Veera: கையும் களவுமாக சிக்கிய விஜி கர்ப்பம்.. காரணம் யார்? கேள்விக்குறியான வீராவின் தங்கை வாழ்க்கை!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. ஏழையாக இருந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறிய ராமச்சந்திரனின் குடும்பத்தில் நடப்பவைதான் இந்த சீரியலின் கதை. ஏற்கனவே ராமச்சந்திரனின் முதல் மகனான ராகவனின் மனைவியாக வந்து, இந்த குடும்பத்தை அழிக்க சதிச் செயல்களை தீட்டிய விஜியையே, ஓவர் டேக் செய்யும் அளவுக்கு பயங்கரமான வில்லியாக உள்ளார், விஜி. கண்மணியை கையும் களவுமாக பிடித்த வீரா இப்போது விஜியை கையும் களவுமாக சிக்க வைக்க போராடியதற்கு ஒரு வழியாக பலன் கிடைத்துவிட்டது எனக் கூறும் அளவுக்கு இன்றைய எபிசோடில் தரமான திருப்புமுனைகள் உள்ளது.

ராமச்சந்திரன் குடும்பத்தை அழிக்க வீட்டிற்குள்ளே இருக்கும் வில்லிதான் விஜி. விடிந்தால் ராமச்சந்திரனின் மகன் கார்த்திக்கும் வீராவின் தங்கை பிருந்தாவுக்கும் விடிந்தால் கல்யாணம் என இருந்த நேரம் பார்த்து, கார்த்திக்கிற்கு மயக்க மருந்து கொடுத்து, அவரது அறைக்குள் சென்று, கார்த்தின் தனது வாழ்க்கையையே நாசமாக்கிவிட்டார் எனக் கூறி, கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். கார்த்திக்கும் வேண்டா வெறுப்பாக விஜியின் கழுத்தில் தாலி கட்டினார். அதன் பின்னர் பிருந்தாவையும் திருமணம் செய்து கொண்டார்.

Zee Tamil Veera Serial July 9th Episode Viji Becomes Pregnant Whole Family Getting Shocked
Photo Credit:

விஜி வீட்டிற்குள் மருமகளாக மாறியதில் இருந்து, குடும்பத்தை அழிக்கவும், குடும்பத்தை நாசமாக்கவும் பல தில்லுமுள்ளு வேலைகளைப் பார்த்து வருகிறார். இப்படியான நிலையில் தனது அம்மாவை, ராமச்சந்திரனின் வீட்டில் உள்ள பழைய அறையில் யாருக்கும் தெரியாமல் தங்க வைத்துள்ளார். விஜி அம்மா யார் என்று ராமச்சந்திரனுக்கும் அவரது தங்கை வள்ளிக்கும் தெரியும் என்பதால், யாருக்கும் தெரியாமல் கில்லி படத்தில் விஜய், த்ரிஷாவை மறைமுகமாக தங்க வைத்ததைப்போல தங்க வைத்து, சாப்பாடு கொடுத்து வருகிறார்.

இன்றைய எபிசோட்: வீட்டை விட்டு வெளியே போனாலும் விஜியின் நடவடிக்கைகளை தொடர்ந்து கவனித்து வரும் வீராவுக்கும் மாறனுக்கும் விஜியின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் வருகிறது. பழைய அறைக்குள் வேறு யாரோ இருக்கிறார்கள் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்து கொண்ட அவர்கள் அது யார் என்பது குறித்து வெளிக்கொண்டு வர முயற்சிகள் எடுக்கிறார்கள். அந்த முயற்சியில் வெற்றியும் பெருகிறார்கள். இதுதான் இன்றைய எபிசோட்.

சிக்கிய விஜி: அதாவது வீடு முழுக்க எலி தொல்லைகள் அதிகமாகிவிட்டது. எனவே கொசு மருந்து அடிப்பது போல மருந்து அடித்தால் வீட்டில் உள்ள எலிகள் அனைத்தும் வெளியே வந்துவிடும் என கூறி மருந்து அடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடிக்கும் மருந்து எலி மருந்து இல்லை. மாறாக, அவர்கள் வீடு முழுவதும் சிரிப்பை வரவழைக்கும் கேஸை அடிக்கிறார்கள். இதனால் பழைய அறைக்குள் ஒளிந்துகொண்டு உள்ள விஜியின் அம்மா சிரித்து மாட்டிக் கொள்கிறார்.

Zee Tamil Veera Serial July 9th Episode Viji Becomes Pregnant Whole Family Getting Shocked
Photo Credit:

கர்ப்பத்திற்கு யார் காரணம்: விஜியின் இந்த சதிச் செயல்களைக் கண்டு ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் மற்றும் வள்ளி விஜியை வீட்டை விட்டு வெளியே துரத்துகிறார்கள். கையும் களவுமாக பிடிபட்ட விஜியும் வீட்டை விட்டு வெளியேறுகிறார். இப்படியான நிலையில் வீட்டு வாசலிலேயே விஜி மயக்கம் போட்டு விழுகிறார். மருத்துவர் வரவழைக்கப்பட்டு பரிசோதித்துப் பார்த்ததில் விஜி கர்ப்பமாக இருக்கிறார் என்று குண்டைத்தூக்கிப் போடுகிறார். இது மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. குறிப்பாக கார்த்திக்கின் காதல் மனைவியும் வீராவின் தங்கையுமான பிருந்தாவுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது. விஜியை வீட்டை விட்டுத் துரத்தியாச்சு, கண்மணியும் திருந்திவிட்டால் இனி குடும்பத்திற்கு நிம்மதி என நினைத்தால், விஜி கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. விஜியை ஆரம்பத்தில் இருந்தே கார்த்திக் விலக்கி வைத்துள்ளதால் இந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் என்ற கேள்வி ராமச்சந்திரன் குடும்பத்தினர் மத்தியில் எழுந்துள்ளது.

More from Filmibeat

Read more about: zee tamil karthi serial veera maaran
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X