For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஜீ தமிழில் பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி - புத்தம் புதிய சீரியல்கள்

  By Mayura Akilan
  |

  சென்னை: ஜீ தமிழ் டிவியில் இன்று முதல் புதிய நெடுந்தொடர்களான "பூவே பூச்சூட வா" மற்றும் "யாரடி நீ மோகினி" ஆகியவை முறையே இரவு 8 மணி முதல் 8:30 மணி வரையும், இரவு 8:30 மணி முதல் 9 மணி வரையும், திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளது. இன்றுமுதல் பிரபல சீரியல்கள், டாக் ஷோ நிகழ்சிகளின் நேரமும் மாறுகிறது.

  ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கேம் ஷோ, ரியாலிட்டி ஷோ மற்றும் திரைப்படங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. தற்போது நேயர்களின் வசதிக்கேற்ப, நிகழ்ச்சி ஒளிபரப்பு நேரங்களில் சில மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

   புத்தம் புது சீரியல்கள்

  புத்தம் புது சீரியல்கள்

  ஏப்ரல் 24 முதல் புதிய நெடுந்தொடர்களான "பூவே பூச்சூட வா" மற்றும் "யாரடி நீ மோகினி" ஆகியவை முறையே இரவு 8 மணி முதல் 8:30 மணி வரையும், இரவு 8:30 மணி முதல் 9 மணி வரையும், திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகவுள்ளது.

  மென்மையான காதல்

  மென்மையான காதல்

  ஜீ தமிழ் தொலைக்காட்சி, தரமான நிகழ்ச்சிகளை அளித்து, முன்னணி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்குகிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரண்டு புதிய நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளன. இம்மாதம் 24ஆம் தேதி முதல், காதலும் காதலால் குடும்ப உறவில் ஏற்படும் ஊடல்களும் நிறைந்த "பூவே பூச்சூடவா" என்ற தொடர் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

  பூவே பூச்சூடவா:

  பூவே பூச்சூடவா:

  பூவே பூச்சூடவா, அதிகாலையில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து காபியைப் பருகுவது போன்ற இதமான காதல் கதை. சாதாரண பஸ் கண்டக்டரின் மகளான சக்தி படிப்பை முடித்துவிட்டு தன் அம்மா நடத்தும் கேட்டரிங் சர்வீஸுக்கு உதவியாக இருக்கிறாள். ரொம்பவும் துருதுருவென ஓடி ஆடும் சக்தி மனதில் பட்டதை வெடுக்கென்று பேசும் குணம் கொண்டவள்.

  சக்தி, சிவா காதல்

  சக்தி, சிவா காதல்

  ஒரு விபத்தில் சக்தி சிவாவை சந்திக்கிறாள். வெளிநாட்டில் படித்துவிட்டு இந்தியாவில் தொழில் தொடங்க நினைக்கும் சிவா கோப சுபாவம் கொண்டவன். யாரிடமும் அவ்வளவு எளிதாகப் பழகிவிட மாட்டான். குறிப்பாக பெண்கள் என்றாலே சிவாவிற்கு வெறுப்பு. விபத்தில் சிவாவும், சக்தியும் மோதிக்கொள்வதில் ஆரம்பித்து, எப்படி காதலித்து திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது தான் கதை.

  பிரபல நட்சத்திரங்கள்

  பிரபல நட்சத்திரங்கள்

  சக்தியாக டான்ஸ் ஜோடி டான்ஸில் கலந்துகொண்டு கலக்கிய ரேஷ்மா, சிவாவாக மிஸ்டர் & மிஸ்ஸஸ் கில்லாடிகளில் கலந்து கொண்ட தினேஷும் நடிக்கிறார்கள். தினேஷ் நடிகை ரக்‌ஷிதாவின் கணவர். ரேஷ்மாவின் அம்மாவாக உமா பத்மநாபனும் அப்பாவாக ஏ.எல். ராஜாவும் நடிக்கிறார்கள். தினேஷின் அம்மாவாக யுவராணியும் அப்பாவாக மது மோகனும், பாட்டியாக சி.ஐ.டி. சகுந்தலாவும், தம்பியாக அஞ்சரைப் பெட்டி தொகுப்பாளர் மதனும் நடிக்கிறார்கள்.

  யாரடி நீ மோகினி

  யாரடி நீ மோகினி

  இது குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் உணர்வை மையமாக வைத்து நடக்கும் திகில் நிறைந்த தொடர். இத்தொடரின் கதாநாயகனாக சின்னத்திரை நாயகன் சஞ்சீவ், கதாநாயகியாக புதுமுக நாயகி நட்சத்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இவர்களுடன் பிரபல செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு வில்லியாக நடிக்கிறார்.

  திகில் கதை

  திகில் கதை

  பல ஏக்கர் நிலக்கிழாரின் பேரனான முத்தரசன் தாயை இழந்து சித்தியின் அரவணைப்பில் வளர்கிறான். சித்தி நீலாம்பரி தனது அண்ணன் மகளான ஸ்வேதாவை முத்தரசனுக்கு கட்டிவைத்து சொத்தை முழுவதுமாக அடைய திட்டமிடுகிறாள். ஆனால் சிறு வயதிலிருந்தே தன் மாமன் முத்தரசனை திருமணம் செய்ய வேண்டும் என்று அவனையே சுத்தி சுத்தி வருகிறாள், வெண்ணிலா.

  ஆன்மா யார்?

  ஆன்மா யார்?

  இவர்களில் யாரை முத்தரசன் திருமணம் செய்யப்போகிறான்? இதற்கிடையில் முத்தரசனை சுற்றி வரும் ஒரு ஆன்மா வலம் வருகிறது. யார் அந்த ஆன்மா? இந்த முடிச்சுகளுக்கான விடையே, ‘யாரடி நீ மோகினி'.

  சொல்வதெல்லாம் உண்மை

  சொல்வதெல்லாம் உண்மை

  இந்தப் புதிய தொடர்களை அறிமுகப்படுத்துவதால், ஏற்கனவே வெற்றி நடை போட்டு வரும் பிரபல "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சி, திங்கள் முதல் வெள்ளி தோறும், இரவு 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகிறது.

  டார்லிங் டார்லிங்

  டார்லிங் டார்லிங்

  மேலும், எதிர் எதிர் வீட்டில் வசிக்கும் இரு குடும்பாத்தாரின் வாழ்க்கையில் நடக்கும் குழப்பங்களும், அக்குழப்பத்தினால் ஏற்படும் கலவரங்களும் நகைச்சுவையாக சொல்லப்பட்டுள்ள "டார்லிங் டார்லிங்" தொடர் ஏப்ரல் 29 முதல் சனிதோறும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும்.

  நம்பினால் நம்புங்கள்

  நம்பினால் நம்புங்கள்

  தமிழகமெங்கும் மறைந்து கிடக்கும் விசித்திர நிகழ்வுகளையும் அதிசய மனிதர்களையும் அமானுஷ்ய இடங்களையும் தேடி கண்டுபிடித்து அப்பகுதி மக்களின் நம்பிக்கைகளை சிதைக்காமல் அப்படியே நேயர்களுக்கு நடிகர் நிழல்கள் ரவி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியான "நம்பினால் நம்புங்கள்", ஏப்ரல் 29 முதல் ஞாயிறுதோறும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும்.

  English summary
  Zee Tamil is Launching Poove Poochoodava and Yaaru Di Nee Mohini Serials this April 24th
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X