியப்படுத்த மாட்டாள் என திட்டமிடுகின்றனர். அதேபோல், கார்த்தி கோவிலுக்கு வர பாட்டியை யாரோ கத்தியால் குத்திவிடுகின்றனர். இதைப்பார்த்து பதறிப்போன காத்ரத்திக், பாட்டியை ஹாஸ்பிடலுக்கு அழைக்கிறான் பரமேஸ்வரி பாட்டி இந்த கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கணும் என்று சொல்லி கோவிலுக்கு அழைத்துச் செல்லச் சொல்கிறாள். பாட்டிக்கு கத்திக்குத்து நடந்த விஷயம் அனைவரிடமும் மறைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கிறது. நான்கு எல்லைகளிலும் விளக்கு போட்டு கோவிலுக்கு வந்த ராஜராஜன் குறி சொல்ல தொடங்க அனைவரும் அவரிடம் குறி கேட்டு சந்தோஷமடைகின்றனர். திருவிழா நல்லபடியாக நடக்க பாட்டியும் சந்தோஷம் அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











