கார்த்திகை தீபம் சீரியலில் நடிகை கௌசல்யா.. இனி சீரியல் தரமா இருக்கப்போகுது!

சென்னை: கும்பாபிஷேகத்திற்கு நிச்சயம் ராஜசேதுபதியின் பேரன் வருவான், நீங்கள் கோவிலுக்கு வந்தால் அவனை பார்க்க முடியும் என்று கார்த்திக் சொல்ல, சாமுண்டீஸ்வரியும் நானும் கும்பாபிஷேகத்திற்கு வருகிறேன் என்று சொல்கிறாள். கும்பாபிஷேகத்திற்கு சாமுண்டீஸ்வரி வரும் மகிழ்ச்சியான விஷயத்தை ரேவதி, பரமேஸ்வரி பாட்டிக்கு சொல்ல, பரமேஸ்வரி பாட்டி சந்தோஷப்படுகிறாள்.

இன்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி உட்பட அனைவரும் பரமேஸ்வரி பாட்டியின் வீட்டிற்கு வருகின்றனர். வீட்டில் இருக்கும் முளைப்பாரியை எடுத்துக்கொணடு கோயிலுக்கு செல்ல வேண்டும் அதுதான் நம் வழக்கம் என்ன சொல்ல, அனைவரும் அந்த முளைப்பாரியை எடுத்துக்கொண்டு கோயிலுக்கு கிளம்புகின்றனர். அப்போது பரமேஸ்வரி பாட்டி,இ கார்த்திக்கிடம் எப்படியோ சாமுண்டீஸ்வரியை கும்பாபிஷேகத்திற்கு வந்துவிட்டால், இப்போத்தான் மனசு நிம்மதியாக இருக்கு என்று சொல்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: மறுபக்கம் காளியம்மாள், கும்பாபிஷேகத்தை தடுப்பதற்காக ஒரு பெரிய திட்டத்தை போடுகிறாள். அதற்காக நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் ஒருவரை வீட்டிற்கு வர வைத்து கும்பாபிஷேகம் நடக்கும் இடத்தில் வெடிகுண்டு வைக்கும் திட்டத்தை சிவனாண்டி மற்றும் முத்துவேலிடம் சொல்கிறாள். இதை கேட்டு இருவரும் சரியான ஐடியா, இப்படி நடந்தால் நிச்சயமாக கும்பாபிஷேகம் நடக்காமல் நின்று விடும் சொல்கின்றனர்.

நடிகை கௌசல்யா மாஸ் என்ட்ரி: அனைவரும் கோயிலுக்கு கிளம்பி கொண்டு இருக்க அப்போது மயில்வாகனம், காளியம்மாள் கும்பாபிஷேகத்தை தடுப்பதற்காக ஏதாவது ஒரு திட்டத்தை போட்டுக் கொண்டுதான் இருப்பாள். இதனால், நாம் எதற்கும் உஷாராக இருக்க வேண்டும். கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கிடைத்தால் இருந்தால் நன்றாக இருக்கும் என சொல்கிறான். அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டேன் என சொல்கிறார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்க, அப்போது அங்கு வரும் ஒரு பாட்டி, கார்த்தியிடம் நீ தான் ராஜா சேதுபதியோட பேரனா? நான் கண்ணு மூடுவதற்குள் இந்த கோவில் கும்பாபிஷேகத்தை பார்த்துடணும்னு ஆசைப்பட்டேன் அது உன்னால நடக்க போகுது என சொல்கிறார். கார்த்திகை தீபம் சீரியலில் பிரபல நடிகை கௌசல்யா என்ட்ரி கொடுத்திருக்கிறார். அந்த எபிசோடு நாளை வெளியாக உள்ளது. இந்த சீரியலில் கௌசல்யா ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் கௌசல்யாவை திரையில் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X