Veera: முடிவுக்கு வருகிறதா வீரா? வில்லி விஜிக்கு மானமே போச்சு.. அடுத்து களமிறங்குவது ஆல்யா மானசாவா?

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. இந்த சீரியல் தற்போது, முடிவு கட்டத்தை எட்டியுள்ளதோ என்ற சந்தேகத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விட்டது. இதனால் வீரா சீரியலில் ஒளிபரப்பாகி வரும் நேரத்தில் அடுத்து என்ன சீரியல் ஒளிபரப்பாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வீரா சீரியலில் தற்போது வில்லி விஜியின் கூத்துதான் ஓவராக உள்ளது. ராமச்சந்திரன் குடும்பத்தை அழிக்கும் திட்டத்தோடு வீட்டிற்குள் வந்த விஜி, தனது தில்லாலங்கடி வேலையால், ராமச்சந்திரனின் இரண்டாவது மகனான கார்த்தியை திருமணம் செய்து கொண்டாள். ஆனால் கார்த்திக்கு வீராவின் தங்கை பிருந்தாவைத்தான் திருமணம் செய்து வைப்பதாக ஏற்பாடுகள் நடக்கும் போது, கல்யாண மண்டபத்தில் கார்த்தியின் அறைக்குள் இருந்து அலங்கோலமாக வந்த வில்லி விஜி, அதன் பின்னர்தான் அடித்து ஆரம்பித்தாள்.

ஆனாலும் கார்த்தி பிருந்தாவின் கழுத்தில் தாலி கட்டி பிருந்தாவுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் பிருந்தாவை வீட்டிக்கும் அழைத்து வந்துவிட்டார். இதையும் பிரச்னையாக மாற்றிய வில்லி விஜி, இப்போது தான் கர்ப்பமான இருப்பதாக நாடகமும் ஆடிக்கொண்டே இருக்கிறார். விஜி கர்ப்பமாக இல்லை என்பது, வீரா, மாறன், கார்த்திக், வள்ளி, ராகவன், பிருந்தா, கண்மணி என எல்லோருக்கும் தெரிந்ததே. அப்படி இருக்கும் போதும் விஜி ஓவராகத்தான் ஆடி வருகிறார்.

Zee Tamil Veera Serial Going Forward To End And Alya Manasa NEW Serial Will Telecast That Time Slot Fans Asking
Photo Credit:

முடிவுறும் வீரா? :விஜி கர்ப்பமாக இல்லை என்பதை நிரூபித்து விட்டால், விஜியை வீட்டை விட்டே துரத்தி விடுவார் ராமச்சந்திரன். ஏற்கனவே, ராமச்சந்திரன் குடும்பத்தை அழித்தே தீருவேன் என விஜி போதையில் உளறியது தொடர்பான வீடியோ வீராவிடம் உள்ளது. இப்படி இருக்கும்போது, விஜி கர்ப்பமாக இல்லை என்பதை நிரூபிக்க வீரா, மாறன் உள்ளிட்ட மொத்த குடும்பமும் போராடிக்கொண்டு உள்ளது. படங்களில் வருவது போல, நேற்றைய எபிசோடில் அண்ணன் தம்பிகள் மூவரும் இணைந்து சண்டையெல்லாம் போட்டுள்ளார்கள். விஜி கர்ப்பமாக இல்லை என்பதை நிரூபித்த பின்னர், விஜியை வெளியே அனுப்பிய பின்னர், கண்மணி கர்ப்பமாக இருக்கிறார் என சீரியலை முடித்தாலும் முடித்துவிடுவார்கள் என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இப்போதே வந்துவிட்டது.

Zee Tamil Veera Serial Going Forward To End And Alya Manasa NEW Serial Will Telecast That Time Slot Fans Asking
Photo Credit:

ஆல்யா மானசா: ஏற்கனவே சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியல் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். அப்படி இருக்கும்போது, வீரா சீரியலை சீக்கிரம் முடித்துவிட்டு, அடுத்தபடியாக ஆல்யா மானசா கமிட் ஆகி உள்ள சீரியலை அந்த நேரத்தில் ஒளிபரப்ப தொலைக்காட்சி தரப்பில் திட்டமிட்டு வருகிறார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில், வீரா சீரியல் நன்றாக போய்க்கொண்டு உள்ளது. அப்படி இருக்கும்போது, அந்த சீரியலை ஏன் முடிக்க வேண்டும். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறாத சீரியல் எதையாவது கட் செய்யலாம் அல்லவா? எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X