Veera: பொய் கர்ப்பம் நாடகம் போடும் வில்லி.. கோபத்தில் ஆட்டோவை விஜி மேலே ஏற்றிய மாறன்..

சென்னை: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியலில் ஒன்று வீரா. பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் வில்லியாக இருக்கும் விஜி தான் கர்ப்பமாக உள்ளதாக பொய் நாடகம் போட்டு வருகிறார். இந்நிலையில் அவரது பொய் நாடகத்தை அம்பலமாக்க வில்லி விஜி மீது ஆட்டோவைக் கொண்டு மோதுகிறார்.

விஜி மீது நம்பிக்கையாக இருந்தவர் மாறனின் அத்தை வள்ளி. ஆனால் விஜி தனது அம்மா இறந்துவிட்டதாக நாடகம் ஆடியது மட்டும் இல்லாமல், தனது அம்மாவை மறைமுகமாக வீட்டில் தங்க வைத்தது தெரியவந்ததால், விஜி மீது இருந்த பாசமும், நம்பிக்கையும் வள்ளிக்கு போய்விட்டது. தற்போது விஜிக்கு வீட்டில் விஜியின் அம்மாவைத் தவிர வேறு யாருமே ஆதரவுக்கு இல்லை. ராமச்சந்திரனும் அரை மனதுடன் தான் விஜியை ஏற்றுக் கொண்டுள்ளார். கண்மணியும் விஜிக்கு ஆதரவாக இருப்பவர் போல நடித்து வருகிறார்.

Zee Tamil Veera Serial Promo Villi Viji met Accident By Maran Villi Viji Plans To Kill Maran
Photo Credit:

பொய் கர்ப்ப நாடகம்: இந்நிலையில் விஜியின் பொய் கர்ப்பத்தை அம்பலமாக்க, வள்ளி, வீரா, கண்மணி மற்றும் மாறன் என இவர்கள் போடும் திட்டத்தின்படி, விஜியை கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்குள்ள சாமியார் விஜியின் கைகளையும் வயிற்றையும் தொட்டுப் பார்த்து விஜி கர்ப்பமாக இருக்கிறாரா இல்லையா என்பதைச் சொல்லிவிடுவார் என்பதால், கோவிலுக்குப் போகிறோம் என பொய் சொல்லி, அழைத்துச் செல்கிறார்கள். இதை எப்படியே மோப்பம் பிடித்த வில்லி விஜி, தனக்கு மயக்கமாக வருகிறது. வீட்டிற்குப் போகலாம் என நாடகத்தை அரங்கேற்றம் செய்கிறார்.

மாறனின் கோபம்: இப்படி இருக்கும்போது, மயக்கம் வருகிறது என நாடகம் போட்ட விஜி மீது மாறன் வேகமாக ஆட்டோவை ஓட்டி வந்து மோதுகிறார். இதனால் விஜி கீழே விழுந்து அடிபடுகிறது. உடனே விஜியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு சென்றதும் விஜி கர்ப்பமாக உள்ளார். இப்போது அடிபட்டுவிட்டது. விஜிக்கும் குழந்தைக்கும் என்ன ஆச்சுனு பாருங்க டாக்டர் என கூறுகிறார்கள். விஜியை பரிசோதித்துவிட்டு மருத்துவர் அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார். மருத்துவமனை ரிப்போர்ட்டில் விஜி கர்ப்பமாக இல்லை என்பது தெரிய வந்துவிடுகிறது.

Zee Tamil Veera Serial Promo Villi Viji met Accident By Maran Villi Viji Plans To Kill Maran
Photo Credit:

மாறனைக் கொல்ல சதி: ஏற்கனவே செய்து கொண்டிருந்த கர்ப்பத்தை உறவினர்களுக்கு அறிவிக்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இது இப்படி இருக்க, மருத்துவமனையில் இருந்து, வில்லி விஜி கர்ப்பம் இல்லை என்ற ரிப்போர்ட்டை வாங்கிக் கொண்டு வரும் மாறனை வில்லி விஜி கொலை செய்ய ஆட்களை அனுப்புகிறார். அதன் பின்னர் என்ன ஆகிறது என்பதுதான் இந்த வார எபிசோட்களாக இருக்க உள்ளது. இதில் இன்றைய எபிசோடில் வில்லி விஜி மீது மாறன் ஆட்டோவை கொண்டு மோதுகிறார். வீரா சீரியல் மாலை 7.15 மணிக்கு ஒளிபரப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X