பரமேஸ்வரி கொடுத்த கிஃப்ட்.. கோபத்தில் கொதித்த சாமுண்டீஸ்வரி - கார்த்திகை தீபம்!

சென்னை: பரமேஸ்வரியின் பேரன் கார்த்திக் தானோ என்ற சந்தேகம் சாமுண்டீஸ்வரிக்கு இருப்பதால். இதை எப்படி கண்டுபிடிப்பது என்ற குழப்பத்தில் இருக்கிறாள். இதனால், பரமேஸ்வரியின் பேரன் என்று சொல்லிக்கொண்டு தெரியும் இளையராஜாவை கடத்தி நாலு தட்டு தட்டினால் அனைத்தையும் சொல்லிவிடுவான் என திட்டம் போட்டு ரவுடிகளை வைத்து இளையராஜாவை கடத்துகிறாள் சாமுண்டீஸ்வரி.

பின் அவனை அடியாட்கள் அடி அடி என அடிக்க, இளையராஜா பரமேஸ்வரியின் பேரன் இல்லை. ஆனால், உண்மையான பேரன் யார் என்று எனக்கு தெரியாது. பேரன் போல என்னை நடிக்க சொன்னார்கள் நான் நடித்தேன் என சொல்கிறான். இதை கேட்டு சாமுண்டீஸ்வரி அதிர்ச்சி அடைகிறாள். இளையராஜா கடத்தப்பட்டதை தெரிந்து கொண்ட கார்த்திக், அந்த இடத்தில் வந்து புகையை போட்டு, சாமுண்டீஸ்வரியை ஏமாற்றி அங்கிருந்து இளையராஜாவை காப்பாற்றிய விடுகிறான். இதனால், ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி இவனை வைத்து பேரன் யார் என்பதை கண்டுபிடித்துவிடலாமா என்று பார்த்தால், இப்படி யாகிவிட்டதே, நிச்சயம் உண்மையான பேரன் தான் வந்து, இளையராஜாவை காப்பாற்ற இருப்பான் என்று சொல்ல, இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Mask Twitter Review Kavin
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், பரமேஸ்வரி பாட்டி பெட்டியில் இருந்து ஒரு நகையை எடுத்து, இது என்னுடைய மருமகள் சாமுண்டீஸ்வரிக்காக நான் வாங்கி வைத்தது. என்றாவது ஒரு நாள் எங்கள் மீது எந்த தவறும் இல்லை என்பதை சாமுண்டீஸ்வரி புரிந்து கொள்வாள். அன்று இந்த நகையை கொடுக்களாம் என வாங்கி வைத்து இருக்கிறேன். ஆனால், இது நாள் வரை அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவே இல்லை என வருத்தப்படுகிறாள். அப்பொழுது ரேவதி, இவ்ளோ தானே பாட்டி என்கிட்ட இந்த நகைய கொடுங்க, நான் அம்மா கிட்ட கொடுத்து போட சொல்றேன். உங்களுடைய ரொம்ப நாள் ஏக்கத்தை நான் இன்றைய சரி செய்கிறேன் பாட்டி என்கிறாள். இதனால் சந்தோஷப்படும் பரமேஸ்வரி பாட்டி அந்த நகையை ரேவதியின் தருகிறாள்.

கொந்தளித்த சாமுண்டீஸ்வரி: அந்த நகையை ரேவதி, சாமுண்டீஸ்வரியிடம், பாட்டி கொடுத்ததாக சொல்லி கொடுக்கிறாள். இதைப்பார்த்து ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, இது எல்லாம் பண்ண அவங்க யாரு? அவங்க எங்க அம்மாவிற்கு செய்த கொடுமையா நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா உறவு கொண்டாடிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்துடலாம்னு பாக்குறாங்களா என்று கோபப்படுகிறாள், அதோடு மட்டுமில்லாமல் அந்த நகையை எடுத்துக்கொண்டு நேராக பரமேஸ்வரி வீட்டிற்கு வந்து, இதையெல்லாம் கொடுத்து எங்க குடும்பத்துக்குள்ள வரலாம்னு நினைக்காதீங்க என்று கோபப்படுகிறாள். இதைப்பார்த்த ரேவதி, பாட்டி எவ்வளவு ஆசையை கொடுத்தாங்க, ஆனால், அம்மா ஏன் இப்படி நடந்துக்கிறாங்க என்று வருத்தப்பட கார்த்திக் அவங்கள பத்தி தெரியாதா? விடு என்று சமாதானம் செய்கிறான். அடுத்து கோவில் திருவிழாவில் இந்த முறை கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கணும், நடக்கும் என இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பேசுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X