சிலையை விற்க திட்டம் போடும் காளியம்மா..சாமுண்டீஸ்வரியை காப்பாற்றுவானா கார்த்தி? கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில், கோவில் சிலை காணாமல் போனதால், சாமுண்டீஸ்வரி மீது சந்தேகப்படும் ஊர் மக்கள், அவரை பஞ்சாயத்தில் நிற்க வைத்து கேள்வி கேட்கின்றனர். மேலும், பஞ்சாயத்தில் இருந்த ஒருவர், 35 வருடத்திற்கு முன்பு இதே போல தான் கோவில் சிலை காணாமல் போனது. அனைவரும் ஒருவர் மீது சந்தேகப்பட்டோம். ஆனால், அவர் நான் சிலையை திருடவில்லை என கூறினார். இதனால், கோவிலில் முன் ஒரு குழி தோண்டப்பட்டு அந்த குழிக்குள் நாங்கள் அவரை இறக்கினோம். அவர் நிரபராதியாக இருந்தால் அவருக்கு எதுவும் ஆகாது, சாமி சிலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் அவரை குழியில் இறக்கினாங்க. கொஞ்ச நேரத்தில் சாமி சிலையும் கிடைத்து விட்டது. பின் குழியை திறந்து பார்த்தால் குழிக்குள் அவர் உயிரோடு இருந்தார். அதேபோல சாமுண்டீஸ்வரியின் குழிக்குள் இறங்கி நிரூபிக்க வேண்டும் என சொல்கிறார்கள்.

இன்றைய எபிசோடில் இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் சாமுண்டேஸ்வரி, சிலை காணமால் போனதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, அப்படி இருக்கும் போது நான் ஏன் இதையெல்லாம் செய்யணும் என்று கேள்வி கேட்கிறாள். ஆனால், பஞ்சாயத்தார் தங்களது முடிவில் உறுதியாக இருக்க பரமேஸ்வரி பாட்டி என் மருமகள் இப்படி பண்ணி இருக்க மாட்டா. அவளுக்காக நான் குழியில் இறங்குகிறேன் என்று வாக்கு கொடுக்கிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: அடுத்து மறுபக்கம் காளியம்மா, முத்துவேல், சிவனாண்டி ஆகியோர் கூட்டு சேர்ந்து சிலை விற்று விட திட்டமிடுகின்றனர். வீட்டில் சந்திரகலாவின் மீது சந்தேகப்படும் ரேவதி, சந்திரகலாவிற்கு சிலை பற்றி நிச்சயம் ஏதாவது தெரிந்து இருக்கும் என நினைத்து சந்திரகலாவின் போனை எடுத்து, முத்துவேலுக்கு போன் செய்து, சிலை பத்திரமாக இருக்க என்று கேட்கிறாள், பேசுவது ரேவதி என்று நினைத்துக்கொண்டு, முத்துவேல் சிலை எங்ககிட்ட தான் பத்திரமாக இருக்கு, அதை விற்பதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன்.

சிலையை விற்றுவிடலாம்: இந்த சிலையை வைத்து சாமுண்டீஸ்வரி கதை, பரமேஸ்வரி கதை, கும்பாபிஷேக கதை என அனைத்தையும் முடித்து விடலாம் என கூறுகிறார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் ரேவதி,கார்த்திக்கிற்கு போன் செய்து முத்துவேல் மற்றும் சிவனாண்டி தான் சிலையை கடத்தி வைத்து இருக்கிறார்கள். அதை ஒரு மீனாட்சி லாட்ஜில் இருக்கிறார்கள். மேலும், அந்த சிலையை விற்கப் போகிறார்களாம் என்று சொல்கிறாள். இதைக்கேட்டு கார்த்திக் அதிர்ச்சி அடைந்து சிலையை மீட்பதற்காக செல்கிறான்.

சொதப்பிய பிளான்: மறுபக்கம், சந்திரகலா முத்துவேலுக்கு போன் செய்ய, அப்போது முத்துவேல், என்ன மகளே இப்போ தானே பேசினோம், வேறு ஏதாவது விஷயத்தை சொல்ல வேண்டுமா என கேட்கிறார். உடனே சந்திரகலா நான் இப்போது தானே பேசுகிறேன். காலையில் இருந்து நான் உங்களிடம் பேசவே இல்லையே என்கிறாள். இதையடுத்து, ரேவதி சந்திரகலாவிற்கு சந்தேகம் உருவாகிறது. நம்ம திட்டம் லீக் ஆகிருச்சு என்று முத்துவேலிடம் சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன? கார்த்திக் சிலையை மீட்கப்போவது எப்படி? என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X