Veera: 400 வது எபிசோடில் கால் பதிக்கும் வீரா.. என்ன ஆட்டம் போடுறாங்க பாருங்க.. அடடே.. அருமை போங்க!

சென்னை: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற சீரியல்களில் வீரா சீரியலுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதுவும் வீராவின் தெளிவு, துணிச்சலுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் என்றால், மாறனின் குறும்பு தனத்திற்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரின் ரொமான்ஸ்க்கு என தனி ரசிகர்கள் பட்டாளமும் உள்ளது. இந்நிலையில் இன்றுடன் அதாவது ஆகஸ்ட் 7ஆம் தேதி எபிசோட் உடன் வீரா சீரியல் 400வது எபிசோடை எட்டுகிறது. இதை சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களான வீரா, வள்ளி, விஜி மற்றும் பிருந்தா ஒன்றாக இணைந்து ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்கள்.

கடந்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டில் இருந்து ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வீரா. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இது மட்டும் இல்லாமல் டி.ஆர்.பியிலும் நல்ல இடத்திற்கு அடுத்தடுத்து முன்னேறியது. சீரியலே முடியப் போகிறது என கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியான நிலையி, எனக்கு எண்டே கிடையாதுடா எனக் கூறுவது போல 400வது எபிசோடில் கெத்தாக காலடி எடுத்து வைத்துள்ளது.

Zee Tamil Veera Serial Reach 400th Episode On August 7th Whole Team Celebrations
Photo Credit:

ராமச்சந்திரன் குடும்பம், வீராவின் குடும்பம் என பரபரப்பாகவும் ஜாலியாகவும் சென்று கொண்டு இருந்த இந்த சீரியலில் வில்லி விஜி வந்த பின்னர் சீரியல் விறுவிறுப்பாக மாறினாலும், சில ரசிகர்களுக்கு விஜியை பார்த்தாலே, டிவிக்குள் சென்று அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியது இயக்குநர் சக்திவேலுக்கு கிடைத்த வெற்றி என்றே கூறலாம். இது மட்டும் இல்லாமல், சீரியல் முடிகிறது என்று பலரும் பேசி வந்த போது, திரைக்கதையில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து நகர்த்தியதும் அருமை.

400: இப்போதைக்கு சீரியலில் வில்லி விஜி அம்பலப்பட்டு நிற்கிறார். மொத்த குடும்பமும் வில்லி விஜிக்கு எதிராக உள்ளது. இந்த நேரம் பார்த்து மனம் திருந்திய முன்னாள் வில்லி கண்மணி கர்ப்பமாக இருக்கிறார் என்ற மகிழ்ச்சியான செய்தி மொத்த குடும்பத்தையும் சந்தோஷ வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. சீரியல் 400வது எபிசோடை எட்டியுள்ளது.

Zee Tamil Veera Serial Reach 400th Episode On August 7th Whole Team Celebrations
Photo Credit:

வீடியோ: இந்நிலையில் தலைவன் தலைவி படத்தில் இடம் பெற்றுள்ள பாடலான 'பொட்டல மிட்டாயே' பாடலில் இடம்பெற்றுள்ள இசைக்கு நடனமாடும், வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீரா சீரியல் நடிகை வைஷ்ணவி, லக்‌ஷ்மி உள்ளிட்டோர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்கள். இதைப் பார்த்த ரசிகர்களும் மொத்த வீரா சீரியல் குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் நடன வீடியோவும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X