Veera: ரொம்ப நாளுக்கு அப்பறமா ஒரு நல்ல ப்ரோமோ.. மீண்டும் லவ் ட்ராக் ஓட்டும் வீரா - மாறன்!
சென்னை: நிம்மதியோ நிம்மதி என ரசிகர்கள் கமெண்ட் செக்ஷனில் புலம்பும் அளவுக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலின் ப்ரோமோக்களும் எபிசோட்களும் கடந்த ஒரு மாதமாகவே இருந்தது. நிம்மதியா ஒரு சீன், சந்தோஷமா ஒரு சீன் பார்த்தே பல வருஷமாச்சு என ரசிகர்கள் புலம்பும் நிலைக்கு வந்து விட்டார்கள். இந்நிலையில் இன்று அதாவது ஜூலை 31ஆம் தேதி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்படியான ப்ரோமோவை சீரியலின் டீம் வெளியிட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. இந்த சேனலில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலுக்குப் பின்னர் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்படும் சீரியலாக வீரா சீரியல் உள்ளது. வீரா சீரியல் இன்னும் சில வாரங்களில் முடிந்து விடும் என பலரும் பேசி வந்த நிலையில், சீரியலை வேறு டிராக்கில் மாற்றிக் கொண்டு போய்க்கொண்டு உள்ளார்கள்.

ஏற்கனவே ராமச்சந்திரன் குடும்பத்தை அழிப்பேன் என்ற எண்ணத்தில் வீட்டிற்குள் வந்த வில்லி விஜி இப்போது கையும் களவுமாக சிக்கிக் கொண்டாள். விஜியை வீட்டை விட்டுத் துரத்தினாலும், பஞ்சாயத்தை கூட்டி, மீண்டும் விட்டிறுகுள் வந்துவிட்டார். இப்படி இருக்கும்போது, மொத்த குடும்பத்தையும் எதிர்த்துக் கொண்டு வில்லி விஜி எப்படி அந்த வீட்டில் இருக்கப் போகிறார் என்பது பலருக்கும் கேள்வியாக இருந்தாலும், சீக்கிரம் இந்த வில்லி விஜி சேப்டரை முடிங்கப்பா, சீரியலை பார்க்க பார்க்க கோபமா வருது என ரசிகர்கள் தினமும் கமெண்ட் செக்ஷனில் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.
இன்றைய ப்ரோமோ: இப்படியான நிலையில் இன்று அதாவது ஜூலை 31ஆம் தேதி சீரியல் தரப்பில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டுள்ள ப்ரோமோவுக்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது. அதாவது வீராவின் அண்ணன் பாண்டியின் பெயரை ஆட்டோ ஸ்டாண்டுக்கு வைக்கலாம் என்ற முடிவுடன் வந்துள்ளார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள். இதனால் வீராவும் அவரது குடும்பவும் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளார்கள்.
ரொமான்ஸ்: இது மட்டும் இல்லாமல், வீராவிடம் மாறனோ, மச்சான் பெயரில் செயல்பட போகிற ஆட்டோ ஸ்டாண்டில் பணியாற்றும் அனைவருக்கும் இன்சூரன்ஸ் எடுத்துக் கொடுப்பது, ரத்ததான முகாம் நடத்துவது குறித்து வீராவிடமே பேசுகிறார். மேலும் மச்சான் பெயரில் இருப்பது ஆட்டோ ஸ்டாண்டாக மட்டும் இருக்க கூடாது. மாறாக அது, நற்பணி மன்றமாகவும் இருக்க வேண்டும் என்று கூறுகிறார். இதைக் கேட்டதும் வீராவுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. இத்துடன் முடிகிறது இன்றைய ப்ரோமோ.

ரசிகர்கள் குஷி: இந்த ப்ரோமோவை பார்த்ததும் ரசிகர்களுக்கு குஷியோ குஷி. கமெண்ட் செக்ஷனில் தங்களது மகிழ்ச்சியை மாறி மாறி வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, ரொம்ப நாளுக்குப் பின்னர், வீரா சீரியலில் நல்ல ப்ரோமோ வெளியிட்டுள்ளார்கள். ரொம்ப சந்தோஷமா இருக்கு. வீராவுக்கும் மாறனுக்குமான லவ் ட்ராக் ரொம்பவே நல்லா இருக்கு. டைரக்டர் சார் இந்த லவ் டிராக்கை அப்படியே ஓட்டிக் கொண்டு போங்க சார் எனக் கோரிக்கை எல்லாம் வைத்து வருகிறார்கள். வீரா சிரியலின் ப்ரோமோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











