Veera: ராமச்சந்திரனுக்கு ஹார்ட் அட்டாக்.. வீராவின் குடிசைக்கு தீ.. வில்லி விஜி அமோகம்!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் வீரா. நேற்றுடன் அதாவது ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் 400 வது எபிசோடை எட்டியது. இதற்காக மொத்த குழுவும் கேக் வெட்டி எல்லாம் கொண்டாடினார்கள்.
இன்றைய எபிசோடில், மனம் திருந்திய முன்னாள் வில்லி கண்மணி கர்ப்பமாக இருக்கிறார் என மொத்த குடும்பமும் நிம்மதியாக இருந்தது. அப்படி இருக்கும்போது, வில்லி விஜி குடும்பத்தின் நிம்மதியை கெடுக்க சில பல வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார். அதில் வீராவும் மாறனும் வீட்டை விட்டு வெளியேறி ராமச்சந்திரனின் வீட்டுக்கு அருகிலேயே, குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது, அந்த வீட்டிற்கு வில்லி விஜி தீ வைக்கிறார்.

வீட்டிற்குள் வீராவும் மாறனும் உறங்கிக் கொண்டு இருக்கிறார்கள். முதலில் வள்ளியும் கார்த்தியும் ஓடி வந்து வீராவையும் மாறனையும் எழுப்ப, வள்ளி பாசத்தில் எரிகிற வீட்டிற்குள்ளே சென்று இருவரையும் மீட்டு வருகிறார். இப்போது இருவருக்கும் வீடு இல்லாததால், இருவரும் மாறனின் நண்பர் வீட்டில் இன்று இரவு தங்கிக் கொள்ள புறப்படுகிறார்கள். அனைவரும் அவர்களை போக வேண்டாம் எனக் கூறுகிறார்கள். ஆனாலும் வீராவும் மாறனும் வெளியேறுகிறார்கள்.
ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி: அந்த நேரம் பார்த்து வில்லி விஜி ஒழிந்தது தொல்லை என மகிழ்ச்சியாக இருக்கிறார். அந்த நேரம் பார்த்து ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு வீட்டு வாசலிலேயே விழுகிறார். இதனால் மொத்த குடும்பமும் பதறியடித்துக் கொண்டு, ராமச்சந்திரனை நோக்கி ஓடுகிறார்கள். ராமச்சந்திரனுக்கு நெஞ்சு வலி வந்தது வில்லி விஜிக்கு மகிழ்ச்சியானது தான் என்றாலும், ராமச்சந்திரன் வீராவையும் மாறனையும் சமாதானப்படுத்தி வீட்டிலேயே தங்க வைக்கவும் வாய்ப்பு உள்ளது. அப்படி மட்டும் நடந்தது என்றால் வில்லி விஜிக்கு சீக்கிரமே சங்கு உறுதி.


Click it and Unblock the Notifications











