Veera: ஹலோ வீரா சீரியலா?.. குடும்பத்தையே அலோவ் செய்யுற அந்த ஸ்கேன் சென்டர் எங்க இருக்கு? ரசிகர்கள் கலாய்
சென்னை: சீரியலில் அவ்வப்போது சினிமாவுக்கு இணையான காட்சிகள் எல்லாம் இடம் பெறுவது சகஜம் தான். சில எபிசோட்களை அப்படித்தான் நகர்த்தவும் செய்வார்கள். ஆனாலும் சீரியல் ரசிகர்கள் சேனலை மாற்றாமல் அந்த சீரியலை முழுவதுமாக பார்ப்பார்கள்.
வெள்ளித்திரையில் எதார்த்தத்தை எதிர்பார்க்கும் ரசிகர்கள் சின்னத்திரையில் எதார்த்தத்தை எதிர்பார்க்காமல் இல்லை. ஆனாலும், வெகு சிலரே சின்னத்திரையில் எதார்த்தத்தை எதிர்பார்க்கிறார்கள். சின்னத்திரையிலும் எதார்த்தத்தை மிஞ்சுகிற, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு என யோசிக்க வைக்கும் அளவுக்கு பல காட்சிகள், பல எபிசோடுகள் நகர்த்தப்படுகிறது.

அப்படியான ஒரு காட்சிதான் வீரா சீரியலில் இடம் பெற்றுள்ளது. இன்று அதாவது ஆகஸ்ட் 13ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட எபிசோடில், சீரியலாக இருந்தாலும் நியாயம் வேண்டாமாடா எனக் யோசிக்க வைக்கும் அளவுக்கு ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது. அதாவது வீரா சீரியலில் வீராவின் அக்கா கண்மணி கர்ப்பமாக உள்ளார்.
'
அந்த குடும்பத்தின் முதல் வாரிசை கண்மணி தனது வயிற்றில் சுமக்கிறார். கண்மணியை செக்-அப்பிற்கு ஸ்கேன் சென்டருக்கு செல்கிறார். வழக்கமாகவே செக்-அப்பிற்கு செல்லும் போது கணவன் மனைவி என இருவர் செல்வார்கள், அல்லது கர்ப்பமாக இருப்பவருடன் உதவிக்கு ஒருவர் செல்வார்கள். ஆனால் வீரா சீரியலில் சந்தானம் சொன்னதைப் போல, ஏதோ பிரோ தூக்கச் செல்பவர்களை போல, மொத்த குடும்பமும் செல்கிறது.

அது எல்லாம் ஓ.கே., தமிழ்நாடு முழுவதும் உள்ள ஸ்கேன் சென்டருக்குள் கர்ப்பமாக இருப்பவரின் கணவர்களை அனுமதிக்க மாட்டார்கள். காரணம் அரசாணை அது. ஆணா, பெண்ணா என தெரிந்து கொள்வது சட்டப்படி குற்றம் என்பது எல்லாமே ஸ்கேன் சென்டர்களுக்கு செல்பவர்களுக்கு மட்டும் இல்லாமல், பரவலாக பெரும்பாலானவர்களுக்கு தெரிந்ததுதான்.
இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லையே: அப்படி இருக்கும்போது வீரா சீரியலில் கண்மணியின் கணவர் ராகவன் வருவது மட்டும் இல்லாமல், ராமச்சந்திரனின் மொத்த குடும்பமும் ஸ்கேன் சென்டருக்குள் சென்று குழந்தையை ஸ்கேன் மெஷினில் பார்க்கிறார்கள். முதலில் டாக்டர் அனுமதிக்க மறுக்கிறார். அதன் பின்னர் குடும்பத்தின் முதல் வாரிசு, பார்க்க ஆசையாக உள்ளது என்கு கோரிக்கை வைக்கிறார்கள். அதன் பின்னர் மருத்துவர் அனுமதிக்கிறார்.
இது மாதிரி வேண்டாமே?: ஆனால் எதார்த்தத்தில் இப்படி யரையும் அனுமதிக்க மாட்டார்கள். சீரியலில் இப்படியான காட்சிகளை வைப்பதால், மக்கள் ஸ்கேன் சென்டரில் எங்களையும் உள்ளே விடுங்கள் எனக் கேட்டு, அவர்களை தொல்லை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். சினிமாவை, தொலைக்காட்சி பிரபலங்களை பார்த்து சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் மக்கள், இது போன்ற காட்சிகளால் தவறாக வழி நடத்தப்படலாம். எனவே வீரா சீரியலில் இயக்குநர் இது போன்ற காட்சிகளை தவிர்த்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். இந்த காட்சிகளை பார்த்த சில ரசிகர்கள், " ஹலோ வீரா சீரியலா?.. குடும்பத்தையே அலோவ் செய்யுற அந்த ஸ்கேன் சென்டர் எங்க இருக்கு?" என கிண்டலாக கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











