Veera: அடித்து ஆடும் வில்லி விஜி.. பீஸ் பீஸா கிழிந்த பாண்டியின் ஆட்டோ.. கதறி அழும் வீரா குடும்பம்!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் கடந்த சில மாதங்களாக ஒரே வில்லி விஜியின் ஆட்டமாகத் தான் இருந்தது. கடந்த வாரத்தில் இருந்து தான் வீராவுக்கும் மாறனுக்கும் இடையில் லவ் டிராக் ஓட்ட ஆரம்பித்தார்கள். அதற்குள் என்ன ஆனதோ தெரியவில்லை, யார் கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை மீண்டும் வில்லி விஜி அடித்து ஆட ஆரம்பித்துவிட்டார். வீராவின் குடும்பம் கதறிக்கொண்டு இருக்கிறது.

கார்த்தியை விட்டுப் பிரிய வேண்டும் என்றால் ராமச்சந்திரனும் வள்ளியும் தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வில்லி விஜி சொன்னதை அடுத்து, கார்த்தி எடுத்த முடிவால், வில்லி விஜி மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டார். வீட்டிற்குள் வந்த வில்லி விஜி குடும்பத்தில் எப்படி எல்லாம் திருட்டுத்தனங்களை செய்யலாம் என்று எல்லாம் முயற்சி செய்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், மொத்த குடும்பத்தையும் பிரிக்க தினமும் ஏதாவது ஒரு திட்டத்தை தீட்டி வருகிறார்.

Zee Tamil Veera Serial Promo August 4th Episode Promo Villi Viji Starts Her Attacks

இப்படி இருக்கும்போது தனக்கு இடஞ்சலாக உள்ள வீராவை கண்ணீரில் கதற விட வில்லி விஜி போட்ட பிளான் சிறப்பாக ஒர்க் அவுட் ஆக இப்போது, வீரா, கண்மணி, பிருந்தா, இவர்களின் தயார் என எல்லோரும் கண்ணீரில் மூழ்கி விட்டார்கள். வீராவின் அண்ணன் பாண்டியனின் பெயரை ஆட்டோ ஸ்டாண்டுக்கு வைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்த குடும்பமும் கொஞ்சம் நிம்மதியாக அதற்கான வேலைகளை செய்து வந்தார்கள் அப்படி இருக்கும்போது, வில்லி விஜி காவல்துறைக்கு போன் செய்து வீரா ஆட்டோவில் போதைப் பொருள் கடத்தியதாக தெரிவித்தார்.

பாண்டியின் ஆட்டோ: இதையடுத்து வந்த காவல்துறையினர் பாண்டியின் ஆட்டோவை சோதனை செய்கிறேன் என ஆட்டோவையே கிழித்து நார அடித்துவிட்டார்கள். இதைப் பார்த்த வீராவின் குடும்பத்தினர் கதறி அழுது கொண்டு இருந்தார்கள். இதைப் பார்த்த வில்லி விஜி மற்றும் வில்லி விஜியின் அம்மா வில்லத்தனமான சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.

என்ன செய்யப்போகிறார்கள்: அதன் பின்னர் காவல்துறையினர் தங்களுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்து விட்டார்கள் எனவே மன்னித்துக் கொள்ளுங்கள் எனக் கூறுகிறார்கள். நாளை காலை ஆட்டோ ஸ்டாண்டில் பாண்டியின் ஆட்டோவை கொண்டு போய் நிறுத்த வேண்டும். அப்படி இருக்கும்போது என்ன செய்யப்போகிறார்கள் வீராவும் மாறனும் என்பதுதான் இன்றைய எபிசோடாக இருக்க உள்ளது. இப்படியான நிலையில் ரசிக்ர்கள் பலரும் தங்களது வேதனைகளை கமெண்ட் செக்‌ஷனில் கொட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

Zee Tamil Veera Serial Promo August 4th Episode Promo Villi Viji Starts Her Attacks

ரசிகர்கள் கமெண்ட்ஸ்: அதாவது இத்தனை பேர் இருக்கிறார்கள் அந்த வில்லி விஜியை எதுவும் செய்ய முடியலயே, வீராவுக்கும் மாறனுக்கும் இப்பத்தான் லவ் டிராக் ஓட்ட ஆரம்பிச்சாங்க, அதுக்குள்ள இப்படி ஒரு எபிசோடா? வில்லி விஜியை மாற்றுங்கள் என்று எல்லாம் புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் வில்லி விஜியாக நடித்து வருபவர் மிகச் சிறப்பாகவே தனது கதாபாத்திரத்தை நடித்து வருகிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சில ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X