ஜீ திரை அட்டகாசம்..வெள்ளிக்கிழமை தோறும்.. புத்தம் புதிய திரைப்படங்கள்!

சென்னை : தமிழ் தொலைக்காட்சிகளில் மிகப் பிரபலமான ஒன்றாக இருந்து வரும் ஜீ தமிழ் தற்பொழுது ஜீ திரை என்ற சேனலை அறிமுகப்படுத்தி அதில் மக்களால் ரசிக்கப்பட்ட பல்வேறு புதிய திரைப்படங்களை திரையிட்டு வருகிறது.

பல்வேறு தொலைக்காட்சி தொடர்களையும், கண்கவர் நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கிவரும் ஜீ தமிழ், ஜீ திரையின் வாயிலாக புத்தம் புதிய திரைப்படங்கள் உடன் அனைவரையும் கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் அமேசிங் ஆகஸ்ட் அட்டகாசமாக தமிழ் வெளியான பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்ப உள்ளது என்ற செய்தியை கேட்ட அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஜீ திரை

ஜீ திரை

தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் புது புது திரை களங்களுடன் பல்வேறு படங்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றது. அவ்வாறு வெளியாகும் திரைப்படங்கள் மக்களால் மிகவும் ரசிக்கப்பட்டு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்பொழுது ஜி திரை தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க களத்தில் இறங்கியுள்ளது.

52 வாரங்கள் 52 திரைப்படங்கள்

52 வாரங்கள் 52 திரைப்படங்கள்

ஜீ திரை தற்பொழுது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஆகஸ்ட் மாத கொண்டாட்டமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய திரைப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் 52 வாரங்கள் தொடர்ந்து 52 முத்தான திரைப்படங்களை இடைவிடாமல் ஒளிபரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது.

பஞ்சராக்ஷரம்

பஞ்சராக்ஷரம்

ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில், 2019ஆம் ஆண்டு வெளியான சூப்பர் த்ரில்லர் திரைப்படமான " பஞ்சராக்ஷரம்" ஒளிபரப்பப்படுகிறது, மிகச்சிறந்த திரில்லர் திரைக்கதையை கொண்டு அறிமுக இயக்குனர் பாலாஜி வைரமுத்து இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் சந்தோஷ் பிரதாப், அஸ்வின் ஜெரோம், மது ஷாலினி, சனா அல்தாப் மற்றும் கோகுல் ஆனந்த் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சோழர்கால புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வித்தியாசமான திரில்லர் திரைப்படமான "பஞ்சராக்ஷரம் "வரும் ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி( வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

தனுசு ராசி நேயர்களே

தனுசு ராசி நேயர்களே

தமிழ் சினிமாவில் தற்போது அதிக பெண் ரசிகைகளை கொண்டு வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹரிஷ் கல்யாண், 2019 ஆம் ஆண்டு கலகலப்பான காமெடி காட்சிகளுடன், ரொமான்டிக் காமெடி திரைப்படமாக வெளியாகியிருந்த "தனுசு ராசி நேயர்களே" படம் வெளியாகி அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது. இயக்குனர் சஞ்சய் பாரதி இயக்கியிருந்த இந்த திரைப்படம் ராசியை மையமாக கொண்டு கலகலப்பான காமெடியுடன் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த சூப்பர் ஹிட் திரைப்படம் தற்பொழுது ஜீ திரையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி( வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

எழுமின்

எழுமின்

ஜனங்களின் கலைஞன் விவேக், நடிகை தேவயானி உடன் இணைந்து நடித்து இருந்த "எழுமின்" என்ற சூப்பர்ஹிட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி பலரது பாராட்டுகளையும் பெற்று வந்த நிலையில், இத்திரைப்படம் தற்காப்பு கலைகளை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கு தற்காப்பு கல்வி எவ்வளவு முக்கியம் வாய்ந்தது என ஆணித்தனமாக கூறியிருந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் வி பி விஜி இயக்கியிருந்தார். நடிகர் விவேக் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த திரைப்படம் பலரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளைப் பெற்று வந்த நிலையில் இத்திரைப்படம் ஜீ திரையில் ஆகஸ்ட் 21-ஆம் தேதி( வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்

மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்

தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சரண், அஜித்தை வைத்து அமர்க்களம், காதல் மன்னன், அட்டகாசம் என பல வெற்றித் திரைப்படங்களை கொடுத்திருந்த நிலையில், சமீபத்தில் இவரின் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ், மற்றும் நடிகை ராதிகா சரத்குமார் இருவரும் டான் கதாபாத்திரத்தில் நடித்திருந்த திரைப்படம் "மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்". இந்த திரைப்படத்தில் ஆரோ மற்றும் ராதிகா சரத்குமார் என இருவரும் டான் கதாபாத்திரத்தில் வித்தியாசமான கதைக்களத்தில் மிரட்டி அனைவரையும் ரசிக்க வைத்திருந்தனர். இவ்வாறு கலகலப்பான காட்சிகளுடன் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், தற்பொழுது ஜீ திரையில் ஆகஸ்ட் 28ஆம் தேதி( வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது.

ஆகஸ்ட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை

ஆகஸ்ட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை

இவ்வாறு திரையில் இந்த ஆகஸ்ட் மாதத்தை, அமேசிங் ஆகஸ்ட் அட்டகாசமாக மாற்றிட நான்கு வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்கள் ஒளிபரப்பப்படுகிறது என்பதை அறிந்த பலரும் ஆர்வத்துடன் ஆகஸ்ட் மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் இரவு 7 மணிக்கு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X