எங்கே இருந்தும்மா இப்படியெல்லாம் பாட்டை புடிக்கிற.. சரிகமப அரசு பள்ளி மாணவியை அதிசயிக்கும் ஃபேன்ஸ்!
சென்னை: ஜீ தமிழில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது சரிகமப நிகழ்ச்சி. தற்போது லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தமாக 26 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில், அடுத்தடுத்த சுற்றுகளில் போட்டியாளர்கள் கவனம் பெற்று வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பாடகர் ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டவர்கள் நடுவர்களாக உள்ள நிலையில், இளம் போட்டியாளர்களை தங்களது வார்த்தைகளால் அவர்கள் தொடர்ந்து ஊக்குவித்து வருவதை பார்க்க முடிகிறது. இந்த நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவி யோகஸ்ரீயின் பாடல் தேர்வுகள் அனைத்து தரப்பினரையும் அசர வைத்து வருகின்றன.

சரிகமப நிகழ்ச்சி: ஜீ தமிழ் சேனலில் நிகழ்ச்சிகள், தொடர்கள் என அனைத்தும் கவனம் பெற்று வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக வெற்றிநடை போட்டு வருகிறது சரிகமப நிகழ்ச்சி. தற்போது லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி டூயட் உள்ளிட்ட பல சுற்றுகளை கடந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நிகழ்ச்சியாக தொடர்ந்து இருந்து வருகிறது. 26 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி வாரந்தோறும் அதிகமான டிஆர்பியையும் பெற்று வருகிறது.
மாஸ் காட்டும் நடுவர்கள்: நிகழ்ச்சியின் நடுவர்களாக பாடகர்கள் ஸ்ரீனிவாஸ், எஸ்பிபி சரண், பாடகிகள் சைந்தவி, ஸ்வேதா மோகன் ஆகியோர் அதிகமான கவனத்தை பெற்று வருகின்றனர். நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க, ரசிகர்கள் கொண்டாட இந்த நிகழ்ச்சியில் ஏராளமான விஷயங்கள் காணப்படுகின்றன. இந்த நிகழ்ச்சியில் திவினேஷ், யோகஸ்ரீ உள்ளிட்ட பல போட்டியாளர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். குறிப்பாக அரசு பள்ளி மாணவியான யோகஸ்ரீ மிகவும் அதிகமான கவனத்தை பெற்று வருகிறார். இவரது பாடல்களின் தேர்வு மிகச்சிறப்பாக அமைந்து வருகிறது. பெரிய பெரிய பாடகர்களே பாடத் திணரும் பாடல்களை தேர்ந்தெடுத்து இவர் பாடி வருகிறார்.
அசரவைக்கும் யோகஸ்ரீ: மேலும் இதுவரை அதிகமான கவனத்தை பெறாத பாடல்களையும் இவர் தேர்வு செய்து, அந்தப் பாடல்களை அதிகமான ரசிகர்கள் அறியும்படி செய்து வருவது அனைத்து தரப்பினரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி வருகிறது. மேலும் முறையான பயிற்சி இல்லாத இவர் தன்னுடைய பாடல்களால் அவற்றிற்கு அதிகமான உணர்வுகளை கொடுத்து வருகிறார். இந்த வாரம் டெடிகேஷன் ரவுண்டிலும் இவரது பாடல் தேர்வு மிகவும் சிறப்பாக அமைந்தது. நடுவர்கள் பாராட்டுக்களுக்கு மத்தியில் தன்னுடைய இந்த உயர்விற்கு தன்னுடைய அப்பாதான் காரணம் என தன்னுடைய நெகிழ்ச்சியை யோகஸ்ரீ பதிவு செய்திருந்தார்,
உணர்ச்சிவசப்பட்ட பெற்றோர்: இதையடுத்து மேடைக்கு வந்த அவரது அப்பா மற்றும் அம்மாவும் உணர்ச்சிவசப்பட்டதை பார்க்க முடிந்தது. தான் தன்னுடைய மகளை முன்னேற்ற வேண்டும் என்று நினைத்த நிலையில், தன்னை தன்னுடைய மகள் முன்னேற்றி விட்டதாக யோகஸ்ரீயின் அப்பா மகளை உச்சி முகர்ந்தார். சாதாரண கிராமத்தில் இருந்து வந்து அனைத்து தரப்பினரையும் வாய் பிளக்க வைத்துள்ளார் யோகஸ்ரீ. முன்னதாக டூயட் சுற்றில் இவரது அரசு பள்ளி ஆசிரியர்கள் மேடையேறி யோகஸ்ரீக்கு பாராட்டு தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











