என்னாது... யாரடி நீ மோகினி சீரியல் முடியப் போகிறதா .. பரபரப்பில் ரசிகர்கள்!

சென்னை : ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் திடீரென முடிக்கப்படுகிறது என்பதை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர்.

தென்னிந்திய தொலைக்காட்சியில் இரண்டாவது மிக அதிகபட்ஜெட் கொண்ட தொடர் இது என்று கூறப்படுகிறது

தற்போது சீரியல் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் இதனை முடித்து விட்டு இரண்டாவது பாகத்தை அதே வீட்டிற்குள் பூஜை போட்டு ஆரம்பித்திருக்கின்றனர்.

ஜீ தமிழ்

ஜீ தமிழ்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது வரைக்கும் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தில் தான் ஒளிபரப்பப்பட்டு வருகிறது .இந்த சீரியலுக்கு என்று ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது இந்த சீரியலில் ஸ்வேதா வாக நடிக்கும் சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்ட் போட்டிருக்கிறார்.

புது அப்டேட்

புது அப்டேட்

அதில் அந்த சீரியல் நடிகர்கள் அனைவரும் மங்களகரமாக இருக்கின்றனர். அதில் அனைவரும் சிரித்த முகமாக செல்பிக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் போது சைத்ரா மட்டும் சிரித்துகொண்டே கண்ணை மூடி இருக்கிறார் .அதுவும் ஒரு போட்டோவில் அல்ல இரண்டு ஃபோட்டோவிலுமே அப்படித்தான் இருக்கிறார். இதனை பார்த்ததும் அனைவரும் மிஸ் யூ ஸ்வேதா என்று ஹாட்டின்களை பறக்க விட்டு வருகின்றனர்.

பேய் யமுனா

பேய் யமுனா

அந்த சீரியலின் பேயாக நடித்துக்கொண்டிருக்கும் யமுனா சின்னத்துரை அப்போ என்னை மிஸ் பண்ணலையா என்று கமெண்ட் போட்டிருக்கிறார் .அதற்கு சைத்ரா நான் சிலவற்றை இழக்கிறேன் என்று சொன்னேன் ஆனால் எனது இனிமைகளை எப்படி இழக்க முடியும் என்று பதில் கமெண்ட் போட்டிருக்கிறார். இந்த சீரியல் ஒளிபரப்பத் தொடங்கும்போது பேய் சீரியல் போல காட்டி இருந்தனர் .

இது நல்ல பேயாச்சே

இது நல்ல பேயாச்சே

இதனால் இதனை முதலில் குழந்தைகள் ஆர்வமுடன் எதிர்பார்த்து இருந்தனர் .ஆனால் நாட்கள் போக போக நல்ல பேயாக இருப்பதை பார்த்ததும் இந்த சீரியலுக்கு குழந்தைகள் தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர் .அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் முத்தரசன் ஆக ஆரம்பத்தில் சஞ்சீவ் நடித்துக் கொண்டிருந்தார் .பின்பு திடீரென அவர் விலகியதும் அவருக்கு பதிலாக ஸ்ரீ குமார் நடித்து வருகிறார்.

இரண்டு அத்தை பெண்கள்

இரண்டு அத்தை பெண்கள்

முத்தரசனுக்கு ஸ்வேதா வெண்ணிலா என இரண்டு அத்தை பெண்கள் சண்டை போட்டுக்கொண்டு அவர் மீது மாறி மாறி பாசத்தைப் பொழிந்து கொண்டிருக்கும் நேரத்தில் முத்தரசு வெண்ணிலாவை திருமணம் செய்து கொள்கிறார். முத்தரசனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றது .தற்போது வெண்ணிலாவுக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறந்து இருந்தாலும் அதில் ஆண் குழந்தையை சுவேதா தன்னுடைய குழந்தை என எடுத்து வைத்துக்கொண்டு முத்தரசனையும் அவருடைய குடும்பத்தையும் மிரட்டி வருகிறார்.

எப்போது வெளிப்படும்

எப்போது வெளிப்படும்

ஆனால் ஸ்வேதா வைத்திருக்கும் குழந்தையும் தன்னுடையது என்பதை வெண்ணிலா மனப்பூர்வமாக உணர்ந்திருந்தாலும் எப்போது உண்மை வெளிப்படும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நேரத்தில் இந்த சீரியல் முடிக்கப்பட்டு பார்ட்2 தொடங்கப்படுகிறது .இதனை கேள்விப்பட்டதும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தாலும் புதுசா கதை இருக்குமா அல்லது இந்த கதையை தான் அதிலும் ரிபீட் ஆகுமா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

கன்டினியூட்டி இருக்குமா

கன்டினியூட்டி இருக்குமா

அதிலும் சிலர் ஸ்வேதாவின் ஆட்டம் இப்பவே தாங்க முடியல இதுல பார்ட்2 விலும் அவர் வருவாரா என தான் மிரண்டு போய் கேள்வி கேட்டு வருகின்றனர் .தற்போது இந்த சீரியலின் வீட்டிற்குள்ளே மீண்டும் பூஜையை போட்டிருப்பதால் இதே கதையை தான் மீண்டும் கண்டினியூ பண்ணுவார்கள் என ரசிகர்கள் கெஸ் பண்ணி வருகின்றனர். என்னவோ போங்கப்பா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X