Veera: வீடேறும் விஷம்.. வில்லி விஜியின் செகண்ட் இன்னிங்ஸ் ஸ்டார்ட்.. ராமச்சந்திரனுக்கு வந்த சோதனை!
சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியல் நாளுக்கு நாள் பரபரப்பாகவே சென்று கொண்டு உள்ளது. ஒரு பக்கம் சீரியல் முடியப்போகிறது. வீரா சீரியல் ஒளிபரப்பாகும் நேரத்தில் ஆல்யா மானசாவின் புது சீரியல் ஒளிபரப்ப தொலைக்காட்சி தரப்பில் முடிவு எடுத்து விட்டார்கள் என்று பேச்சுகள் அடிபட்டுக் கொண்டு இருக்க, " கொஞ்சம் இருங்க பாய்" என்பது போல சீரியலை வேற லெவலுக்கு கொண்டு போய்க்கொண்டு உள்ளார் இயக்குநர். அந்த வகையில் இன்றைய அதாவது ஜூலை 30ஆம் தேதி எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
வீரா சீரியல் இவ்வளவு சுவாரஸ்யமாக போக காரணமே வில்லி விஜி தான். கழுவுற மீனுல நழுவுற மீனாக இருக்கும் வில்லி விஜியை, ராமச்சந்திரனின் மொத்த குடும்பமும் சேர்ந்து எதுவும் செய்ய முடியவில்லை. அப்பாவியாக வீட்டுக்குள் வந்த வில்லி விஜி, அதன்பின்னர் அடிப்பாவி இதையெல்லாம் செஞ்சது நீயா எனக் கேட்கும் அளவுக்கு பல தில்லாலங்கடி வேலைகளையும் நாசகர வேலைகளையும் செய்து வருகிறார்.

வில்லி விஜி: முதலில் மொத்த குடும்பத்தையும் ஏமாற்றிய வில்லி விஜி, அதன் பின்னர் வள்ளியையும் ராமச்சந்திரனையும் ஏமாற்றினார். வள்ளி விஜிக்கு எதிராக திரும்பிய பின்னர், ராமச்சந்திரனை ஏமாற்றிக் கொண்டு வீட்டுக்குள் இருந்தார். வீராவும் மாறனும் என்னென்னமோ போரடுகிறார்கள், எல்லா போராட்டகாளிலும் விஜி சறுக்கினாலும், வெற்றி என்னமோ விஜிக்குத்தான். எல்லாம் கையில் இருந்தும் ராமச்சந்திரன் குடும்பத்தால் எதுவுமே செய்ய முடியவில்லை.
வீடேறும் விஷம்: இப்படியான நிலையில் வில்லி விஜி கர்ப்பமாக இல்லை எனத் தெரிந்தும், விஜியை வீட்டை விட்டுத் துரத்தினார்கள். ஆனால் வில்லி விஜியோ, ஊர் பஞ்சாயத்தை கூட்டி, ராமச்சந்திரன் வீட்டில் கார்த்தியின் மனைவியாக தனக்கு எல்லா உரிமையும் இருப்பதாக தீர்ப்பை வாங்கிவிட்டார். இப்படி இருக்கும்போது, ஊர் பஞ்சாயத்து தீர்ப்புக்கு கட்டுப்பட்டு, வீட்டுக்குள் வரும் விஷம் விஜியை தடுக்க முடியாமல் மொத்த ராமச்சந்திரன் குடும்பமும் அமைதியாக இருக்கிறார்கள்.

ரசிகர்கள் கேள்வி: குடும்பத்தை தான் அழிக்க வந்துள்ளார் என்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்தே, விஜியை எதுவும் செய்ய முடியாமல் ராமச்சந்திரன் குடும்பம் அமைதியாக நிற்கிறது. இப்போது ரசிகர்களுக்கு உள்ள ஆர்வம் என்னவென்றால், இதன் பின்னர் இந்த சீரியல் எப்படி நகரப் போகிறது என்பதுதான். வெளிவராத உண்மை என்று இனி இந்த சீரியலில் எதுவும் இல்லை, அப்படி இருக்கும்போது இனி இந்த சீரியலில் சுவாரஸ்யமாக என்ன இருக்கப்போகிறது என்ற கேள்விதான். ஆனால் இப்போது ராமச்சந்திரனை பழிவாங்குவேன் என்ற எண்ணத்தில் வில்லி விஜி வீட்டுக்குள் நுழைந்துள்ளதே சுவாராஸ்ய மாகத்தான் உள்ளது.


Click it and Unblock the Notifications











