Veera: வீரா குடும்பமே மொத்தமாக கேட்கும் லப்பு டப்பு.. இன்னைக்கு ஒரே செண்டிமெண்ட் தான் போங்க!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் அடுத்தடுத்து பல ட்விஸ்ட் & டர்ன்ஸ் உடன் சென்று கொண்டுள்ளது. புது வில்லி விஜி என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டாலும் வீராவும் மாறனும் சேர்ந்து அவை அனைத்திற்கும் பதிலடி கொடுத்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது இன்றைக்கு அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி சீரியலில் என்னென்ன நடக்க உள்ளது என்பது குறித்து காணலாம்.
ஆகஸ்ட் மாதத்தை ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் மூட்டுவதற்காக நகைச்சுவை நடிகர்களான தினேஷ் மற்றும் யோகி ஆகியோரை இந்த வார எபிசோடுகள் முழுவதும் வைத்து படமாக்கி உள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. தயாரிப்பு தரப்பின் இந்த பிளான் ஒர்க் -அவுட் ஆனதா இல்லையா என்பது வீரா சீரியல் ப்ரோமோ வீடியோக்களுக்கு ரசிகர்கள் அளிக்கும் கமெண்ட்களை பார்த்தாலே தெரியும்.
வில்லி விஜி வீராவை கொல்ல நினைத்து போட்ட பிளான் சொதப்பியதால், வீட்டை விட்டு வெளியே இருந்த மாறனும் வீராவும் இப்போது வீட்டுக்குள் வந்துவிட்டார்கள். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத வில்லி விஜிக்கு ஷாக். இப்போது வில்லி விஜி மற்றும் வீராவுக்கும் இடையிலான காட்சிகள், வீரா, மாறன் ரொமான்ஸ் காட்சிகள் என சீரியல் நகரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
இன்றைய எபிசோட்: ஆனால், குருஜி மற்றும் அவரது சீடன் என நகைச்சுவை கலைஞர்கள் தினேஷ் மற்றும் யோகி என இருவரையும் சீரியலில் களமிறக்கி எபிசோட்களை கடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இன்றைய எபிசோடில் பழைய வில்லி கண்மணி தற்போது கர்ப்பமாக இருப்பதால், அவர் ஸ்கேன் செய்யப் போகிறார். அப்படி போகும் போது மொத்த குடும்பமும் அவருடன் போகிறது.

மொத்த குடும்பமும்: அதாவது கண்மணி ஸ்கேனில் தனது குழந்தையைப் பார்த்து, குழந்தையின் இதயத்துடிப்பை கேட்டுவிட்டு, அவரது கணவர் ராகவனை உள்ளே அழைக்கும்படி கேட்க, ராகவனை உள்ளே வரச்சொல்ல சென்ற மருத்துவரிடம் நாஙளும் உள்ளே வருகிறோம், எங்கள் குடும்பத்தின் முதல் வாரிசு என்று செண்டிமெண்ட் டயலாக்குகளைப் போட்டு, மொத்த குடும்பமும் ஸ்கேன் சென்டருக்குள் சென்று நிற்கிறார்கள். இந்த ப்ரோவைப் பார்த்த ரசிகர்களோ, பல ஸ்கேன் சென்டர்களில் கணவனையே உள்ளே அனுமதிக்க மாட்டார்கள் காரணம், அரசு விதிமுறைகள். ஆனால், இங்கு மொத்த குடும்பமும் போய் நிற்கிறதே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











