கடத்தப்படும் இளையராஜா.. கார்த்திக்கு உருவாகும் சிக்கல்.. கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், பரமேஸ்வரி பாட்டியை பார்க்க சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு செல்ல ரெடியானதை பார்த்த, சந்திரகலா, அக்கா உன்னுடைய நடவடிக்கை எல்லாம் ரொம்ப மாறிவிட்டது. முன்பு பரமேஸ்வரி பெயரை கேட்டால், அவ்வளவு கோபப்படுவ ஆனா, இப்போ அவங்களுக்கு ஆதரவாக நீ பேசுற, அது எல்லாத்துக்குமே காரணம் உன்னுடைய மாப்பிள்ளை தான். அவர் எது சொன்னாலும் நீ கேக்குற, அவருக்கு எல்லாத்துகிட்டையும் எப்படி எப்படி பேசணும், யாரை எப்படி பேசி மயக்க வேண்டும் என எல்லா அவருக்கு நல்லா தெரியும், என சொல்கிறாள். இதை கேட்டு ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, தேவை இல்லாமல் பேசாத, எதிரியாக இருந்தாலும் கஷ்டத்தில் இருக்கும்போது அவர்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்கிறாள்.
சாமுண்டீஸ்வரி பரமேஸ்வரி பாட்டி கிளம்புவதை பார்த்து ஆத்திரப்படும் சந்திரகலா, இப்படியே போனால் பரமேஸ்வரி பாட்டியும் சாமுண்டீஸ்வரியும் ஒன்றாக இணைந்து விடுவார்கள். அதன் பிறகு நம்ம நிலைமை ரொம்ப மோசமாக ஆகிவிடும். இதனால் சாமுண்டீஸ்வரியை அங்கு தனியாக அனுப்பக்கூடாது. நாமும் கூட போனால் தான், இருவரும் சேராமல் பார்த்துக் கொள்வதற்கு சரியாக இருக்கும் என சந்திரக்கலா திட்டம் போட்டு நானும் வருகிறேன் என்கிறாள்.
\

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோடில், சந்திரகலா சாமுண்டீஸ்வரியிடம் நீ மறைந்து இருந்து, பாட்டியும் ராஜாவும் பேசுவதை கேள். அப்போதுதான் அவர் பரமேஸ்வரியின் பேரன் என்பது உனக்கு தெரியவரும் என சொல்கிறாள். இதைக் கேட்டு சாமுண்டீஸ்வரியும் எனக்கும் அந்த சந்தேகம் இருக்கிறது என சொல்லிவிட்டு, இருவரும் பேசிக் கொண்டு இருப்பதை, ஜன்னலுக்கு பின்னால் ஒளிந்திருந்து ஒட்டு கேட்கிறாள். இதை தெரிந்து கொண்ட பரமேஸ்வரி பாட்டி, ரேவதி என்னுடைய பேத்தி, ரேவதியை திருமணம் செய்து கொண்டதால் நீயும் என்னுடைய பேரன் தான். அது மட்டுமல்லாமல் என்னுடைய உயிரையும் நீ காப்பாற்றி இருக்கிறாய், இந்த வீட்டில் அனைத்து உரிமையும் உனக்கு இருக்கிறது என பரமேஸ்வரி பாட்டி பேசுவதே கேட்கிறாள் சாமுண்டீஸ்வரி.
கடத்தப்படும் இளையராஜா: கார்த்திக் மற்றும் பரமேஸ்வரி பாட்டி பேசுவதை சாமுண்டீஸ்வரி கேட்டு விட்டு வீட்டுக்கு வர சந்திரகலா நான் சொன்னபடியே நடந்துச்சு பாத்தியா என்று சொல்ல சாமுண்டீஸ்வரி, நீ சொன்னா மாதிரி எதுவும் நடக்கல, நீயும் என் பேர மாதிரி தான் என்று தான் பரமேஸ்வரி சொன்னாங்க, இதுக்கு மேலையாவது மாப்பிள்ளை மீது இப்படி பழிபோடுவதை நிறுத்து என்று கோபப்படுகிறாள். சந்திரகலாவின் திட்டம் தோல்வி அடைந்ததால் ஆத்திரப்படும் சந்திரகலா, சிவனாண்டிக்கு போன் செய்து, பரமேஸ்வரி பாட்டியின் பேரன் என சொல்லிக் கொண்டு திரியும் இளையராஜாவை கடத்த வேண்டும், அவனை அடித்து உதைத்து உண்மையில் யார், பரமேஸ்வரியின் பேரன் என்பதை, அவன் வாயால் சொல்ல வைக்க வேண்டும். அவன் உண்மையை சொல்லிவிட்டால், அதன் பிறகு கும்பாபிஷேகம் நடக்காது என்கிறாள். சந்திரகலா சொன்னபடி சிவனாண்டி, இளையராஜாவை சிவனாண்டி கடத்துகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











