சாமுண்டீஸ்வரியிடம் மன்னிப்பு கேட்ட கார்த்திக்.. உண்மை தெரிந்ததா? கார்த்திகை தீபம்!

சென்னை: சாமுண்டீஸ்வரியிடம், பாட்டி கொடுத்ததாக சொல்லி ரேவதி நகையை கொடுக்கிறாள். இதைப்பார்த்து ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, இது எல்லாம் பண்ண அவங்க யாரு? அவங்க எங்க அம்மாவிற்கு செய்த கொடுமையா நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா உறவு கொண்டாடிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்துடலாம்னு பாக்குறாங்களா என்று கோபப்படுகிறாள், அதோடு மட்டுமில்லாமல் அந்த நகையை எடுத்துக்கொண்டு நேராக பரமேஸ்வரி வீட்டிற்கு வந்து, இதையெல்லாம் கொடுத்து எங்க குடும்பத்துக்குள்ள வரலாம்னு நினைக்காதீங்க என்று கோபப்படுகிறாள்.

கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடில் அனைவரும் கும்பாபிஷேகத்திற்கு கிளம்பி கொண்டு இருக்க அப்போது ரேவதி புது புடவை அணிந்து வந்து கார்த்திக்கிடம் எப்படி இருக்கு என கேட்கிறாள். வேறு ஏதோ யோசனையில் இருக்க, வருத்தப்படுகிறாள் ரேவதி. இதைத்தொடர்ந்து, இப்பொழுதுதான் உன்னை புரிந்து கொண்டு நான் சந்தோஷமாக வாழ்கிறேன். அதற்குள் நீதான் பரமேஸ்வரி பாட்டியின் பேரன் என தெரிந்து விட்டால் அம்மா என்ன முடிவு செய்வார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. உன்னுடன் நூறு வருடம் வாழ வேண்டும் என நான் ஆசைப்பட்டேன். ஆனால் என்ன நடக்கப் போகுது என்று தெரியவில்லை என வருத்தப்படுகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இதையடுத்து ரேவதி, மீண்டும் சாமுண்டீஸ்வரனிடம் நீங்களும் கும்பாபிஷேகத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும், நாங்கள் அனைவரும் சந்தோஷப்படுவோம் என சொல்கிறாள். அப்போது சாமுண்டீஸ்வரி நான் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்க மாட்டேன். நான் கும்பாபிஷேகத்திற்கு வரவில்லை என தீர்க்கமாக சொல்கிறாள். அதன் பின், கார்த்தி உங்களிடம் தனியாக சில விஷயங்களை நான் பேச வேண்டும் என சாமுண்டீஸ்வரி அழைத்துக்கொண்டு செல்கிறான். இதைப்பார்த்து சந்திரகலா, அப்படி என்ன இவர்கள் தனியாக பேசப் போகிறார்கள் என, அவர்கள் பேசுவதை மறைந்திருந்து ஓட்டு கேட்கிறாள்.

கார்த்திக் எடுத்த முடிவு: அப்போது கார்த்தி, உங்களுக்கு ராஜசேதுபதியின் பேரன் யார் என்று தெரிய வேண்டும் என்றால், கும்பாபிஷேகத்திற்கு வந்தால் தான் தெரியும். நிச்சயம் பரமேஸ்வரி பாட்டியின் பேரனும் கும்பாபிஷேகத்திற்கு வருவார். நீங்கள் கும்பாபிஷேகத்திற்கு வந்தால் தான் அவரை பார்க்க முடியும். அதற்காகத்தான் நீங்கள் கும்பாபிஷேகத்திற்கு வர வேண்டும் என நான் சொல்கிறேன் என கார்த்திக் சொல்கிறான். சாமுண்டீஸ்வரிக்கும் இத்தனை நாள் இருந்த சந்தேகத்தை போக்க வேண்டும் என்றால், கும்பாபிஷேகத்திற்கு போவது தான் சரி என்கிற யோசனை வருவதால், நானும் கும்பாபிஷேகத்திற்கு வருகிறேன் என சொல்கிறாள்.

மகிழ்ச்சியில் பரமேஸ்வரி: இதையெல்லாம் மறைந்து இருந்து ஒட்டு கேட்டுக்கொண்டு இருக்கும் சந்திரகலா, அடப்பாவி என்ன மாதிரியான பொய் கதை எல்லாம் சொல்கிறான், இவனை சும்மா விடக்கூடாது. இதே கும்பாபிஷேகத்தில் இவன் தான் ராஜசேதுபதியின் பேரன் என்பதை அக்காவிற்கு தெரியப்படுத்த வேண்டும் என யோசிக்கிறாள். பின் கும்பாபிஷேகத்திற்கு சாமுண்டீஸ்வரி வரும் மகிழ்ச்சியான விஷயத்தை ரேவதி,0 பரமேஸ்வரி பாட்டிக்கு ஃபோன் செய்து சொல்ல, பரமேஸ்வரி பாட்டி சந்தோஷப்படுகிறாள். என்பேரன் கார்த்திக், கும்பாபிஷேகத்திற்கு சாமுண்டீஸ்வரியை அழைத்து வருவேன் என்று சொல்லி இருந்தான். அதன்படியே செய்துவிட்டான, கடவுளே இந்த கும்பாபிஷேகம், எந்தவிதமான தடங்களும் இல்லாமல் நல்லபடியாக நடக்க வேண்டும் என கடவுளிடம் வேண்டுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X