கார்த்திக் எடுத்த முடிவு.. கௌசல்யாவின் விசாரணையால் நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம்!
சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில், இன்ஸ்பெக்டர் கௌசல்யா ரேவதியை காப்பாற்றிய நிலையில், ரேவதியுடன் வந்த கௌசல்யாவை சாமுண்டீஸ்வரி சந்தித்து யார் நீங்க என்று கேட்க உங்கள் மாப்பிள்ளை கார்த்தியோட காலேஜ் சீனியர் என்று சொல்ல சாமுண்டீஸ்வரி குழப்பம் அடைகிறாள். என் மாப்பிள்ளை ஸ்கூலுக்கு மேல படிக்கவே இல்லையே என்று சொல்ல ரேவதி கௌசல்யா கை பிடித்து சைகை காட்ட ராஜா சேதுபதியோட பேரனும் உங்க மாப்பிள்ளை தானே என்று சொல்லி சமாளிக்கிறாள். உடனே சாமுண்டீஸ்வரி எங்க குடும்பத்துக்கு அந்த குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை பிரச்சனையால் பேசாமல் இருக்கிறோம் என்ற விஷயத்தை சொல்கிறாள். பிறகு கௌசல்யா ரேவதியை தனியாக அழைத்துச் சென்று பிரச்சனையை கேட்க ரேவதி நடந்த விஷயத்தை சொல்கிறாள்.
கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், ரேவதி கௌசல்யாவுடன் கோவிலுக்கு வர அப்போது ஒரு பெண்ணின் தங்க தாலியை ஒரு கும்பல் அறுத்து செல்ல கௌசல்யா அதனை திறமையாக விசாரித்து உண்மையை கண்டு பிடிக்கிறார். இதனால் பரமேஸ்வரி பாட்டி நீ என்ன போலீசா மா என்று கேட்க ரேவதி ஆமாம் பாட்டி, போலீஸ் தான் உங்க பேரன் கார்த்தியோட சீனியர் என்று சொல்கிறாள். அடுத்து கார்த்திக் கௌசல்யாவுக்கு போன் செய்து 'பாம்' இருக்கும் விஷயத்தை சொல்கிறான்.

கௌசல்யாவின் விசாரணை: இதையடுத்து, கௌசல்யா, கழுத்தில் போட்டிருக்கும் ஆரத்தில் கூட 'பாம்' இருக்கலாம் என்று சந்தேகப்படுகிறாள். ராஜராஜனும் அதே போல் ஆரத்தை போட்டிருக்க அதை செக்கப் செய்ய செல்கிறாள். ஆனால், ஊர் காரர்கள் கும்பாபிஷேகம் முடியும் வரை அவரை பார்க்க கூடாது என்று தடுத்து விடுகின்றனர். அடுத்து இங்கு வந்த கார்த்திக் கௌசல்யா, பரமேஸ்வரி பாட்டி, ரேவதி ஆகியோரிடம் 'பாம்' இருக்கும் விஷயத்தை சொல்கிறான், மக்களின் உயிரை காப்பாற்ற நான் அத்தையிடம் உண்மையை சொல்லுவதை தவிர வேற வழியில்லை என்று உண்மையை சொல்ல முடிவெடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை பாருங்கள்.


Click it and Unblock the Notifications











