Veera: ஒன்றரை மணி நேரம் வீரா சீரியல்.. அடடே செம ஃபன் எபிசோட்.. மிஸ் பண்ணீடாதீங்க!
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியல் நாளை அதாவது ஆகஸ்ட் 10ஆம் தேதி மாலை 7.30 மணி முதல் இரவு 9 மணி வரை ஆகஸ்ட் மாத ஸ்பெஷலாக ஒளிபரப்பாகவுள்ளது. இது குறித்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறப்பு வீடியோ வெளியிடப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
400 எபிசோட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் கடந்த வெள்ளிக்கிழமை அதாவது, ஆகஸ்ட் 8ஆம் தேதி எபிசோடில், " மனம் திருந்திய முன்னாள் வில்லி கண்மணி கர்ப்பமாக இருக்கிறார் என மொத்த குடும்பமும் நிம்மதியாக இருந்தது. அப்படி இருக்கும்போது, வில்லி விஜி குடும்பத்தின் நிம்மதியை கெடுக்க சில பல வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதில் வீராவும் மாறனும் வீட்டை விட்டு வெளியேறி ராமச்சந்திரனின் வீட்டுக்கு அருகிலேயே, குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்த வீட்டிற்கு வில்லி விஜி பேச்சைக் கேட்டு ஒருவர் தீ வைக்கிறார்.

வீட்டிற்குள் வீராவும் மாறனும் தூங்கிக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் வள்ளியும் கார்த்தியும் ஓடி வந்து வீராவையும் மாறனையும் எழுப்ப, வள்ளி பாசத்தில் எரிகிற வீட்டிற்குள்ளே சென்று இருவரையும் மீட்டு வருகிறார். அதன் பின்னர் எரிகிற வீட்டிற்குள் மீண்டும் சென்ற வீரா, வீட்டிற்குள் இருந்த பெட்டியை எடுத்துக் கொண்டு வருகிறார். இதனால் வீரா மயக்கம் அடைகிறார். பெட்டிக்குள் மாறன் தனது அம்மாவுடன் இருக்கும் குழந்தைப் பருவ புகைப்படம் உள்ளது. இருவருக்கும் இடையில் செம லவ் டிராக் ஒர்க் அவுட் ஆனது. இப்போது இருவருக்கும் வீடு இல்லாததால், இருவரும் மாறனின் நண்பர் வீட்டில் இன்று இரவு தங்கிக் கொள்ள புறப்படுகிறார்கள். அனைவரும் அவர்களை போக வேண்டாம் எனக் கூறுகிறார்கள். ஆனாலும் வீராவும் மாறனும் வெளியேறுகிறார்கள்.
மயக்கம்: அந்த நேரம் பார்த்து ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வீட்டு வாசலிலேயே விழுகிறார். இதனால் மொத்த குடும்பமும் பதறியடித்துக் கொண்டு, ராமச்சந்திரனை நோக்கி ஓடுகிறார்கள். ராமச்சந்திரனை மருத்துவமனையில் அனுமதிக்கிறார்கள். இப்படி இருக்கும்போது வெள்ளிக்கிழமை எபிசோட் முடிந்தது.

மெகா எபிசோட்: ராமச்சந்திரனுக்கு என்ன ஆகுமோ ஏது ஆகுமோ என அனைவரும் பயந்து கொண்டு உள்ளார்கள். இப்படி இருக்கும்போது ரசிகர்களுக்கு சீரியலின் மீது சுவாரஸ்யத்தைக் கூட்ட, நகைச்சுவை கலைஞர்கள் நவீன் மற்றும் யோகி குருஜி சீடர்களாக ராமச்சந்திரன் வீட்டுக்குள் செல்கிறார்கள். இவர்கள் இருவரும் செய்யும் காமெடி கலாட்டாவை மெகா எபிசோடாக ஒளிபரப்பவுள்ளது ஜீ தமிழ் தொலைக்காட்சி. இந்த மெகா எபிசோட் ரசிகர்களுக்கு மிகவும் ஜாலியாக இருக்க உள்ளது. அதேபோல், மற்ற சீரியல்களுக்கும் இது போல மெகா எபிசோட்கள் ஒளிபரப்ப அதிக வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications











