அடுத்தடுத்து 3 தொடர்கள்.. அதிரடியில் ஜீ தமிழ்.. உற்சாகத்தில் ரசிகர்கள்!
சென்னை : ஜீ தமிழ் ரசிகர்களை எப்போதும் தன் வசம் இருத்திவைக்க தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சிறப்பான நிகழ்ச்சிகள், புத்தம்புது தொடர்கள் என அந்த சேனலின் அதிரடிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தற்போது 3 புத்தம்புது தொடர்களை ஜீ தமிழ் ஒளிபரப்ப உள்ளது.

ரசிகர்களை கட்டிப்போடும் சேனல்கள்
சேனல்கள் என்றால் அது சன் டிவி, விஜய் டிவி என்ற காலம் மாறிவிட்டது. தற்போது இவர்களுடன் போட்டிப்போட ஜீ தமிழ், கலர்ஸ் என பல சேனல்கள் காணப்படுகின்றன. இவர்கள் அனைவரும் போட்டிப் போட்டுக் கொண்டு நிகழ்ச்சிகள், தொடர்கள் என ரசிகர்களை கட்டிப் போட்டு வருகின்றனர்.

அழுத்தமான கதைக்களங்கள்
அந்த வகையில் ஜீ தமிழ் சேனல் சிறப்பான நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறது. மேலும் மிகவும் அழுத்தமான கதைக்களங்களில் தொடர்களையும் அளித்து வருகிறது. அந்த வகையில் புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட தொடர்கள் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகின்றன.

ஜீ தமிழின் 3 தொடர்கள்
இந்நிலையில் தற்போது புதிய 3 தொடர்கள் குறித்த அறிவிப்பை மேற்கொண்டுள்ளது ஜீ தமிழ். இன்றைய தினம் அமுதாவும் அன்னலஷ்மியும் மற்றும் மாரி என்ற இரண்டு தொடர்கள் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளன. இதில் மாமியார் -மருமகளுக்கான சிறப்பான உறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது அமுதாவும் அன்னலஷ்மியும் தொடர்.

தனுஷ் பட டைட்டில்
இதனிடையே தனுஷ் பட டைட்டிலுடன் மாரி என்ற தொடரும் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது. இந்த இரண்டு தொடர்களையும் ப்ரைம் டைமில் ஒளிபரப்ப உள்ளது ஜீ தமிழ். இந்த இரண்டு தொடர்களுக்கும் சரண்யா, சங்கீதா மற்றும் ஸ்நேகா உள்ளிட்டவர்கள் சிறப்பான பிரமோஷனை அளித்திருந்தனர். இந்த வீடியோ வைரலாகியது.

ஊடக சந்திப்பில் அறிவிப்பு
இந்நிலையில் விரைவில் மீனாக்ஷி பொண்ணுக என்ற புதிய தொடரையும் விரைவில் ஒளிபரப்பவுள்ளது ஜீ தமிழ். ஒரு அம்மா மற்றும் அவரது 3 பெண்களை மையப்படுத்தி இந்த கதை உருவாகியுள்ளது. இந்த 3 தொடர்கள் குறித்த அறிவிப்பு தனது ஊடக சந்திப்பின்போது ஜீ தமிழ் அறிவித்துள்ளது.

வாங்க பார்க்கலாம் -இது நம்ம நேரம்
இந்த சந்திப்பின்போது இந்த தொடர்களின் நடிகர், நடிகைகளும் உடனிருந்தனர். வாங்க பார்க்கலாம் -இது நம்ம நேரம் என்ற தலைப்பில் இந்தத் தொடர்களை ஜீ தமிழ் சேனல் தற்போது பிரபலப்படுத்தியுள்ளது. இந்தத் தொடர்கள் பெண் ரசிகைகளை மட்டுமில்லாமல் ஆண்களையும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











