Veera: வீராவின் அம்மாவை வீட்டை விட்டு துரத்த விஜி போட்ட பிளான்.. மாறன் ரிபோர்ட்டோடு வருவாரா? இன்றைய எபிசோட்!
சென்னை: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியலில் ஒன்று வீரா. பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் இந்த வாரத்தில் இருந்து இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய அதாவது ஜூலை 23ஆம் தேதி எபிசோடில் பல பரபரப்பான சம்பவங்கள் நடைபெறவுள்ளது.
அதாவது ஏற்கனவே மாறன் மற்றும் வீராவும் இணைந்து வில்லி விஜி மீது ஆட்டோவை கொண்டு மோதியதில், விஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, விஜி கர்ப்பமாக உள்ளாரா இல்லையா என்பதை பரிசோதித்து, மருத்துவ ரீதியாக ஆதாரங்களுடன் விஜி கர்ப்பமாக இல்லை என்பதை அம்பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில், இன்று வில்லி விஜிக்கு நலங்கு வைக்கும் விழா ராமச்சந்திரன் வீட்டில் நடைபெறுகிறது. இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து ரிப்போர்ட்டை வாங்கச் செல்கிறார் மாறன். வீட்டில் நலங்கு விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் அடுத்தடுத்து நடைபெறுகிறது. விஜிக்கு உறவினர்கள் அனைவரும் நலங்கு வைக்கிறார்கள். அப்படி இருக்கும் போது, உறவினர் ஒருவர், வீராவின் அம்மாவையும் நலங்கு வைக்கச் சொல்லுகிறார்.
வீராவின் அம்மா: முதலில் மறுக்கும் வீராவின் அம்மா, அதன் பின்னர் வற்புறுத்தலின் பேரில், நலங்கு வைக்க வருகிறார். உடனே வில்லி விஜி, வள்ளியை அழைத்து, வீராவின் அம்மா எனக்கு நலங்கு வைக்க கூடாது. அவர்கள் நல்ல எண்ணத்தோடு நலங்கு வைக்க மாட்டார். இது மட்டும் இல்லாமல், அவர்கள் இங்கு இருக்கக் கூடாது. இந்த இடத்தை விட்டு போக வேண்டும் என எரிச்சலோடு கூறுகிறார். உடனே வள்ளியும் ஏன் வீராவின் அம்மா போக வேண்டும் எனக் கேட்கிறார். அதற்கு வில்லி விஜியோ, இந்த நிகழ்ச்சி எனக்கும் எனது மகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கும் நடக்கும் நிகழ்ச்சி.
விஜி போடும் புதுத் திட்டம்: அப்படி இருக்கும்போது, இந்த நிகழ்ச்சியில் நான் நன்றாகவே இருக்க கூடாது என்ற எண்ணத்தில் இருக்கும் வீராவின் அம்மா எனக்கு நலங்கு வைக்க கூடாது. அவர்களைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலாக உள்ளது என மிகவும் கேவலமாக பேசுகிறார். வில்லி விஜி இப்படி பேச பேசவே வீரா வீட்டிற்குள் வருகிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதுதான் மீதி எபிசோட். இன்றைய எபிசோடில் பல திருப்புமுனைகளும் சுவாரஸ்யமான சீன்களும் இருப்பதால் ரசிகர்கள் இன்றைய எபிசோட்டை மிஸ் செய்ய வேண்டாம். இது மட்டும் இல்லாமல், மாறனும் சரியான நேரத்தில் வீட்டுக்கு ரிப்போர்ட்டுடன் வந்தால் வில்லி விஜியின் நாடகம் மொத்தமாக அரங்கேற்றம் ஆகிவிடும்.


Click it and Unblock the Notifications











