Veera: சிக்கிய வில்லி விஜி.. அடித்து துரத்தும் வள்ளி.. வீரா சீரியலில் இன்னைக்கு ஒரே ஜமாய்தான் போங்க!

சென்னை: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கார்த்திகை தீபம் சீரியலுக்கு அடுத்து ஜீ தமிழில் அதிக வரவேற்பைப் பெற்ற சீரியலாக உள்ளது. இந்த சீரியல் இப்போது நிறைவுக்கு வருகிறது என்ற பேச்சுகள் ஒருபுறம் ஓடிக்கொண்டு இருந்தாலும், இன்றைய எபிசோடில் தரமான சம்பவங்கள் காத்துக் கொண்டுள்ளது.

பிரைம் டைமான 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் தற்போது சீரியலில் இருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் தொடங்கி, ரசிகர்களுக்கே எரிச்சலைக் கொடுத்து வரும் கதாபாத்திரம் என்றால் அது வில்லி விஜி கதாபாத்திரம்தான். வீரா சீரியலில் கண்மணி தான் வில்லி என அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கும் போது, கண்மணி படுச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர்னு சொல்லுற அளவுக்கு வில்லத்தனத்தில் சம்பவத்துக்கு மேல் சம்பவம் செய்து வருகிறார் வில்லி விஜி.

Zee Tamil Veera Serial Promo July 28th Valli Gives Punches To Villi Viji and Throw Out Side of House
Photo Credit:

வில்லி விஜி கதாபாத்திரம் மட்டும் இல்லையென்றால், சீரியலின் இந்த பேஸ் இந்த அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்குமா என்பதே சந்தேகம் தான். காரணம் மற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தண்ணீ காட்டும் அளவுக்கு இந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமச்சந்திரன் வீட்டிற்குள் தன்னை, பெற்றோர்களை இழந்தவள் எனக் கூறி உள்ளே வந்த விஜி, அதன் பின்னர் ராமச்சந்திரனின் இரண்டாவது மகன் கார்த்தியை சதி செய்து திருமணம் செய்து கொள்கிறார்.

அம்பலப்பட்ட விஜி: அதில் இருந்து தான் வில்லி விஜியின் சதி வேலைகள் டாப் கியரில் நகர்கிறது. ஏற்கனவே வில்லியாக இருந்த கண்மணியே திருந்தும் அளவுக்கு விஜி ரொம்பவும் ஆட்டம் காட்டி வருகிறார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக நாடகம் ஆடி வருகிறார். இப்படி இருக்கும்போது, விஜி கர்ப்பமாக இல்லை என்பதை, நிரூபிக்க வீரா, மாறன், கார்த்தி, வள்ளி என அனைவரும் போராடி, ஒரு வழியாக உறவினர்கள் அனைவரது முன்னிலையில் விஜி கர்ப்பமாக இல்லை என நிரூபிக்கிறார்.

Zee Tamil Veera Serial Promo July 28th Valli Gives Punches To Villi Viji and Throw Out Side of House
Photo Credit:

வள்ளி அதிரடி: இப்படி இருக்கும்போது, விஜியை வள்ளி அடித்து துரத்துகிறார். விஜியே தன்னை மன்னித்து விடும் படி கெஞ்சுகிறார். ஆனால் வீரா, வள்ளி, கார்த்தி, மாறன், ராகவன், கண்மணி என அனைவரும் உறவினர்கள் முன்னிலையில், வீட்டை விட்டு அடித்து துரத்துகிறார்கள். இன்றைய எபிசோடில் இதுதான் நடக்கவுள்ளது. வில்லி விஜியின் சுயரூபம் தெரிந்ததால், ராமச்சந்திரன் மிகவும் வருத்தத்திற்கு ஆளாகிறார்.

துக்கத்தில் ராமசந்திரன்: மேலும், தனது மகன் கார்த்தி அவ்வளவு முறை சொல்லியும் மகனை நம்பவில்லையே என்ற வருத்ததில் உள்ளார். விஜியை அனைவரும் வீட்டை விட்டு துரத்தும் போது, ராமச்சந்திரன் மட்டும் வீட்டுக்குள் சோகமாக இருக்கிறார். அவருக்கு க்ளோஸ் போவதால், அவர் ஏதாவது தவறான முடிவு எடுக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுகிறது. காத்திருந்து பார்க்கலாம். மொத்தத்தில் இன்றைய எபிசோடில் செம ஜமாயான காட்சிகள் உள்ளது. மிஸ் பண்ணீடாதீங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X