»   »  ஜீ தமிழ் டிவியில் ‘டான்சிங் கில்லாடிஸ்’! ... நடுவர்களாக சினேகா, சுதாசந்திரன்

ஜீ தமிழ் டிவியில் ‘டான்சிங் கில்லாடிஸ்’! ... நடுவர்களாக சினேகா, சுதாசந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரசிகர்களின் மனம் கவர்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வரும் உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "டான்ஸிங் கில்லாடிஸ்" எனும் புதுமையான டான்ஸ் ரியாலிட்டி ஷோ நாளை பிப்ரவரி 18 முதல் சனி தோறும் இரவு 8:30 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ தமிழின் புகழ் பெற்ற "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்களை மெய்மறக்கச் செய்த நடனக் கலைஞர்கள், டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சியிலும் நடுவர்களாக சினேகாவும், சுதா சந்திரனும் பங்கேற்கின்றனர்.

டான்சிங் கில்லாடிஸ்

டான்சிங் கில்லாடிஸ்

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பிற டான்ஸ் ஷோக்களில் இருந்து மாறுபட்டு சின்னத்திரை உலகின் புதுமையான நிகழ்ச்சியாக டான்ஸிங் கில்லாடிஸ் உருவாகியுள்ளது. நடனத்தை மையப்படுத்திய சாகச நிகழ்ச்சியாக டான்ஸிங் கில்லாடிஸ் உருவாகியுள்ளது.

புதுமையான தளம்

புதுமையான தளம்

வழக்கமான நடன அரங்குகளுக்கு மாற்றாக வியத்தகு புதுமையான தளங்களில் நடனமாடவுள்ள கலைஞர்கள், நடனத்தின்போது எதிர்பாரா சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

சவால் நடனங்கள்

சவால் நடனங்கள்

நிலம், நீர் மற்றும் அந்தரத்தில் நடனமாடவுள்ள கலைஞர்கள், தாங்கள் சந்திக்கும் எதிர்பாராத சவால்களை எதிர்கொண்டு நிலை குலையாமல் தொடர்ச்சியாக நடனமாடித் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

நடுவராக தீபக்

நடுவராக தீபக்

ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்து வரவுள்ள இந்நிகழ்ச்சியை, ஜீ தமிழின் உச்சகட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளான `மிஸ்டர் அண்ட் மிஸ்ட்ரஸ் கில்லாடிஸ் கேம் ஷோ மற்றும் ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் தீபக் விறுவிறுப்பாகவும், நகைச்சுவையாகவும் தொகுத்து வழங்க உள்ளார்.

சினேகா - சுதாசந்திரன்

சினேகா - சுதாசந்திரன்

ரசிகர்களை வசீகரிக்கக் கூடிய நட்சத்திர நடுவர்கள் இந்நிகழ்ச்சியை மேலும் அலங்கரிக்க உள்ளனர். தென்னிந்திய சினிமாவில் விரும்பப்படும் நடிகையாக புகழ்பெற்ற சினேகா மற்றும் பிரபல நடிகையும், நடனக் கலைஞருமான சுதா சந்திரன் ஆகியோர் டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சியில் நடுவர்களாக பங்கேற்கின்றனர்.

சனிக்கிழமை இரவில் டான்ஸ்

சனிக்கிழமை இரவில் டான்ஸ்

பிரபல நடனக் கலைஞர்கள், முன்னணி சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நடனக் கலைஞர்கள் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்கின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நாளை பிப்ரவரி 18 முதல் வாரம் தோறும் சனிக்கிழமை இரவு 8:30 முதல் 10 மணி வரை டான்ஸிங் கில்லாடிஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. காணத் தவறாதீர்கள்!

English summary
Zee Tamil its upcoming dance reality show, Dancing Khilladies. TV Celebrity Deepak who was also the host of Zee Tamil’s popular shows – Mr. & Mrs. Khiladis and Dance Jodi Dance, He will keep the tempo fun and upbeat.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil