Veera: அப்படி போடு.. வில்லி விஜி கழுத்தை பிடித்த வீரா.. பத்ரகாளியாவே மாறிட்டாங்க.. இன்னைக்கு சம்பவம் இருக்கு!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் கடந்த சில மாதங்களாக ஒரே வில்லி விஜியின் ஆட்டமாகத் தான் இருந்தது. கடந்த வாரத்தில் இருந்து தான் வீராவுக்கும் மாறனுக்கும் இடையில் லவ் டிராக் ஓட்ட ஆரம்பித்தார்கள். இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்த சம்பவம் தயாராக உள்ளது. அதாவது வில்லி விஜியை வீரா கழுத்தைப் பிடித்து நெறிக்கும் சம்பவம் இன்று உள்ளது.
கார்த்தியை விட்டுப் பிரிய வேண்டும் என்றால் ராமச்சந்திரனும் வள்ளியும் தனது காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வில்லி விஜி சொன்னதை அடுத்து, கார்த்தி எடுத்த முடிவால், வில்லி விஜி மீண்டும் வீட்டிற்குள் வந்துவிட்டார். வீட்டிற்குள் வந்த வில்லி விஜி குடும்பத்தில் எப்படி எல்லாம் திருட்டுத்தனங்களை செய்யலாம் என்று எல்லாம் முயற்சி செய்து வருகிறார். இது மட்டும் இல்லாமல், மொத்த குடும்பத்தையும் பிரிக்க தினமும் ஏதாவது ஒரு திட்டத்தை தீட்டி வருகிறார்.

மொத்த குடும்பமும் கொஞ்சம் நிம்மதியாக அதற்கான வேலைகளை செய்து வந்தார்கள் அப்படி இருக்கும்போது, வில்லி விஜி காவல்துறைக்கு போன் செய்து வீரா ஆட்டோவில் போதைப் பொருள் கடத்தியதாக தெரிவித்தார். தனக்கு இடைஞ்சலாக உள்ள வீராவை கண்ணீரில் கதற விட வில்லி விஜி போட்ட இந்த பிளான் சிறப்பாக ஒர்க் அவுட் ஆனது. இதனால், வீரா, கண்மணி, பிருந்தா, இவர்களின் தாயார் என எல்லோரும் கண்ணீரில் மூழ்கி விட்டார்கள். வீராவின் ஆட்டோவை சோதனை என்ற பெயரில் காவல்துறை நாசம் செய்து விட்டது.
கடைசியாக காவல்துறை தங்களுக்கு யாரோ தவறான தகவல் கொடுத்து விட்டார்கள் என்று கூறிய காவல்துறையிடம் எப்படியோ பேசி, இந்த தகவலைக் கொடுத்தது யார் என்று தெரிந்து கொண்ட மாறனும் வீராவும், வில்லி விஜியை அடிக்க ரவுண்டு கட்டுகிறார்கள். அதாவது வீரா, மாறன், கண்மணி ராகவன், பிருந்தா, கார்த்தி என ஆறு பேரும் சேர்ந்து ரவுண்டு கட்டுகிறார்கள்.
பத்ரகாளியாக மாறிய வீரா: இவர்களுக்கு உண்மை தெரியாது என நினைத்துக் கொண்டு இருந்த வில்லி விஜி எப்போதும் போல அப்பாவித்தனமாக பேசிக்கொண்டு இருந்தார். அப்போது வீரா வில்லி விஜியின் கழுத்தை பிடித்து நசுக்குகிறார். அப்போது தடுக்க வந்த வில்லி விஜியின் அம்மாவைப் பார்த்து கைகளை நீட்டி முறைத்துப் பார்க்கிறார். பார்ப்பதற்கே பத்ரகாளி போல காட்சி அளிக்கிறார் வீரா.

ரசிகர்கள் மகிழ்ச்சி: பல நாட்களாக ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த எபிசோட் இன்றைக்கு ஒளிபரப்பாகவுள்ளது. வீரா சீரியல் ரசிகர்களுக்கு இன்னைக்கு செம ட்ரீட் காத்துக் கொண்டு உள்ளது. பல நாட்களாக வில்லி விஜியைப் பார்த்து எரிச்சல் அடைந்து கொண்டு இருந்த ரசிகர்கள் இன்றைய எபிசோடைப் பார்த்துவிட்டு நிம்மதியாக தூங்குவார்கள் எனக் கூறும் அளவுக்கான எபிசோடாக இன்றைய எபிசோட் இருக்கப்போகிறது. ரசிகர்கள் இப்போதே இன்றைய ப்ரோமோ வீடியோவுக்கு கமெண்ட் செக்ஷனில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள். வீரா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











