Veera: விஜிக்கு குவாட்டரை ஊத்திக் கொடுத்த மாறன்.. வீடியோ எடுத்த வீரா.. என்ன நடக்கப்போகுது தெரியுமா?

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'வீரா' நாடகம்: புதிய திருப்பங்களுடன் பார்வையாளர்களை கவர்கிறது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் 'வீரா' தொடர், தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நாடகம், குடும்ப உறவுகள், உணர்ச்சிகரமான தருணங்கள் மற்றும் சமூகத்தில் பெண்களின் வலிமையை எடுத்துரைக்கும் கதைக்களத்துடன், பார்வையாளர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறது. இந்த தொடரில் இந்த வாரம் பல சுவாரஸ்யமான திருப்பங்கள் நடைபெறவுள்ளது.

அதாவது ஏற்கனவே வில்லி விஜி தான் கர்ப்பமாக இல்லாமலே, கர்ப்பம் என சதித்திட்டம் தீட்டி வீட்டிற்குள் தனது அம்மாவுடன் இருக்கிறார். இப்படி இருக்கும்போது கார்த்தியின் காதல் மனைவியும் வீரா மற்றும் மாறனோடு வனவாசம் போவது போல குடிசைக்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் கார்த்திக்கு எல்லா பணிவிடைகளையும் வில்லி விஜியே செய்து வருகிறார். ஏற்கனவே இல்லாத குழந்தையை இருக்கிறது எனக் கூறிய விஜி, இப்போது குழந்தைக்கு ஏற்பாடு செய்யும் வேலையில் இறங்கிவிட்டார். அதாவது கார்த்திக்கு காபியில் போதை மருந்தை கலந்து கொடுத்து, அதன் மூலம் குழந்தைகான ஏற்பாட்டை செய்து விடலாம் என திட்டம் தீட்டுகிறார்.

Zee Tamil Veera Serial July 14th Episode Veera Maran Locked Viji Romance Between Kanmani and Raghavan
Photo Credit:

இதற்கிடையில் வீரா - மாறன் மற்றும் கண்மணி என இவர்கள் மூவரும் சேர்ந்து வில்லி விஜிக்கு ஜூஸில் மதுபானத்தை கலந்து கொடுத்து, போதையில் அவரது உண்மை முகத்தை வெளிக் கொண்டு வர முயற்சி செய்கிறார்கள். இதில் வில்லி விஜியின் திட்டம் வெற்றி பெறவில்லை. மாறாக, வீரா - மாறன் - கண்மணி போட்ட திட்டம் நன்றாக ஒர்க் அவுட் ஆகிவிட்டது. அதனால் வில்லி விஜி போதையில், தனது அப்பா சாவுக்கு காரணமான ராமச்சந்திரனையும் ராமச்சந்திரன் குடும்பத்தையும் அழிப்பேன் எனக் கூறுகிறார். இவ்வாறு விஜி கூறுவதை வீரா தனது மொபைலில் வீடியோவாக பதிவேற்றம் செய்துவிடுகிறார்.

ரொமான்ஸோ ரொமான்ஸ்: இது வீராவுக்கும் மாறனுக்கும் அதிர்ச்சியைக் கொடுக்க, வீராவும் மாறனும் விஜியின் அப்பாவுக்கு ராமச்சந்திரனால் என்ன நடந்தது என்று குழம்பிப் போய் நிற்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க, கார்த்திக்கு போதை மருந்து கலக்கிய காபியை கண்மணி தனது கணவர் ராகவனுக்கு கொண்டு போய் கொடுக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்குள்ளும் ரொமான்ஸ் வேற லெவலில் ஒர்க்-அவுட் ஆகிக்கொண்டு உள்ளது. மொத்தத்தில் இந்த வாரம் வீரா சீரியல் ரசிகர்களுக்கு இந்த வாரம் செம என்டர்டைமெண்ட் காத்துக் கொண்டுள்ளது.

ரசிகர்கள் கேள்வி: வீரா நாடகம் ஜீ தமிழ் சேனலில் மாலையில் பிரைம் டைமில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்த சீரியல் மாலை 7.15 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ரசிகர்கள் மத்தியில் வீரா நாடகம் குறித்து கேள்வி ஒன்று எழுந்து வருகிறது. அதாவது பொதுவாகவே ஒரு சீரியலை முடிக்க வேண்டும் என்றால், அனைத்து கதாபாத்திரங்களையும் ஒரே இடத்தில் குவித்து விடுவார்கள். வீரா சீரியலில் தற்போது அதைத்தான் செய்துள்ளார்கள்.

Zee Tamil Veera Serial July 14th Episode Veera Maran Locked Viji Romance Between Kanmani and Raghavan
Photo Credit:

முடிகிறதா வீரா: எனவே வீரா சீரியலை முடிக்கப் போகிறார்களா? என கேள்வி கேட்டு வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் ஜீ தமிழில் தற்போது புதிதாக இரண்டு சீரியல்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. எனவே வீரா சீரியலை முடித்துவிட்டு, புதிதாக உருவாக்கப்படும் இரண்டு சீரியல்களில் ஒரு சீரியலை வீரா சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்களா என்ற கேள்வியையும் கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X