கம்பி எண்ணும் சந்திரகலா.. குடும்பத்தையே அழிப்பேன் என சவால்.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் நேற்றைய எபிசோடில், சாமுண்டீஸ்வரி வீட்டிற்கு வரும், கை ரேகை நிபுணர்கள் வீட்ல இருக்கும் அனைவரிடமும் கைரேகை பரிசோதனை செய்கின்றனர். இதில், சந்திரகலாவின் கைரேகை ஒத்துப்போவதராக அவர் சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். உடனே மயில்வாகனம், பாத்தீங்களா அத்தை, சின்ன அத்தை என்ன செய்து இருக்காங்கனு, கூட இருந்துக்கிட்டே சொந்த அக்காவிற்கு இப்படி ஒரு துரோகத்தை எப்படி உங்களால் செய்ய முடிகிறது என அடுத்தடுத்து கேள்வி கேட்கிறார்.

உடனே சந்திரகலா, பாத்தியா அக்கா, எல்லாரும் சேர்ந்து என் மேல பழிபோடுங்க, இதுக்குத்தான் நான் கை ரேகை வைக்க மாட்டேன் என்று சொன்னேன். இந்த வீட்டில் யாருக்குமே என்னை பிடிக்காது அதான், இப்படி ஒரு பழியை போட்டு உன்னையும் என்னையும் பிரிக்க பாக்குறாங்க என சொல்கிறாள். உடனே, இது மட்டும் இல்ல அத்தை இன்னோரு வீடியோ ஆதரமும் என்னிடம் இருக்கு என்று சந்திரகலா, ரௌடியின் மனைவியை மிரட்டி நகையை வாங்கும் வீடியோவை போட்டு காட்டுகிறார். மேலும், சிவனாண்டியுடன் கூட்டு சேர்ந்து தான் இவை அனைத்தையும் செய்தார் என்பதை கார்த்திக் நிரூபித்துவிட, ஆத்திரப்படும் சாமுண்டீஸ்வரி, சந்திராவை அடித்து போலீசில் பிடித்து கொடுத்துவிடுகிறாள்.

zee tamil Karthigai Deepam
Photo Credit:

கார்த்திகை தீபம்: இன்றைய எபிசோடில், போலீசார் சந்திரகலாவை கைது செய்து அழைத்து செல்கின்றனர். அப்போது ஊர் மக்கள் அனைவரும், நீயெல்லாம் ஒரு தங்கச்சியா, சொந்த அக்காவிற்கே எப்படி உன்னால் துரோகம் செய்ய முடிஞ்சது என திட்ட சந்திரகலா, எதுவுமே பேச முடியாதபடி ஜீப்பில் ஏறி செல்கிறாள். இதையடுத்து, காவல் நிலையத்திற்கு சந்திரகலாவை சிறையில் அடைக்கின்றனர். வீட்டில் நடந்த அனைத்து அவமானத்தையும் நினைத்துப்பார்த்து ஆத்திரப்படும் சந்திரா, இது எல்லாத்துக்கும் காரணம் அந்த டிரைவர் கார்த்தி தான் என அவன் மீது கோவத்தில் இருக்கிறாள்.

சாவல் விட்ட சந்திரகலா: மறுபக்கம் வீட்டில், கார்த்தியை இந்த வீட்டிற்குள் வரக்கூடாது, என் தங்கை இப்படி செய்வதற்கு காரணமே இந்த கார்த்தி தான், இதுக்கு முன் சந்திராவிற்கு இந்த திருட்டு புத்தி இல்லை. ஆனால், கார்த்திக் இந்த வீட்டிற்குள் வந்த பின் தான் இப்படி ஒரு எண்ணமே அவளுக்கு வந்து இருக்கு, எது எப்படி இருந்தாலும், கார்த்திக் இந்த வீட்டிற்குள் வரக்கூடாது என்று சொல்கிறாள். அப்போது ரேவதி, என்னம்மா மாத்தி, மாத்தி பேசுறீங்க நேத்து என்ன சொன்னீங்க, இந்த நகை கார்த்தி எடுக்கவில்லை என நிரூபித்துவிட்டு வீட்டிற்குள் வரட்டும்னு சொன்னீங்க இப்ப, வரக்கூடாது என்று சொன்ன என்ன அர்த்தம். அவருக்கு இந்த வீட்டில் இடமில்லை என்றால், நானும் வீட்டிற்குள் வரமாட்டேன், அப்படியே அவர் கூடவே சென்றுவிடுவேன் என்று சொல்கிறாள். இதையடுத்து சாமுண்டீஸ்வரி கார்த்தியை வீட்டிற்குள் வர அனுமதிக்கிறாள். இதையடுத்து, கார்த்தி காவல்நிலையத்திற்கு சென்று சந்தி'ரகலா மீது புகார் கொடுக்க சந்திரகலா, டேய் டிரைவர் ரொம்ப சந்தோஷப்படாதே, கூடிய சீக்கிரம் அந்த குடும்பத்தையே அழித்து காட்டுகிறேன் என சவால் விடுகிறாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X