சிலையை கண்டுபிடிக்க கார்த்திக் போடும் மாஸ்டர் பிளான்.. காத்திருக்கும் திருப்பம் - கார்த்திகை தீபம்!
சென்னை: காணாமல் போன சிறையை தேடி கார்த்தி அலைந்து கொண்டு இருக்க, சிலையை தேடி போன இடத்தில், சிவப்பு நிற கார் ஒன்று நின்று கொண்டிருந்த விஷயம் நினைவுக்கு வந்து அந்த காரில் தான் சிலையை கடத்த வேண்டும் என சந்தேப்படுகிறான். உடனே போலீஸ் உதவியுடன் செக் போஸ்ட்டில் சோதனையிட சொல்கிறான். இந்த விஷயம் சிவனாண்டிக்கு தெரிய வர, அவன் முத்துவேலுக்கு தகவல் கொடுத்து காருக்கு பதிலாக ஆட்டோவில் மாறி போக சொல்கிறான், இதனால் செக்போஸ்டில் ஆட்டோவில் சோதனையிடாமல் அனுப்பி விடுகின்றனர்.
இதையடுத்து, கார்த்திக், சிலையை கடத்தி விற்பனை செய்யும் கும்பலுக்கு இந்த விஷயத்தில் நிச்சயம் தொடர்பு இருக்கும். அது சம்மந்தாக விசாரித்தால், சிலையை கண்டுபிடித்துவிடலாம் என்று போலீஸ் நண்பன் சரவணிடம் சொல்ல, அவரும் விசாரிக்கிறார். இதில், ஒருவன் சிலையை கடத்திவிற்பன் இருக்கிறான். அவனிடம் பேசி பார்க்கிறேன் என்கிறார். இதையடுத்து, சரவணன் குருமூர்த்தியை வைத்து ஏஜென்ட் பரம்ஜோதியை சந்தித்து பேசலாம் என முடிவெடுத்து அவனை சந்தித்து பேசுகின்றனர், முதலில் பரம்ஜோதி இவர்களுக்கு உதவ மறுப்பு தெரிவிக்க சரவணன் எல்லா கேஸையும் உன்மேல போட்டு உள்ள தள்ளிடுவேன் என்று மிரட்டி சம்மதிக்க வைக்கிறான். இதையடுத்து பரம்ஜோதி ஒரு கஸ்டமர் இருப்பதாக சொல்லி, சிலை ஏதாவது இருந்தா சொல் என்று விசாரிக்க அவன் இல்லை என்று சொல்லி விட இந்த திட்டம் தோல்வியில் முடிகிறது. பிறகு கார்த்திக் ரகசியமாக ஒரு திட்டத்தை சொல்கிறான்.

கார்த்திகை தீபம்: தொடர்ந்து வீட்டிற்கு வந்த கார்த்திக் தனது குடும்பத்தாரிடம் கவலைப்படாதீங்க பாட்டி, கண்டிப்பா சிலையை கண்டு பிடித்து விடலாம், இந்த கும்பாபிஷேகம் நல்லபடியாக நடக்கும் என்று வாக்கு கொடுக்கிறான். மறுபக்கம் பரம்ஜோதி மீண்டும் குருமூர்த்தியை சந்தித்து ஒரு கஸ்டமர் பெரிய ரேட்டுக்கு சிலையை கேட்டு இருக்காங்க என்று சொல்ல குருமூர்த்தி பேராசையில் என்கிட்ட ஒரு சிலை இருக்கு என்று சொல்கிறான். அடுத்து அந்த கஸ்டமரை ஓரிடத்திற்கு சென்று சந்திக்க சொல்கிறான் பரம்ஜோதி. மேலும் கிழிந்த 10 ரூபாய் நோட்டு தான் கி ஓர்ட் என்று சொல்ல மயில்வாகனம் மாறுவேடத்தில் வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











