Veera: வீராவின் திட்டத்தை கண்டுபிடித்த வில்லி.. மாறனைக் கொல்ல சதி.. சொதப்பிய கண்மணி.. வீரா சீரியலில் இன்று
சென்னை: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியல் மிகவும் பரபரப்பான கட்டத்தில் உள்ளது. சீரியல் போகின்ற நிலையைப் பார்த்தால் எப்படியும் இந்த வாரத்திலோ அல்லது அடுத்த வாரத்திலோ சீரியலை மொத்தமாக முடித்து விடுவார்களோ எனவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இதெல்லாம், ஒரு புறம் இருக்கட்டும். இன்றைய எபிசோடில் என்னென்ன நடக்க உள்ளது என்பதை இங்கு காணலாம்.
தான் கர்ப்பமாக இருப்பதாக பொய் நாடகம் ஆடிக் கொண்டு இருக்கும் வில்லி விஜிக்கு ராமசந்திரனின் உறவினர்கள் அனைவரும் இணைந்து நலங்கு வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி இருக்கும் போது, உறவினர்கள் வீராவின் அம்மாவை நலங்கு வைக்கச் சொல்ல, அதற்கு வீராவின் அம்மாவோ மறுப்பு தெரிவித்தார். இறுதியாக உறவினர்கள் வற்புறுத்துகிறார்கள் என்பதால் நலங்கு வைக்க முன் வந்தார். உடனே அவர்களை கேவலமாக பேசி திட்டி அசங்கப்படுத்திவிடுகிறார் வில்லி விஜி.

இன்றைய எபிசோட்: இதனால் உறவினர்கள் முன்னால் பெருத்த அவமானத்தை எதிர் கொள்கிறார் வீராவின் அம்மா. இந்த சூழலில் வீரா வீட்டிற்குள் வருகிறார். இத்துடன் நேற்றைய எபிசோட் முடிந்தது. வில்லி விஜிக்கும் வீராவின் தங்கை பிருந்தாவுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது. இதில் இடையில் தலையிட்ட வீரா, விஜியின் சுயரூபம் கொஞ்ச நேரத்தில் நிரூபிக்கப்படும் என மனதில் நினைத்துக் கொண்டு, தனது தங்கை பிருந்தாவை அழைத்துக் கொண்டு வெளியே போகிறார்.
சொதப்பிய விஜி: இப்படி இருக்கும்போது, வீட்டில் இருந்து வெளியே வந்த கண்மணி தனது தங்கை வீராவுக்கு போன் செய்து, மாறன் ரிப்போர்ட்டுடன் வந்துவிடுவார் தானே எனக் கேட்கிறார். இதனை வில்லி விஜி கேட்டு விடுகிறார். இதனால், கண்மணி விஜியிடம் உண்மையைச் சொல்லி விடுகிறார். மாறன் மருத்துவமனைக்குச் சென்று உனது ரிபோர்ட்டை வாங்கி வரப் போயுள்ளார் எனக் கூறுகிறார். இதைக் கேட்ட வில்லி விஜி, மாறனைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்.

மாறனைக் கொல்ல சதி: அதாவது உடனே தனது அடி ஆட்களுக்கு போன் செய்து, மாறன் எனக்கு எதிரான ஆதாரத்துடன் வீட்டுக்கு வரவுள்ளான். மாறன் வீட்டிற்கு வரக்கூடாது எனக் கூறுகிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் இன்றைய எபிசோட். வில்லி விஜியின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. கண்மணி தான் வில்லி என நினைத்தால் வில்லி விஜி, 10 கண்மணிகளுக்கு சமமாக இருப்பாள் போலத் தெரிகிறதே என ரசிகர்களே புலம்பும் அளவுக்கு வில்லி விஜியின் ஆட்டம் ரொம்பவும் அதிகமாக உள்ளது. பார்க்கலாம் போகப் போக என்ன நடக்கிறது என்பதை. வீரா சீரியல் மாலை 7. 30 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications











