Veera: வாரிசு வரப்போகுது.. புது வில்லி விஜியால்.. பழைய வில்லி கண்மணி கர்ப்பம்.. வீரா சீரியலில் இன்று!

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா சீரியலில் இப்போதுதான் கொஞ்சம் நல்லது நடந்து கொண்டு இருக்கிறது. மனம் திருந்திய கண்மணி குடும்ப நலனுக்காக வில்லி விஜியை ஓடவிட தங்கை வீராவுக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். இப்படியான நிலையில் பழைய வில்லி கண்மணி தற்போது கர்ப்பமாக இருப்பது, ராமச்சந்திரன் குடும்பத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

சூழ்ச்சி செய்து ராமச்சந்திரனின் இரண்டாவது மகன் கார்த்தியை திருமணம் செய்து கொண்டு ராமச்சந்திரன் வீட்டு மருமகள் ஆனார் வில்லி விஜி. வீட்டின் மருமகளாக மாறிய பின்னர் வீட்டு விவகாரங்களில் விஷத்தையே கக்கிக் கொண்டு இருந்தார். விஜியின் ஆட்டத்தை எப்படியோ, மோப்பம் பிடித்த வீராவும் மாறனும் விஜியை கையும் களவுமாக பிடிக்க காத்திருந்தனர்.

Zee Tamil Veera Serial Promo August 6th Episode Veera Sister Kanmani Pregnant
Photo Credit:

சும்மாவே இருந்தவனுக்கு அடுச்சது லாட்டரி என்பது போல, செத்துப் போனதாக சொன்ன தனது அம்மாவை மறைமுகமாக அழைத்து வந்து, வீட்டில் தங்க வைத்தார் வில்லி விஜி. இதை பயன்படுத்திக் கொண்டு விஜியை அம்பலப்படுத்தி வெளி அனுப்ப முயற்சி செய்யும்போதுதான், தான் கர்ப்பமாக இருப்பதாக நாடகம் ஆடினார். யாருமே விஜியை நம்பாத போது, ராமச்சந்திரன் மட்டும் நம்பியது எல்லாம் ரசிகர்களுக்கே கடுப்பை கிளப்பியது.

வீரா, மாறன்: விஜி கர்ப்பமாக இல்லை என்பதை நிரூபிக்க வீராவும் மாறனும், வள்ளியும் திட்டம் போட்டுக் கொண்டு இருந்தார்கள். பொய் கர்பத்தை உண்மையாக்க வேண்டும் என வில்லி விஜியின் தாயார் வாங்கி வந்து கொடுத்த பலான பலான லேகியத்தை கார்த்திக்கு கொடுத்து, காரியத்தை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தார் வில்லி விஜி. அதற்காக கார்த்திக்கு பிரத்யேகமாக தயார் செய்த, காபியை கொடுக்க முயற்சி செய்தபோது, அந்த காபியை வாங்கிய கண்மணி அதை தனது கணவர் ராகவனுக்கு கொடுக்கிறார். ராகவனோ தான் குடித்தது மட்டும் இல்லாமல், கண்மணிக்கு கொடுக்கிறார்.

விஜி போட்ட பிளான்: வில்லி விஜி தனக்கு போட்ட பிளானில், குழந்தைக்கு ஏற்பாடு செய்து கொண்டார்கள் ராகவனும் கண்மணியும். வில்லி விஜி கர்ப்பமாக எல்லாம் இல்லை என்ற உண்மை வெளியே வந்து பஞ்சாயத்துக்கு போய், பல விஷயங்கள் நடந்த பின்னரும், வில்லி விஜி இன்னும் வீட்டில் தான் உள்ளார். இப்படி இருக்கும்போது, கண்மணிக்கு வாந்தி, தலைசுற்றல் ஏற்படுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் பதறி அடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Zee Tamil Veera Serial Promo August 6th Episode Veera Sister Kanmani Pregnant
Photo Credit:

கர்ப்பம்: அதன் பின்னர் கண்மணியை செக் செய்த மருத்துவர், யாரும் பயப்பட வேண்டாம், உங்க வீட்டுக்கு வாரிசு வரப்போகிறது எனக் கூற மொத்த குடும்பமும் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை போல செம மகிழ்ச்சி ஆகிவிடுகிறார்கள். இன்றைய எபிசோடில் செம மகிழ்ச்சியான சம்பவம் காத்துக் கொண்டு உள்ளது. இந்த மகிழ்ச்சியான சம்பவத்தின் போது, ஃப்ரேமில் வில்லி விஜியே இல்லாதது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டும் இல்லாமல் அடுத்து வில்லி விஜியின் ப்ளான், வயிற்றில் இருக்கும் குழந்தையை அழிப்பதாகத் தான் இருக்கும் எனவும் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள். வீரா சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.30 மணிக்கு ஒளிப்பரப்படுகிறது. ஜீ5 ஓடிடி தளத்திலும் ஒளிபரப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X