மனம் மாறிய சாமுண்டீஸ்வரி.. சந்திரகலாவின் அடுத்த திட்டம்..கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்தியால் தங்களது திட்டம் தோல்வியில் முடிந்ததை நினைத்து காளியம்மா கோபமடைந்து கோவிலுக்குள் இருக்கும் பரமேஸ்வரியின் கதையை முடிக்க ஒரு திட்டத்தை போடுகிறாள். இதற்காக பாட்டியை தனியாக வரவைத்து கத்தியால் குத்துகிறாள். இதை கேள்விபட்ட கார்த்திக்கோவிலுக்கு வந்து பாட்டியை ஹாஸ்பிடலுக்கு அழைக்கிறான். ஆனால், பரமேஸ்வரி பாட்டி இந்த கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கணும், நான் ஹாஸ்பிட்டல் வர மாட்டேன் என்னை கோவிலுக்கு அழைத்துச் செல்லச் சொல்கிறாள். பாட்டிக்கு கத்திக்குத்து நடந்த விஷயம் அனைவரிடமும் மறைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கிறது. நான்கு எல்லைகளிலும் விளக்கு போட்டு கோவிலுக்கு வந்த ராஜராஜன் குறி சொல்ல தொடங்க அனைவரும் அவரிடம் குறி கேட்டு சந்தோஷமடைகின்றனர். திருவிழா நல்லபடியாக நடக்க பாட்டியும் சந்தோஷம் அடைகிறாள்.

இதையடுத்து இன்றைய எபிசோடில், கார்த்தி லேட் ஆக வர, சாமுண்டீஸ்வரி என்ன ஆச்சு மாப்பிள்ளை என்று கேட்க பரமேஸ்வரி பாட்டிக்கு கத்திக்குத்து நடந்த விஷயத்தை சொல்ல சாமுண்டீஸ்வரி வருத்தப்படுகிறாள். மேலும், இந்த நேரத்தில் அத்தைக்கூட நீங்கதான் இருக்க வேண்டும், பாட்டியை பார்த்துக்கொள்ள வேண்டியது உங்களின் கடமை என்கிறான். இதைக்கேட்ட சந்திரகலா ஆத்திரப்பட்டு அது எல்லாம் அக்கா வர மாட்டா, அவங்க உயிரோடு இருந்தா என்ன, செத்தா என்ன என்று கேட்கிறாள். இதைக்கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி என்ன பேசுற, உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா என்று திட்டுகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இப்போது சந்திரகலா, என்ன அக்கா உன்னுடைய நடவடிக்கை எல்லாம் ரொம்ப மாறிவிட்டது. முன்பு பரமேஸ்வரி பெயரை கேட்டால், அவ்வளவு கோபப்படுவ ஆனா, இப்போ அவங்களுக்கு ஆதரவாக நீ பேசுற எல்லாத்துக்குமே காரணம் உன்னுடைய மாப்பிள்ளை தான். அவர் எது சொன்னாலும் நீ கேக்குற, அவருக்கு எல்லாத்துகிட்டையும் எப்படி எப்படி பேசணும், யாரை எப்படி பேசி மயக்க வேண்டும் என எல்லா அவருக்கு நல்லா தெரியும், என சொல்கிறாள். இதை கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, தேவை இல்லாமல் பேசாத, எதிரியாக இருந்தாலும் கஷ்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் அதைத்தான் மாப்பிள்ளை சொல்கிறார். நான் அங்கு போகப்போகிறேன் உனக்கு விருப்பம் இருந்தால் வா என சொல்லிவிட்டு சாமுண்டீஸ்வரி கிளம்புகிறாள்.

பாட்டிக்காக களமிறங்கிய சாமுண்டீஸ்வரி: சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரி பாட்டி கிளம்புவதை பார்த்து ஆத்திரப்படும் சந்திரகலா, இப்படியே போனால் பரமேஸ்வரி பாட்டியும் சாமுண்டீஸ்வரியும் ஒன்றாக இணைந்து விடுவார்கள். அதன் பிறகு நம்ம நிலைமை ரொம்ப மோசமாக ஆகிவிடும். அதனால் சாமுண்டீஸ்வரியை அங்கு தனியாக அனுப்பக்கூடாது. நாமும் கூட போனால் தான், இருவரும் சேராமல் பார்த்துக் கொள்வதற்கு சரியாக இருக்கும் என சந்திரக்கலா திட்டம் போட்டு நானும் வருகிறேன் என்கிறாள். இதைக்கேட்டு சாமுண்டீஸ்வரி, இவ்வளவு நேரம் என்னை போகாதேனு சொன்ன இப்போ நீயும் வரணு சொல்ற என்று கேட்க, நீ இல்லாத வீட்டில் நான் மட்டும் இருந்து என்ன செய்வது அதான் நானும் வரேன் என்று சொன்னே என்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X